அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:
1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வா ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் ஆரம்பக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று கண்டியில் ஏர்ல்ஸ் றீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 30 அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்கலைக்கழக மாண்புமிகு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், புற்றுநோயியல் ஆலோசக நிபுணர்கள், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட 30 அழைப்பாளர்கள் சமுகமளித்திருந்தனர்.
3. அன்றையதினமே, இவ்வறக்கட்டளைக்கென (https://www.cancerwelfarelanka.com/) என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
4.டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளை ஒரு தொண்டு நிறுவனமாகும். அதன் நோக்கங்கள் பின்வருமாறு:
(1) புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பணம் கொடுத்து, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
(2) புற்றுநோயாளிகளின் நோயறிதல், சிகிச்சை மற்றும் முகாமைத்துவ மருத்துவ மையங்களுக்கு நிதியளித்தல்.
(3) புற்றுநோயாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்குதலுக்கான நடமாடும் சேவைகளைப் போன்ற சமூகத்தின் தேவைகளை நோக்கமாகக் கொண்ட சமூக சுகாதார சேவைகளை வழங்குதல்.
(4) நோயாளிகள் சுகாதார சேவைகளைப் பெறக்கூடிய பொது மருத்துவ நிலையங்களுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளை வழங்குதல்
(5) புற்றுநோய்க்கான காரணங்களைக் கண்டறிதல், நோயைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் அத்துடன், அல்லது மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதும், ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடுதலும்.
(6) நோயைக் கண்டறிதல், சிகிச்சை செய்தல் மற்றும் முகாமைத்துவம் மிகச் சிறந்த நடைமுறைகளில் மிகச் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்தல்
(7) நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களுக்கு வழங்குதல்.
(8) அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு, பேராதனை DFCC வங்கியில் 27 பெப்ரவரி 2023 இல் திறக்கப்பட்டது. டாக்டர் நோயல் நடேசன் அவர்கள் ஆரம்பத்தில் 1,500,000.00 ரூபாவை கணக்கின் வைப்பிலிட்டார். அதன் பின்னர், நலன் விரும்பிகள் 684,655.92 ரூபாவை வைப்புச் செய்தனர்.
(9) இந்த அறக்கட்டளையின் மூலம் இற்றைவரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு ( வாய்வழி, கருப்பை, மார்பகம், கணையம், கர்ப்பப்பை, கழுத்து, தொண்டை புற்றுநோய்கள் மற்றும் சர்கோமாக்கள் முதலிய புற்று நோய்களுக்கு ) உதவி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், தாதிகள், பிற அமைப்புகள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில், மருத்துவ அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உதவி பெறும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பயனாளிகளின் விவரம் பின்வருமாறு:
வாய் புற்றுநோயாளிகள் - 7
கருப்பை புற்றுநோயாளிகள் - 4
மார்பகப் புற்றுநோயாளிகள் - 2
சார்க்கோமா நோயாளிகள் - 2
உணவுக் குழாய் புற்றுநோயாளி -- 1
கணைய புற்றுநோயாளி - 1 (Pancreatic cancer patient-1)
கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளி - 1
மொத்தம் 290,112/= ரூபா நிதி அவசியத் தேவைப்பட்ட நோயாளிகளுக்காக, மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் பெறுவதற்கும், பயணம் மற்றும் பரிசோதனைகளுக்காகவும் அளிக்கப்பட்டுள்ளது,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.