* ஓவியம் - AI
இலக்கியம், அரசியல், விமர்சனம்..
ஆட்டம் சகிக்க முடியவில்லை.
விளக்கமற்ற விமர்சனம்
இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'.
விளக்கமற்ற விமர்சனங்களின் முடிவுகள்
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள்தாம்.
தனிமனிதத் தாக்குதல்கள் புரியும் இவர்களுடன்
தர்க்கிக்க நான் எப்போதுமே தயார்.
தர்க்கிப்பதற்கு எவையுமில்லை இவர்களுக்கு
என்பதை நிரூபிக்க என்னால் முடியும்.
தனிமனிதத் தாக்குதல்களின் ரிஷிமூலம்
எவையென்று எடுத்துரைக்க என்னால் முடியும்.,
என்னால் நாள் முழுவதும்
அவற்றுக்காகத் தர்க்கிக்க முடியும்.
தனிமனிதத் தாக்குதல்களே
இருப்பாகவிருக்கும் இவர்களுடன்
தர்க்கிப்பததால் ஆவதென்ன?
தனிமனித நேரம் விரயம்தான்.
இருந்தாலும்
தர்க்கம் செய்வதற்கு நான் எப்போதுமே
தயார்தான்.
எழுதத் தெரிந்தால் மட்டும் போதாது,
எழுத்தில் சொற் சிலம்பம் ஆடும்
திறமை இருந்தால் மட்டும் போதாது
தர்க்கத்தின் சிறப்புக்கு, திறமைக்கு.
செழுமையான தர்க்கங்களுக்கு.
மார்க்சைக் கூவி அழைப்பார்கள்; கதையளப்பார்கள்.
வர்க்க வித்தியாசம் பார்ப்பார்கள்.
பெரியார் பற்றிப் பிளந்து தள்ளுவார்கள்; பீற்றுவார்கள்.
வர்ண வித்தியாசம் பார்ப்பார்கள்.
பொதுவுடமையே தம் தாரக மந்திரம் என்பார்கள்.
தனியுடமைக்காகக் காலத்தில் மூழ்கிக் கிடப்பார்கள்.
குருடர்கள் இவர்கள்.
ஆனை பார்த்த அந்தகர்கள்.
அத்துடன் நடிப்புச் சுதேசிகளும்தாம்.
https://vngiritharan230.blogspot.com/2025/01/blog-post_59.html#more