1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த உலகத்தை தங்கள் கண்களால் காண்பதை உண்மை தோற்றம் என்று நம்பினார்கள். காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது வேறு, அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால், மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இப்படி, பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக் கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.

சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் உள்ள வேற்றுமை பகுத்தறிவு சார்ந்ததே அன்றி உளநெகிழ்ச்சி சார்ந்ததல்ல. இது ஒரு மனிதனின் உள்ளார்ந்த மனநிலை. சரி, தவறு, நல்லது, கெட்டது போன்ற பாகுபாடுகள் தத்துவமானது பகுத்தறிவுக்கும், அனுபவவாதத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தடுமாறுவதைக் குறிக்கிறது.

காண்டின் தத்துவ அமைப்பு

காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவர் தன்னுடைய ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளிவாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக்கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக்கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

ஹெகல் அதனை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக்கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலைசார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் அமைகின்றது.

Aesthetic என்பது கலை அம்சம் அல்லது கலைத்துவம் (Artistic), அழகுணர்வு ( Sense of Beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத்துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய்நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (எம்.ஏ.நுஃமான்,மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், 1987 : 74 – 83).

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியலின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.

காண்டி தனது தத்துவக் கோடபாட்டை உறுதிப்படுத்தவும் தெளிவுபட விரிவுபடுத்தவும் புதிய கலைச்சொற்களைப் பயன்படுத்தினார். இவரின் சிந்தனை வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் காணலாம்.

1. அக்கால தத்ததுவ ஞானிகளின் வழி வந்து பகுத்தறிவு வாதியாகவே இவர் இருந்தார். அனுபவத்தின் சார்பின்றி அறிவாராய்ச்சியினால் இறுதி உண்மைகளை அடையலாம் என எண்ணினார்.

2. ஆய்வில்லாக் கொள்கை பயனற்றது என்றும் எல்லா அறிவும் அனுபவத்திலிருந்தே தொடங்குகின்றது என்றும் நம்முடைய புலறுணர்ச்சிக்கு அடிப்படையாகவுள்ள அடிநிலை உண்மைப்பொருளின் புறநிலைத் தோற்றத்தின் உண்மையை அறிவினால் அறிய முடியாது என்றும் எண்ணினார்.

3. தனிநிலை அறிவாய்வு, செயல்நிலை அறிவாய்வு, தனிநிலை அறிவாய்வில் கணிதம், பௌதீகம் அடிப்படையில் உண்மையில் என்ன என்பதை அறிவு பெறமுடியும் என்பதையும் செயல்நிலை ஆய்வில் அறிவியல் துறையில் எதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் சமயத்துறையில் நம்பிக்கை வழியாக எதை பார்க்க வேண்டும் என்பதையும் ஆராய்கிறார். அதன் வழியாக “தீர்வை ஆய்வில்” (The Critique of judgement) வாயிலாக அழகியல் கலை, ஆன்மா, ஒப்புமை, நம்பிக்கை, அறிவு போன்ற எண்ணக்கருக்களுக்கு தீர்வு காண முயல்கிறார். சமயக் கொள்கையில் காணப்படும் உண்மைகளை அறிவின் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் Hume இன் பண்டைய மதக் கொள்கை, மூடநம்பிக்கை உணர்ச்சி வழி நிற்றல் இவற்றை மறுக்கின்றார்.

4. வடிவ அமைப்பாகக் கலை ; ஜெர்மன் தத்துவஞானி காண்ட்(1724-1804)டின் அழகியற் கொள்கையின் விளைவு வடிவவியல் என்பார்கள். தீர்ப்புக்கூறலின் மீதான விமர்சனம் என்ற தம்முடைய நூலில், ‘அறிவினை வழங்கவில்லை என்றாலும் இரசனையின் விளைவான மதிப்பீடுகள் பொதுமையானவை’ என்று சொல்கிறார் காண்ட். விருப்புவெறுப்பின்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியை உண்டாக்கும் புலன்சார் உணர்வுப்பொருள்களை நாம் அழகானவை, கலைமதிப்புடையவை என்று சொல்கிறோம். பிறவழிகளில் பெறஇயலாத ஒருவகை மகிழ்ச்சியை அளிப்பதனால் கலைப்பொருட்களைத் தன்னிச்சையான (பிறவற்றைச் சாராத) மதிப்புடையவை என்கிறோம். அழகியல் அனுபவத்தின் மூலப்பொருளை அளிப்பது கற்பனை. புரிந்து கொள்ளும் திறன் வாயிலாக நோக்கும்போது கற்பனை புதிய வடிவத்தை அளிப்பதனால் மகிழ்ச்சியைத் தருகிறது.

காண்ட் அழகியலை மேலைநாட்டு அறிஞர்கள் பலர் வரையறை செய்துள்ளனர். அழகியல் அணுகுமுறைக் கோட்பாட்டில் முன்னோடியாகத் திகழும் இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் “புலனின்பமும் அழகும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது. மனித அங்கீகாரத்தின் மீது உயர்வானதொரு உரிமையும் இதற்கு உண்டு. இந்த அழகை அனுபவிப்பது என்பது இயற்கையையும், இயற்கை வடிவத்திலுள்ள முறையையும் அறிதல் என்பதோடு உறவு கொண்டது” என்கிறார். மேலும், அழகியல் அணுகுமுறை ‘சுயாதிக்கமானது’ (Autonomy) என்பதும் அவர் கருத்தாகும்.

வாழ்க்கை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக ருசிக்கத்தகுந்த ஒரே வகைப் பண்டமல்ல. அவரவருக்குத் தனித்தனியான அனுபவங்களும், ரசனைகளும், விருப்பு வெறுப்புகளும் உண்டு. பலருக்கும் ஒத்த உணர்வுகள் ஏற்பட வழி உண்டெனினும் அவை நீடிக்கும் தன்மை உடையன அல்ல. இங்ஙனமான வாழ்வில் தனிப்பட்ட ஒருவரால் அளிக்கப்பெறும் படைப்பு, பலராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் அல்லது வெறுக்கப்படும் ஒன்றாகவும் கருத வழியுண்டு. இது அழகியல் அனுபவத்தில் இயற்கையாகவும் தவிர்க்க முடியாததாகவும் அமைகிற ஒன்று. இவ்வாறு அமெரிக்கக் கலைக்களஞ்சியம் அழகியல் பற்றி வரையறை செய்கிறது.

அழகியல் பண்புகளைக் குறித்தும் கம்பீரமானவர்களின் உணர்ச்சிகளைக் குறித்தும் அழகு மற்றும் மேன்மைக் குணங்களின் உள்ளார்ந்த தன்மை பற்றியும் விவாதிக்கிறது (1764). அழகியல் கோட்பாட்டிற்கான காண்ட்டின் பங்களிப்பு, தீர்ப்பின் விமர்சனம் 1790 இல் உருவாக்கப்பட்டது. அதில் அவர் "சுவையின் தீர்ப்புகள்" என்ற சாத்தியக்கூறு மற்றும் தர்க்கரீதியான நிலையை ஆராய்கிறார். தீர்ப்பின் விமர்சனத்தின் முதல் முக்கிய பிரிவின் "அழகியல் தீர்ப்பு பற்றிய விமர்சனத்தில்" காண்ட் "அழகியல்" என்ற சொற்றொடரை பயன்படுத்தினார்.அறிஞர் W.H. வால்சு, கூற்றுப்படி இது தற்கால பொருளிலிருந்து வேறுபடுகிறது. இதற்கு முன், தூய நியாயத்தின் விமர்சனத்தில், சுவை, நியாயத் தீர்ப்புகள் மற்றும் அறிவியல் தீர்ப்புகள் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு இடையேயான முதலடிப்படையான வேறுபாடுகளை கண்டறிந்த காண்ட , "அழகியல்" என்ற வார்த்தையை சுவைக்கான விமர்சனத்தைத் தீர்மானித்து, சுவை தீர்ப்புகள் "சட்டங்கள் ஒரு முன்னோடி மூலம் இயங்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

அழகுநோக்கியல் (Aesthetic) (1750-58) என்ற நூலினை எழுதிய A.S.பம்கார்டன் காந்தின் தத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தத்துவ அமைப்புக்கு அழகியல் கோட்பாட்டை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் முதல் தத்துவவாதிகளில் ஒருவராக இருந்தார். அவருடைய தத்துவ கருத்துக்கள் முழுவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த கருத்துக்களைப் பயன்படுத்தி இருந்தார்.

பௌதீகத்தை ஆராய்ந்து ஆதரித்த கான்ட் பௌதீகத்தை அறிவின் மூலம் ஆராய முற்பட்டார். இவரின் தத்துவ அமைப்பு மூன்று கேள்விகளை எழுப்புகின்றன. நான் எதை அறிய இயலும்? நான் என்ன செய்ய வேண்டும்? நான் எதை எதிர்நோக்கலாம் போன்ற இக்கேள்விகளுக்கு விடையளிப்பதாக நூல் அறிவு பற்றிய ஆய்வு, நடைமுறை அறிவு பற்றிய ஆய்வு, தீர்ப்புகள் பற்றிய ஆய்வு ஆகிய மூன்று நூல்களும் விடையளிப்பதாகக் காணப்படுகிறது. கடவுள், ஆன்மா, புறஉலகம் என்பவற்றை நிராகரித்து அறிவாக்கம் செய்யும் மனம் எனும் எந்திரக்கூறுகளையும், அமைப்பையும், செயலையும் ஆராய்கின்றார். எந்திரத்திற்கேற்ப உற்பத்தி அமையும் என்பதை போல மன அமைப்பிற்கேற்பவே அறிவும் அமையும் என்பது இவருடைய கருத்து. அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப்பும் அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும் அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப்பற்றி ஆராய்கின்றது.

உணர்வுகளின் காரணத்தை ஆழமாக அறிவின் மூலம் ஆராய முற்படுகின்றார். கான்ட் தம் தத்துவத்தை ஆழ்நிலைத் தத்துவம் என்கின்றார். புறக்காட்சியின் தோற்றத்தளத்தோடு நில்லாமல் அதனைக் கடந்து சென்று காட்சிகளை ஒருங்கிணைக்கும் விதிகளை ஆராய்கின்றார். புலச்சார்பற்ற இவ்விதிகளின் இயல்பால் அறிவு பொறுமைநிலை பெறுகிறதென்பதைக் காட்டுகின்றார்.

சடப்பொருள் இல்லை ஆன்மா இல்லை என்றதோடு நில்லாமல் அறிவும் இல்லை அறிவியல் தொகுப்புமில்லையென்று பட்டறிவியல்வாதிகள் கூறியது அறிவியல் உலகில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த காண்டை உலுக்கி எழுப்பியது. புலன் கடந்த நுண்பொருள் ஆய்வுகள் பற்றி வெறுப்புக் கொண்டிருந்தார். புலன் கடந்த பொருளியல் துறை ஆழம் காண முடியாத கடல் என்றும் கரைகளோ கலங்கரை விளக்கமோ இல்லாத இருப்பெருங்கடல் என்றும் கூறினார். எண்ணங்களே அறிவுக்கு மூலம் என்பதையும் எண்ணங்களுக்கிடையே எழும் உடன்பாடும் மறுப்பும் அறிவாகிறது என்பதையும் பட்டறிவு வாதிகளின் அணியிலிருந்து ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இவ்வறிவுத் துளிகள் யாவும் பொறுமையற்ற உணர்வுப்பதிவகள் என்பதை காண்ட் ஏற்கவில்லை. வெறும் புலனனுபவம் பொறுமையற்றது. ஆனால் இப்புலனனுபவம் மனதில் அறிநிலையால் ஒழுங்குப்படும் போது பொறுமை நிலை அடைகிறது என்கிறார் காண்ட்.

காண்டின் தீர்வு வகை

இம்மானுவேல் காண்ட் ரொமாண்டிசிசத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். ‘சுய அனுபவவாதத்தின் மூலம் அறியப்படும் அறிவே உண்மையான அறிவு’ என்பது அவரது கொள்கை. எனவே சுயம் போற்றப்பட்டது. மனிதன் கொண்டாடப்பட வேண்டியவன் ஆனான். தன்முனைப்பு (Ego) வணங்கப்பட வேண்டியதாயிற்று. காண்டின் கருத்தை ஷில்லர் என்ற ஜெர்மன் கவி வளர்த்தெடுத்து, ‘கலை மட்டுமே நம்மை வெளிப்படுத்த முடியாததைக் கூட வெளிப்படுத்தும் தன்மைக்குக் கிட்டத்தில் கொண்டு போகிறது. எனவே, கலைஞன் கடவுளுக்குச் சமம்’ என்றார். இதன் விளைவாக கலைஞன் படைப்பாளி ஆனான். கடவுள் படைக்கிறார்; படைப்பாளியும் படைக்கிறான். எனவே படைப்பாளியும் ஒரு கடவுளே’ என்பது ரொமாண்டிசிசத்தின் கோட்பாடு எனலாம். ‘கலைஞன் என்பவன் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியதில்லை; சோம்பலே கலைஞனின் லட்சியம்’ என்றெல்லாம் ரொமாண்டிசிசத்தின் கோட்பாடுகள் நீட்சியடைந்தன.

ஒரு கலைஞன் தான்தோன்றியாக வாழலாம். ஒழுக்கம் மீறலாம். அதற்கான உரிமை அவனுக்கு உண்டு. அவனை அவனது கலைத்திறமைக்காகக் கொண்டாட வேண்டும். என்றெல்லாம் ரொமாண்டிசிசம் தனது கோட்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே போயிற்று. கலைஞனின் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் சுழன்றது. மாபெரும் கலைஞர்களான பீத்தோவன், பைரன், ஷெல்லி போன்றவர்கள் ரொமாண்டிசிசிஸ்டுகள்.

இதுவரை வந்த கருத்தியல்கள் கடவுளைக் கொண்டாடின் அல்லது நிராகரித்தன. ரொமாண்டிசிசமோ கடவுளைப் பொருத்தவரை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்தது. கடவுள் உண்டு, அவருக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் ஒளி வீசும் பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இருண்ட பக்கம் என்று புது விளக்கம் கொடுத்தது.

எண்ணங்களுக்கிடையே எழும் உடன்பாடும் மறுப்பும் தீர்வுகள் ஆகின்றன. தீர்வுகள் அறிவுத்துளியாகின்றன. காண்டின் அழகியல் தீர்பானது மென் உணர்வுடன் சம்பந்தப்பட்டது. நாடகத்தை பொறுத்த வரை subject, object ஆகிய இரு விடயப்பொருள் காணப்படும். பார்வையாளரிடமும் இவ்விருவிடயப்பொருள் உண்டு. இவ்விடயங்களைத்தான் காண்ட தன்னுடைய மெய்யியல் கருத்தியலில் முன்வைக்கின்றார். இதற்கு முன்னிருந்த தத்துவங்களை நிராகரித்தார். காண்ட தன்னடைய அழகியல் தீர்வை முன்வைக்க சில காரண காரியங்களை முன்வைக்க முயல்கின்றார்.

உதாரணமாக சிக்மன் பிறைட்டின் உளவியல் கொள்கையை இவர் முழுமையாக ஏற்கவில்லை. நாடகத்துறையை பொறுத்த வரையில் பிறைட்டின் உளவியல் கொள்கை என்பது அடிப்படையாகும். இருப்பினும் காண்ட் இதை முழுமையாக ஏற்கவில்லை. காண்ட் “அறிகை” நிலை மூலம் அழகியல் இன்பத்தை உணரலாம் என்பதில் நிதானமாக இருத்தல் நம்முடைய சிந்தனை, நடத்தை, பழக்கவழக்கம், எண்ணலைகள், விருப்பு, வெறுப்பு மற்றும் சரி பிழை என்ற முடிவுகள் அறிகை நிலையுடன் சம்மந்தப்பட்டது. அறிகை நிலையில் ஏற்படும் மாற்றம் நம்முடைய சமகால, எதிர்கால மாற்றங்களை ஏற்படுத்தும். ஊதாரணமாக இயோகோ என்ற பாத்திரம் பொய், களவு போன்ற பழக்கவழக்கங்களால் உருவானது. இதற்கு காரணம் அவனுடைய அறிவு நிலையாகும். ஓரு பொருளைப்பார்த்து அல்லதுநாடகத்தில் வரும் பெருங்காட்சி பண்பு சரி பிழை அழகாக உள்ளது என்ற தீர்வின் பின்புலம் என்னவெனில் அது பற்றிய ஒரு எண்ணம் கருத்து ஆசை ஏற்கனவே எம்மிடம் காணப்படுகிறது.

கொள்கை என்பது நம்மையும், நாம் வாழும் உலகையும், பயனுள்ள புதிய வழிகளில் நாம் காண உதவுகிறது. பெற்றோர்களாகவும், ஆசிரியர்களாகவும் நாம் எப்படி நம் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கிறோம் என்பதன்மீதும் அது செல்வாக்குச் செலுத்துகிறது. நாம் எப்படித் தொலைக் காட்சியைப் பயன்படுத்துகிறோம் – எந்தச் செய்திகளை விரும்பிக் கேட்கி றோம், எந்தத் திரைப்படங்களைப் பார்க்கிறோம், எத்தகைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறோம் என்பனவற்றையும் அது பாதிக்கிறது. குடிமக்களாகவும், வாக்காளர்களாகவும், நுகர்வோராகவும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், சமூக, இன, மத, அரசியல், மொழி சார்ந்த விஷயங் களில் நாம் எத்தகைய கருத்துகளைக் கொண்டிருக்கிறோம், இவற்றுக்கு எதிரானவர்களிடம் எப்படி எதிர்வினை புரிகிறோம், நமது சொந்த உள்நோக்கங்கள், பயங்கள், ஆசைகள் போன்ற வற்றையே நாம் எப்படி உணர்ந்தறிந்து அவற்றோடு என்ன செய்கிறோம் என்பவற்றின் மீதான நமது பார்வைகளையெல்லாம் கொள்கை பற்றிய கல்வி பயனுள்ள வழிகளில் மாற்றுகிறது.

மனித உற்பத்திப்பொருள்கள் (இலக்கியம் மட்டுமல்ல, திரைப் படம், இசை, பிற கலைகள், அறிவியல்கள், தொழில்களும் தொழில்நுட்பங் களும் என) எல்லாமே மனித அனுபவங்களிலிருந்து தோன்றியவை என்பது உண்மை. ஆகவே அவை மனித ஆசைகள், முரண்பாடுகள், போராட்டங்கள், சாத்தியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன என்பதும் உண்மை. ஓர் இனமாகவே நாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் விமரிசனம் செய்யவும் கொள்கை நன்கு உதவுகிறது. விமரிசனக்கொள்கை, இம்முயற்சிகளுக்குப் பயன்படும் மிகச்சிறந்த கருவிகளை அளிப்பதன்றி, மேற்சொன்னவாறு புதிய நோக்குகளில் அவற்றைப் பார்க்க உதவுவதன்றி, நாம் எவ்விதம் தர்க்கரீதியாக, படைப்புத் திறனோடு, ஆழ்நோக்குகளோடு சிந்திப்பதற்கும் உதவுகிறது. ஆகவே கொள்கை பற்றிய அறிவு இன்று இன்றியமையாதது.

மேலும் கலைஞனின் அழகியல் பற்றிய தீர்ப்பிலும் கருத்தியலிலும் அவனுடைய சமூக, பொருளாதார, கலாசார குடும்பத்தின் தாக்கம் இருப்பதை காண்ட் ஏற்கவில்லை. அறிகை நிலையானது நேரடியாக தொடர்புபடவில்லை என்பதை ஏற்கிறார். ஊதாரணமாக யதார்த்த நாடகத்தையும் உடற்பொறிமுறை நாடகங்களிலும் அறிகையானது எவ்வாறு மறைமுக தாக்கத்தால் தொடர்புபடுகின்றது என்பதை காண்ட் விளக்குகின்றார். அதாவது யதார்த்த மோடியில் உடற்பொறிமுறைக்கான தாக்கமும் அசைவும் இருக்கும். அதேபோல் உடற்பொறிமுறை நாடகத்தில் யதார்த்த மோடி மறைமுகமாக நாடக மாந்தரிடையே வந்துபோகும். இது நேரடியாக தொடர்புப்படவில்லை என்று காண்ட கூறுகையில் அங்கே மறைமுக அறிகை நிலைத் தொடர்பு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் உடலை பொறிமுறையாகக் கொண்டு ஆற்றுகை செய்யும் நாடகத்தில் Method Acting style இருக்கும் என்பதை காண்ட் ஏற்கிறார். யுதார்த்த நாடகத்தில் உடலை இயக்குதல், பார்த்தல், பேசுதல் உணர்வுகளை வெளிப்படுத்தல் போன்ற நாடக மாந்தரின் ஒவ்வொரு ஆற்றுகை செயற்பாட்டிலும் உடற்பொறியியல் முறை மறைமுகமாக தாக்கஞ் செலுத்தும்.

அத்தடன் மெய்யியலாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் சாதாரண மனிதருக்கும் கருத்தியல் ரீதியான பிரச்சினை என்னவெனில் தொடர்புப்படுத்தலில் ஏற்படும் சிக்கலாகும். எனினும் காண்டினுடைய அழகியல் கொள்கையை பொறுமையாக புலன் கடந்த அடிப்படையில் விளங்கிக் கொள்ள முயற்ச்சிக்கலாம். இருப்பினும் அழகியல் என்பது புலன்கள் ரீதியாகவோ, அனுபவம் ரீதியாகவோ,காரணகாரிய ரீதியில் ஏற்படும் ஒன்றல்ல. அழகியல் என்பது எல்லாவற்றையும் கடந்து புறவயமான மேற்தலத்தில் இருக்கும் ஒன்றாகும். உதாரணமாக மெக்பெத் போரில் வெற்றியீட்டி வரும் காட்சி ஒருவகையான நிகழ்வு எல்லோருக்குமான பொதுவான இன்பம் ஆனால் தனிப்பண்புகள் தனிப்பட்ட சூழல் மற்றும் தனிப்பலன்கள் போன்றன அறிகையுடன் சம்மதப்படவில்லை. ஏனெனில் நாம் ஒரு பழத்தைச் சுவைக்கையில் எமக்குள் ஏற்படும் தனி உணர்வு என்புத புலன்களின் ஊடாக அனுபவிக்கப்படுகிறது. உதாரணமாக சீனாவில் பாம்பு விருப்பத்திற்குரிய உணவாக இருக்கலாம். ஆனால் பலருக்கு அது பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் வெறுக்கத்தக்க ஒரு பிராணி. இந்த வேறுபாடு தொடர்பாடலினூடாக வரும் சுவையாகும். இவ்வாறு அனுபவத்தினூடாக வரும் அழகியலை காண்ட் பிழை என்கிறார்.

அழகியல் சுவை என்பது தனிப்பட்டதும் அல்ல அனுபவத்தினூடாக வருவதம் இல்லை என்கிறார் காண்ட். அழகியல் என்பது நாம் மனிதர் என்பதையும் தாண்டி தமக்குள் ஏற்படும் ஒரு வகை உணர்வாகும். உதாரணமாக அரிஸ்டோட்டிலின் கதாசிஸில் Pடநளரசயடிடநஇ ருnpடநளரசயடிடந ஏற்படுகிறது. நாடகத்தை பார்க்கும் ஒருவர் நாடகக் காட்சிகள் அல்லது கதை, தலைவனின் துன்பச் செயல் அல்லது இன்பம் ஏதோ ஒரு வகையான உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. அந்த உணர்ச்சி வெளியேறுகை வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவு இன்பமாக உள்ளது அல்லது துன்பமாக இருக்கின்றது. எவ்வாறாயினும் ஏதோ ஒரு உணர்வு வெளியேற்றப்படுவதே கதாசிஸ் ஆகும். Tragedy நாடகத்தை பார்க்கையில் கதாஸிஸ் ஏற்படும் இவையிரண்டிலும் இன்பமும் துன்பமும் வெளியேறுகிறது. இங்கே காண்ட்டின் சுவை என்பது தனிப்பட்ட அனுபவஅறிகை நிலையில் விரும்பப்படாத ஒன்று விருப்பத்திற்குரியதாக உள்ளது.

புலன் இன்பத்தால் வரும் அழகியல் இன்பமானது பயனற்றது என்கிறார் காண்ட். உதாரணமாக நுண்கலை பயன்கலையில் நுண்கலை அழகு அவை பற்றியதாகும். இவ்வாறு ஏற்படும் அழகியல் உணர்வுகளால் எவ்வித பயனுமில்லை என்பதையே காண்ட் கூறுகின்றார். உதாரணமாக நாடகம் என்பது பயன்பாட்டிற்குரிய கலையாயினும், சமூக பிரச்சினைகளை பிரதிபலித்த நாடகத்தால் ஏன் சமூக பிரச்சினையை இன்னமும் நிறுத்த முடியவில்லை. இதற்கு காரணம் வெறும் புலன் இன்பத்தால் ஏற்படும் அனுபவம் பயனற்றது. இவ்வாறான உணர்வு மென்ணுணர்வு எனப்படும். ஒருவருக்கு ஒரு கற்பனை தோன்றுகிறது கவிதை தோன்றுகிறது என்றால் அது அறிகையுடன் சம்பந்தப்பட்டதாகும். அதாவது ஒரு நாடகத்தைப் பார்க்கையில் தமக்குள் ஒரு வகையான உணர்வு ஏற்படும். இவ்வுணர்வு மற்றவரின் உணர்விலிருந்து வேறுபடும். இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு நிலையே காண்டின் அழகியல் தீர்ப்பாகும்.

    ஒன்றை நாம் அழகானது என்று கூறும் போது அதனை அவை பற்றிய தீர்ப்பு எனக் காண்ட் குறிப்பிடுகின்றார். நான்கு விதமான பண்புகளை ஒரு அழகியல் தீர்ப்பு கொண்டிருப்பதாக காண்ட் கருதுகின்றார். அவையாவன

1. புறவயத்தன்மை (Disinterestedness)

2. பொறுமைத்தன்மை (universality)

3. இறுதி நோக்கு வடிவம் (The form of Purposiveness )

4. கட்டாயத் தீர்ப்புத் தரும் தன்மை (Necessary Satisfaction)

காண்ட் முன்வைக்கும் இந்த அணுகுமுறையினூடாக ஒரு முடிவுக்கு வர முடியுமெனில் அதுவே அழகியல் தீர்ப்பு என்கிறார். காண்டினுடைய அழகியலை அறிவொளி என்றும் தியானச் செயற்பாட்டுடன் ஒப்பிட்டு நோக்கலாம். ஒரு துறவி முற்றும் துறந்து ஆழ்ந்த தியானத்தில் எவ்வாறான ஒரு பரவச இன்பத்தை அனுபவிக்கின்றாரோ அதேபோல ஒரு கலைஞன் தன்னுடைய படைப்பில் ஆழ்ந்த பரவச மனநிலையில் தன்னை ஈடுபடுத்துவதே அழகியல் இன்பமாகும்.

அழகியல் வரலாற்றில் காண்ட் தான் முதன் முறையாக ஒருங்கிணைந்த அழகியல் பற்றிய ஒரு மெய்ப்பொருளியல் கோட்பாட்டை வழங்கியவராகக் காணப்படுகின்றார். ஏற்கனவே கூறியவாறு காண்ட் புலனின்பம், அனுபவம், அறிகைநிலை, புரிந்துகொள்ளல் என்பவற்றை அவர் முற்றாக ஏற்கவுமில்லை முற்றாக நிராகரிக்கவுமில்லை.

புறவயத்தன்மை

ஒரு அழகியல் தீர்ப்பின் முக்கிய பண்பாக அமைவது புறவயதன்மையாகும். இந்த புறவயத்தன்மையானது (objective) பொருள் சார்ந்தும், அகம் சார்ந்தும் (subject) காணப்படுகிறது. ஒரு பொருளைப் பார்த்து நாம் அழகு, அழகற்றுது என்று தீர்வுக்கு வரக் காரணம் அகம் சார்ந்த அறிகை, கருத்தியல், நம்பிக்கைகள் அனுபவங்கள் மூலமாகும். சுய விருப்பத்தின் அடிப்படையில் புறவயமாக நின்று தீர்ப்பினை எடுக்க முடியாது. ழுடிதநஉவiஎந மீது புறவயமாக நின்று தீர்பை எடுக்கலாம். ஆனால் இது அகவயத்தன்மை இல்லை என்றும் கூறமுடியாது. தனிப்பட்ட உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அழகியல் தீர்ப்புகளை வழங்கும் போது இத்தகைய பண்பு செயல்படுகிறது அழகியல் தீர்ப்பானது சுவை பற்றிய தீர்ப்பாகும். ஆனால் காண்ட் கூறும் சுவை புலன்களால் ஏற்படுவதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புலன்களுக்கு விருந்தளிக்கும் நாடகத்தில் நாம் அகநிலை சார்ந்து மட்டும் நோக்காது எல்லாம் கடந்த மேல் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக மக்பெத் நாடகத்தில் வரும் பெருங்காட்சிப் பண்பானது புலன் சார்ந்தது. சூனியக்காரிகளின் தோற்றம் , காட்சி பின்புலம், நடிப்பு என்றும் பெருங்காட்சி வெறும் கண்ணும் உணர்வும் சம்பந்தப்பட்டதல்ல. அதிலுள்ள அழகியலை புறத்தில் நின்று தீர்ப்பை அனுபவிக்க வேண்டும். சூனியக்காரரிகள், சுடுகாடு அகோரமான முகங்கள் கெட்டவை என்று நாம் முன்கூட்டியே முடிவெடுக்கக் காரணம் அறிகை நிலையாகும். இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு நிலையில் தீர்ப்பை எடுக்க முடியுமெனில் அதுவே அழகியல் தீர்ப்பாகும்.

ஏண்ணக்கரு ரீதியான செயன்முறை அறிகைநிலை தீர்ப்பில் எழுகின்றது. ஆனால் அழகியல் தீர்ப்பில் எண்ணக்கரு ரீதியான செயன்முறை காணப்படுவதில்லை. எண்ணங்களை முழுமையாக கூறமுடியாது. உதாரணமாக நாடகப்பிரதி ஒன்றில் ஆசிரியர் நினைத்தது ஒன்றாகவும் எழுதுகையில் அது வேறு பொருளுடனும் வாசகன் நுகரும்போது இன்னொரு கருத்துடனும் ஆற்றுகை செய்யும் போது பிரதியிலிருந்து மாற்றமடைந்தும் அது பார்வையாளரை சென்றடைகையில் புதிய பொருளையும் தரும். ஆசிரியரின் இறப்பை இங்கே பொருத்திப்பார்க்கலாம். எண்ணங்களுக்கேற்பசெயன்முறையும் மாறுபடும். அழகியல் என்பது அகவயத்தன்மை கொண்டதாகவும் இன்பம் மற்றும் இன்பமற்ற நிலை என்ற உணர்வுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. உதாரணமாக William Shakespeare நாடகங்கள் அகவயத்தன்மையை ஏற்படுத்தும் ஒன்றாகும். இன்பம் இன்பமற்ற நிலை என்பது ஆசிரியரினதும் நுகர்வோரினதும் சொந்த தீர்ப்பாகும். இங்கே அகம் என்பது இன்பம் மற்றும் துன்பம் பற்றிய அறிகை நிலையுடன் சம்மந்தப்பட்டது. இவ்வாறு சம்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக தீர்ப்பு இருக்க வேண்டும் அதேபோல ஒரு டிரெஜடி நாடகத்தைப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அகம் சார்ந்தது. ஈடிபஸ் நாடகத்தை பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் எம்முடைய அகம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் கடந்த ஒன்றாக இருக்க வேண்டும்.

மேலும் காண்டின் அழகியல் தீர்ப்பானது அகவயமானதும் இன்பம் மற்றும் இன்பமற்ற நிலையுடன் சம்பந்தப்பட்டது. இன்பமற்ற விடயம் துன்பம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் துன்பத்தின் பின் இன்பம் இருப்பதை சுட்டுகின்றார் எனலாம் காண்ட். உதாரணமாக அன்றிக்கனி நாடகத்தில் அன்றிக்கனியின் இறுதி மரண ஊர்வலம் ஒரு இன்பமற்ற நிலை. இக்காட்சியை தன்னையறியாமல் பார்க்கும் பார்வையாளனின் உணர்வு எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருப்பதே அழகியல். துன்பத்தை ரசித்த இன்ப உணர்வாகும். நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து வயிறுகுலுங்க சிரிப்பதில் ஏற்படும் துன்ப உணர்வு அதாவது கண்ணீர் வருதல், வயிறு வலித்தல் போன்றன மறைமுக அறிகை நிலையால் ஏற்படும் தீர்ப்பாகும்.

ஏனைய இன்பங்களில் இருந்து அழகியல் இன்பம் வேறுபட்ட தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது என்று கருதும் காண்ட் எவ்வித தனிப்பட்ட நலன்களையும் அடிப்படையாகக் கொள்ளாமல் ஒரு வகை புறவயத்தன்மையுடன் உயர்ந்த திருப்தியினைத் தருவதாக அழகியல் இன்பம் காணப்படுகிறது என்றார். அகவயம் சார்ந்த அழகியலுக்கு அப்பால் முழுமையாக மாறுபட்ட இன்பம் திருப்தி தரக்கூடியது. உதாரணமாக கதாசிஸின் உணர்ச்சி வெளியேறுகை ஒருவிதமான திருப்தியை அளிக்கின்றது. ஆழ்ந்த சிந்தனையால் கிடைக்கும் என அழகியல் இன்பத்தினை காண்ட் கூறுகின்றார். ஆழ்ந்த தியானத்தினால் கிடைக்கும் அறிவொளியைப் போன்றது. எல்லாம் கடந்து ஒன்றுமே இல்லாத நிலை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்ட்டல் ஓவியம்- AI


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்