நுஃமானிசம் : முற்றுப்பெறாத விவாதங்கள் - ஈழக்கவி -

- பேராசிரியர் எம். ஏ. நுஃமானுக்கு 2024இல் வயது 80. அதன் நிமித்தம் எழுதப்பட்ட ஈழக்கவியின் சிறப்புக் கட்டுரை -
நுஃமான் என்ற பெயர் நான் ஏழாம் எட்டாம் வகுப்புகளில் கற்கின்ற காலத்தில் எனக்குள் பதியமாயிற்று. எழுபதுகளின் நடுப்பகுதியில் என்னிரு சகோதரிகளும் கொழும்பு, யாழ் பல்கலைக்கழ கங்களில் பயின்றுக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக விடுமுறையின் போது அவர்கள் வீட்டுக்கு வந்தால் பல்கலைக்கழக சங்கதிகள் பற்றி கதைப்பார்கள். குறிப்பாக குசினியில் வேலை செய்கின்ற பொழுது இலக்கியம் (கவிதை, நாவல்), சினிமா, அரசியல் என்று இன்னோரன்ன விடங்கள் பற்றி விமர்சனப்பூர்வமாக விவாதிப்பார்கள். நான் “ஒரு கண்விடுக்காத ஒரு பூனைக்குட்டியாய்” (நுஃமான் கவி வரி) ஓர் ஓரமாக நின்று இவற்றினை கேட்டுக்கொண்டிருப்பேன். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருந்த என் இளைய சகோதரி (மும்தாஜ் பேகம்) ‘நுஃமான்’ என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதனை அவதானித்திருக்கிறேன். அவரது தமிழ் கற்பிக்கும் நுட்பம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் அவர் தமிழ்பெயர்த்த பலஸ்தீன கவிதைகள் பற்றியும் சிலாகித்து பேசக்கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நுஃமான் என்ற பெயரையும் அவரது புலமைத்துவத்தையும் அறியமுடிந்தது. அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு தவிர்க்க இயலாமையுடன் நுஃமான் அவர்களது எழுத்துக்களை வாசித்துவருகின்றேன். அவரது பிரதிகளை படிப்பது, அவை பற்றி எழுதுவது, அவற்றினை அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்வது என் விருப்புக்குரியதாயிற்று. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் தமிழ் கற்கின்ற மாணாக்கருக்கு (உயர்தரம், பட்டப் படிப்பு) பேராசிரியர் நுஃமான் அவர்களது “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்ற நூலை வாங்க வைத்திருக்கிறேன். நுஃமான் அவர்களது எழுத்துக்களை தொடர்ச்சியாக படிக்கையில் அவை எனக்குள் ஒரு இசமாக/ இயமாக பரிமாணமடைந்து, நுஃமானிசமாக பரிணமித்துநிற்கின்றது. ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) என்ற நேர்காணல் தொகுப்பில் ‘நுஃமானிசத்தை’ அவரது வாக்குமூலமாக நோக்க முடிகின்றது.
ism என்ற ஆங்கிலப் பதம் இயல் அல்லது வாதம் என தமிழ் பெயர்க்கப்படுகிறது. இசம் படைப்பின் மூன்று அம்சங்களான காலம், வெளி, பாத்திரங்கள் (மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டோடிலின் (Aristotle; 384-322 BC) கவிதையியல் (Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது) என்பன ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசுகின்றது. மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் இசங்கள் வேறுபடுகின்றன. உலகெங்கிலும் படைப்புரீதியாகவும் படைப்பு சார்ந்த சித்தாந்தங்கள் ரீதியாகவும் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. மார்க்சிசம், யதார்த்தம், சோஷலிஸ யதார்த்தம், மிகை யதார்த்தம், மாயாஜால யதார்த்தம், இருத்தலியம், ஃபிராய்டியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்’று பலவித கருத்தாக்கங்கள்/ இசங்கள் இலக்கிய உலகைப் பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாக்கியப்படி இருக்கின்றன. இலக்கிய ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படக்கூடிய எல்லா மொழிகளிலும் இந்த மாற்றங்களை உணர்த்தும் பதிவுகள் இருக்கின்றன. தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ்ப் படைப்புலகம் வெளிக்காற்றை சுவாசிக்கவோ மாற்றங்களுக்கு உள்ளாகவோ இல்லை என்று சொல்லிவிட முடியாது என்கிறார் அரவிந்தன். மேலும் அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது. ஆனால் பாதிப்புகள், மாற்றங்கள் எல்லாமே ஒரு சிறிய வட்டத்திற்குள் அல்லது சில சிறிய வட்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது. இந்த வட்டத்தை (அல்லது வட்டங்களை) சேர்ந்தவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பதும் விவாதிப்பதும் (சில சமயம் இந்த விவாதங்கள் சண்டைகளாக மாறுவதும்) படைப்புகளில் இவை ஏற்படுத்தும் தாக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளைச் சென்று அடையவேயில்லை. பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) கொள்கை கவிதை கூறுவது போலத்தான் இருக்கிறது தமிழ்ச் சூழல்.


கீரிமலையிலிருந்து ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒன்றென புறப்பட்டஇ.போ.ச769 லைனில ஒன்று இப்ப யாழ்ப்பாணத்தில தரித்து நிற்குது.அது இனி வெளிக்கிட்டால் சாவகச்சேரி வந்து கொடிகாமம் போகும். பிரிட்டிஷ்காரன் கொடுத்த டபிள் டெக்கர் பஸ். தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் வாழ்ந்து அகிம்சைவழி அரசியல் சூடு பிடித்துப்போய் காற்றின் குளிர்மையில கனவுகள் பூத்த காலமது..



சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது. 

நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நிலைமை முன்புதான். ஆனால், தற்போது நாம் வேறு ஒரு யுகத்தில் வாழ்கின்றோம். முன்னைய யுகம் எப்பொழுது?


கிராமியக் கலை வடிவங்கள் பல்வேறு வகையினவாக தொன்று தொட்டு மக்களிடையே பயின்று வந்துள்ளமை நாம் அறிந்ததே. கூத்து என்னும் பதம் தமிழில் மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றது. திருமூலரின் திருமந்திரத்திலும். திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் இச்சொல்லாடலைக் காணமுடிகின்றது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளன. கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒற்றுமை பேணப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் இடவேறுபாடு காரணமாக பிரதேசத்திற்கான தனித்துவமும் பேணப்படுகின்றது. தமிழால் இணைந்துள்ள நிலைமையை நாம் எல்லாக் கலைகளிலும் காணமுடியும்.

ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.
திருமாவளவன் - வணக்கம் ஆதவன்
சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.

இலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்
சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.




கொடூரமான கொலை ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போது, அந்தக் கொலையாளி மனச்சோர்வால் (depression) பாதிக்கப்பட்டிருந்ததால்தான் அந்தக் கொலை நிகழ்ந்ததெனப் பொதுவில் பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் அதிகமாகக் கேள்விப்படும் ஒரு மனநல ஒழுங்கீனமாக மனச்சோர்வு இருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், மனச்சோர்வு என்பது ஒருவரின் மனநிலையில்/உணர்ச்சிகளில் ஏற்படும் ஓர் ஒழுங்கீனம் ஆகும். அதன்போது, மனச்சோர்வடைந்திருக்கும் நபரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார். மனச்சோர்வைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலையை ஒருவர் அடையும்போது, அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். ஆனால், எழுந்தமானமாக நிகழும் திடீர்க் கொலைகளுக்கு மனச்சோர்வு காரணமாக இருப்பதில்லை. அதேவேளையில், இன்னொரு வகையான மனநல ஒழுங்கீனமாக இருக்கும் schizophrenia (மனப்பிறழ்வு) என்ற நோ ய் இவ்வகையான திடீர் கொலைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் ஒரு மாவட்ட தலைநகரில் உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது இவ்வாண்டு கோவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தாமதமாக திருவாரூரில் செப்டம்பர் மாதம் நடந்தது.. 15 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இந்தியப் படங்களும் இருந்தன

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









