மானிட விழுமியம் போற்றும் 'பாவனை பேசலன்றி' - கலாநிதி சு. குணேஸ்வரன் -

அறிமுகம்
தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஆசி. கந்தராஜா தனது தொழிலின் நிமிர்த்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டவர். அதன்மூலம் தனது தரிசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகப் பல புதிய களங்களையும் கதைகளையும் ஆசி. கந்தராஜாவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதில் சில கதைகளை இத்தொகுப்பில் காணலாகும்.
தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள், போலிப் பெருமைகள், புதிய களங்களில் கிடைத்த அநுபவங்கள், தனித்துப்போன முதியோரின் வாழ்வில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பு மையமாகக் கொண்டமைந்துள்ளது.
குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள்
தொகுப்பில் உள்ள கதைகளில் அம்மா பையன், அடிவானம் ஆகியவை குடும்பத்தில் ஆண் பெண் குறித்த சிக்கல்களைக் கூறும் கதைகளாக உள்ளன. இக்கதைகளின் ஊடாக மேலைத்தேயக் குடும்பங்களையும் தமிழர் குடும்பங்களையும் இரண்டு புறமும் வைத்து சீர்தூக்கிப் பார்க்கின்றார்.


இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும் ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன். இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது. தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன். எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !? கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.

சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட இராசநாயகம் பாரதி அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி மாலினியின் உறவினரான திரு. எஸ்.பி. சாமி அவர்கள் இருந்தார்கள். இலங்கையில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இரண்டு தடவைகள் எனது நூல்களை வெளியிட்ட போது, திரு. எஸ்.பி. சாமி அவர்கள் ஒருமுறையும், ஞானம் ஆசிரியர் திரு. ஞானம் அவர்கள் ஒருமுறையும் தலைமை தாங்கியிருந்தார்கள். திரு. இராசநாயகம் பாரதி அவர்களும் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.

தொல்காப்பியர் அடிப்படையில் அகத்திணைகள் ஏழாகப் பகுக்கப்படுகின்றன. அகத்தைச் சார்ந்த வாழ்வாக புறம் அமைகின்றது. மக்களின் ஒழுகலாறுகளைக் கூறும் அகம ;ஐந்திணைப்பாடல்களில் இயற்பெயர் சுட்டாமல் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். ஒருவரும் தம் பெயரைச் சுட்டி கூறும் மரபுவழக்கில் இல்லை என்பதை ,



பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
உனது மண்ணில் பூக்கும்











பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









