முன்னுரைசங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதிற்றுப்பத்து
பத்துப் பத்துப் பகுதிகளைக் கொண்ட நூலாதலின் இது 'பதிற்றுப்பத்து' என்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு சேர மன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையின் இந்நூல் பத்துப் பத்துப் பகுதியாகக் கொள்ளத்தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துகளும் 'முதற்பத்து’, ’இரண்டாம் பத்து’ என்று எண்ணால் பெயர் பெற்றுள்ளன. தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றி யாதொரு செய்தியும் அறிய இயலவில்லை ஒவ்வொரு பாட்டும் இறுதியில் துறை. வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தைப் பாடினார் புலவர். அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள் புலவர்க்கு அவர்கள் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இப்பதிகங்கள் ஆசிரியப்பாவில் தொடங்கி, கட்டுரையாக முடிவு பெறுகின்றன. இவை சாசுலங்களில் கனைப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பை உடையன.
சேரநாட்டு வளம்
சேரநாடு பொதுவாகச் சிறந்த வளம் பெற்ற நாடு. இருப்பினும் அந்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலத்துப் பொருளும் ஒருங்கே விளைந்து மலிந்திருந்தது என்பதை இரண்டாம் பத்தில் குமட்டூர்க் கண்ணனார் குறிப்பிடுகின்றார்.
"கடளைவும் கல்லலவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவு அறுபறியா முழவுமிழ் மூதூர்" (பதி. பா.15 )
என்பதில் கடல்படு பொருளும், மலைபடுபொருளும் ஆறு பாயும் முல்லை. மருதம் என்ற நிலங்களில் உண்டாகும் பொருளும் வேறுநாட்டுப் பொருள்களுமாகிய வளம் பல பெறப்படுகிறது என இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நாடு சிறப்பிக்கப்படுகிறது. மேலும் நாள்தோறும் இடையறாது விழாக்கள் நிகழும் முழவு முழங்கும் மூதூர் காணப்படுவது சேரநாட்டிலே தான் என்கிறார் குமட்டூர்க் கண்ணனார்.
வளைக்கை மகளிர் அவலெறிந்த உலக்கையை வாழையில் சேர்த்து. வள்ளைப் பூவைக் கொய்யும் நெல்வயல்கண் பரந்து மேயும் நாரை அவ்வயல்களினின்றும் நீங்கியது. அயிரையாகிய கொழுவிய மீன்களை உண்பவையான கொக்கு முதலிய குருகுகள் வயலருகே நிற்கும் மரங்கள் தோறும் கூடியிருத்தலால் வளையணியாத மிக்க இளம்பெண்கள் வெண்மையான சிறு பறவைகளை ஒப்பித் திரிவர். இதனை.
'அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்* (பதி.பா.3)
என்று குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து சேரநாடு கடல்பொருளாகிய நெய்தல் பொருள்களும். வள்ளை, குருகு, நாரை முதலிய பறவைகள் வயலில் உள்ள மீன்களைப் பிடித்தது என்று கூறுவதிலிருந்து மருத நிலப் பரப்புப் பொருள்களும் காணப்பட்டது என்பதிலிருந்து சேர நாட்டில் நீர் வளமும். நில வளமும் சிறந்து என்பதை அறிய இயலும். காணப்பட்டது
மக்கள் வாழ்க்கை முறை
சேரநாட்டு மக்கள் குற்றமற்ற அறவாழ்க்கை மேற்கொண்டனர் என்பதை ஐந்தாம் கடல்பிற்காட்டிய பாடலில் அந்நாட்டு மக்கள் பிறர்க்குரிய பொருளை குற்றமில்லாத அறிவுடையவர்களாகவும், செம்மையினின்று வழுவாதவர்களாகவும் குற்றொடும் பகுத்துண்டு வாழ்பவர்களாகவும் கூறப்படுகிறார்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது போல நோயற்ற யாக்கையையும் கொண்டிருந்தனர் என்றும், அதனால் பல்வேறு விழாக்களையும் கூத்துக்களையும் நிகழ்த்தினர் என்பதும் பதிற்றுப்பத்தில் காணப்படுகிறது. சேரனின் போர் வெற்றிச் சிறப்பைய பாடுகையில், விழையாதவர்களாகவும்,
"சொரிசுரை கவரு நெய்வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல
நன்னுதல் விறலியர் ஆடும்" (பதி.பா.47)
என்ற பதிற்றுப்பத்துப் பாடலில் பரணர் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாய அமைப்பு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானில் மக்களின் பொதுவகையான பொதுவாழ்வும், நகர மாந்தரின் வாழ்க்கை நிலையும். சூழ்நிலைக்கேற்ற வண்ணம் வெவ்வேறு வகையாக அமைந்திருப்பதைக் காணலாம், நால்வகை வருணத்தாருள் அந்தணர்கள் சேரநாட்டில் வாழ்ந்தமை புலனாகிறது. அந்தணர்களைக் கொண்டு யாகங்களைச் செய்வித்தனர் என்றும் அவர்களுக்கு மானியமாக நிலமும் பொன்னும் தானமாகத் தரப்பட்டதை,
"அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப ( பதி.பா.64:)
என்ற பாடல் மூலமும், அந்தணர்கள் சமூகத்தில் சிறந்த ஒழுக்கம் உடையவராக மதிக்கப்பட்டனர். இவர் வருந்தும்படியான எச்செயலையும் மன்னர்கள் புரிவதில்லை என்பதை,
"பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ" (பதி.பா.63)
என்ற வரியால் அறியலாம். வேற்று நாட்டு மக்களும் சேர நாட்டில் வாழ்ந்தனர்.
உரையா நாவின் படம்புகு மிலேச்சர்" (முல்லை: 65-66)
என்ற முல்லைப் பாட்டுச் செய்தியில் அறிய முடிகிறது. இதேபோன்று பதிற்றப்பத்து இரண்டாம் பத்தில் மிலேச்சர் என்ற யவனர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
"கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானம் கனையின் போகி
ஆரிய அண்ணலை வீட்டி, பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி
இனம் தெரிபல் ஆன்கன்றொடு கொண்டு
மாறா வில்வில் இடும்பில் புறத்து இறுத்து" (பதி.பா.5 )
என்ற பாடல் வரிகளில் ஆரியத் தலைவர்களுக்கும் தமிழக மன்னர்களுக்கும் போர்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்தது என்பதையும். போர்கள் பற்றிய சில குறிப்புகளையும் காணமுடிகிறது. பல்வேறு தொழில் புரிவோர் சேரநாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. பந்தர் என்ற ஊரில் பலரும் புகழும்படியான முத்துக்கள் கிடைத்ததை.
”கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தென்கடன் முத்தமொடு நன்கலம் பெருகுவை”( பதி.பா.67)
என்ற வரிகளிலும், கொடுமணம் என்னும் ஊரில் நல்ல அணிகலன்களுக்குப் பெயர்பெற்று விளங்கியது. அணிகலன்கள் விற்போர் வாழ்ந்தமை புலனாகிறது.
முடிவுரை
சேரநாட்டில் ஐவகை நில வளமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதையும், அந்தணர்கள் வாழ்ந்தனர் என்பதையும், ஆரியர்கள் சேரர்களுடன் போர் புரிந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. மேலும் தென்பகுதி முத்து முதலான அணிகலன்களும் மிகுந்திருந்ததைக் காணும் போது சேரநாடு வளமை மிக்குக் காணப்பட்டது என்பதற்குச் சான்றாகும்.
பார்வை நூல்கள்
புலியூர் கேசிகன், பதிற்றுப்பத்து, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.2010.
ஔவை.சு.துரைசாமி பிள்ளை,சேர மன்னர் வரலாறு, அமிழ்தம் பதிப்பகம், செ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.