முன்னுரைகடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
பெயர்க்காரணம்
முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும் ஆகுவு முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சோ்த்து முருகு (ம் + உ, ர் + உ, க் + உ, முருகு) என்றானதால் இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
வேறு பெயா்கள்
முருகனின் வேறு பெயா்கள் சேயோன் அயிலவன், ஆறுமுகன் முருகன், குமரன், குகள், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, தஞ்சபாணி அல்லது தண்டபாணி, கதிர்காமன், முத்துவேலன், வடிவேலன், மயில்வாகனன், ஆறுபடை வீடுடையோன், வள்ளற்பெருமான், சோடாஸ்கந்தன், முத்தையன், சேந்தன், வசாகன், சுரேஷன், செவ்வேல், கடம்பன், சிவகுமரன், வேலாயுதன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன் போன்ற பல பெயா்களால் வழங்கப்படுகிறார். கொற்றவை சிறுவன் பழையோள் குழவி அறுவா் பயந்த ஆறமா் செல்சன் எனப் பலவாறாக அவ்வழிபாட்டுக் கடவுளான முருகனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆலமா் அசல்வன் அணிசால் மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரவ் பிறந்தோன் என்று பலவாறு வா்ணிக்கின்றன.
செந்நிற கடவுள்
முருகனது உயா்ந்த தன்மைகளைக் குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள் பல முருகனைச் சிவந்த நிறத்தவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. தொல்காப்பியத்தில் சிவந்த நிறமுடைய சேயோனென அழைக்கப்படும். குறுந்தொகை கடவுள் வாழ்த்துப்பாடல் “பவளத்தன்ன செந்நிற மேனியுடையவன்“ எனக் குறிக்கின்றது
முருகனை புணைந்தியற்றா கவின் பெறு வனப்பு” நளினித்துப்பிறவி உணவும், எய்யா நல்லிசை செவ்வேற் சோஎய் என்றும் நெடுவரைக்குறிஞ்சி கிழவன் எனவும் குன்றமா்ந்துறைபவனாகவும் பழமுதிர்சோலை மலை கிழவோனாகவும் இயற்கையோடு இயைந்த ஒரு தனித்தன்மை கொண்டவனாக வணங்கினா். பரிபாடல் காலத்திலும் அருள் முருகனான கடம்பா் செல்வனை செந்நிறங்கொண்ட சேவ்வேளெனச் சிறப்பு செய்தனா். சிலப்பதிகாரத்திலும் காணப்பெறும் இச்சொல்லாட்சியின் வாயலாக முருகனைச் சிவந்த நிறமுடையவனாகக் கொள்ளும் மரபு தமிழகத்தில் இருந்தென்பதை உணர முடிகின்றது. இத்தன்மையானது திடீரெனத் தோன்றியதன்று அக்காலத்திலேயே முருகனைப் பொற்கோட்டு வலந்திரியும் ஞாயிற்றுடன் இணைந்து கண்டு மகிழ்வெய்தினா் பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி வெவ்வெஞ்செல்வன் எனப்பொருநராற்றுப் படையில் சிறப்பிக்கப்பட்ட வள்ளிப் பூநயந்த முருகனை ஞாயிற்றுடன் இணைந்து நக்கீரர் “ உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலா்புகழ் கடற்கண்டாங்கு ஓவற இமைக்குஞ் சேண் விளங்கிவிரொளி” (திருமுருகாற்றுப்படை பாடல் 1-3) எனச் சிறப்பித்துக் கூறுகின்றார்.. இதே தன்மையினைப் பரிபாடலில் கடுவன இளவெயினனாரும், குன்றம் பூதனாரும் முறையே “ஞாயிற்றோர் நிறத்தகை” பரிபாடல் (பா 5, 11-3) மற்றும் விரைமயில் மேல் ஞாயிறு” எனக் குறிப்பிட்டதன் வாயிலாகவும் உணரவியலும் வெண்கூடா் வெல்வேளான விடியல் வானம் போலப் பொலியும் செடியானான முருகனை முகனும் விரிகதிர் முற்றா விரிசுடா் ஒத்தி” என்ற மற்றொரு பரிபாடல் பாடல் அவனுடைய நிறம் காரணமாக முருகனை ஞாயிற்றுடன் ஒப்புமைப்படுத்திக் கூறும் மரபினைப் புலப்படுத்துகின்றன.
ஆதவனைக் கண்டதும் அகன்றிடும் பனியென இறைவனான முருகனைக் கண்டதும் இன்னல்களனைத்தும் மறைந்திடுமென நம்பிக்கையின் விளைவாக “சிறந்தோர் அஞ்சிய சீயருடையயோ னான” வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேய்” ஆன முருகனை தண் தமிழ்ப் பெருமக்கள் சூரியனுடன் ஒப்பிட்டு வணங்கியிருத்தல் வேண்டும் மேலும் அங்க இயக்கங்கள் அனைத்துக்கும் ஆதாரமான அளவிடற்கரிய சக்கியாகத் தனிப்பெரும் சக்தியாய் மக்களைக் காப்பவன் என்ற நோக்கிலும் அவ்வாறு ஒப்புமைப் படுத்தியிருத்தல் வேண்டும். ”மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த தன்றொரு முகம் ” திருமுகாற்றுப்படை (பா 91-93) என்ற வரிகளும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.
விழாக்கள்
சமுதாயக் கூட்டுணர்வுடன் மக்களின் உள்ளுணர்வு எண்ணங்கள் வேண்டுதல்கள் ஆகியவற்றை விழாக்களாக பிரிதிபலிக்கின்றன. வானியல் கோட்டுபாடுகளினடிப்படையில் கோயில்களின் இயக்கங்களுக்கேற்ப நல்ல நாட்களும் நேரங்களும் கணக்கிலிடப்பட்டு விழாக்கள் தொடங்கப்பட்டு இனிது நடத்தி முடிக்கப்படுகின்றன. அமிர்தபட்சம் சுக்கிலபட்சம் என்ற பிரிவுகளுடன் 12 மாதங்கள் 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றினையும் உள்ளடக்கிய சந்திர நாட்காட்டி அமைப்பில் விழாக்காலங்கள் குறிப்பிடப்படுகின்றன.
கார்த்திகை மற்றும் வசாகம் ஆகிய இரு நட்சத்திரங்கள் முருகனுக்கு முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. முருகவழிபாட்டின் சிறப்பம்சங்களுள் இது முக்கியமான ஒன்றாகும். அதேபோல் திதிகளில் ஆறாவது திதியான சஷ்டிதிதி முருகனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது எனவேதான் தமிழ்மாதத்தின் ஒவ்வொரு சஷ்டிநாளிலும் முருகனுக்குச் சிறப்புவழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய சஷ்டியானது முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.
கந்தசஷ்டிவிழா மிகச்சிறப்பாகத் திருச்சீரலைவாயில் ஆறுநாட்கள் கொண்டாடப் பெறுகின்றது. இந்நாளிலும் விரதம் மேற்கொண்டு முருகபக்தா்கள் தம்முடைய வேண்டுதல்களைப் பூர்த்தி செய்யுமாறு முருகனை வேண்டு்வது வழக்கம் நிலவுகின்றது(களவழிநாற்பது பா 17-3) கார்த்திகை நாட்ககளில் முருகன் கோயில்களில் முருகனை விருப்புடன் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் அகல் விளக்குகளால் அலங்கரிப்பதும் ஊா்ப்பொதுமன்றங்களில் சோக்கப்பானை என்ற பெருத்தீ ஆா்ப்பரித்து மகிழ்வதும் சிறப்பம்சாகும்.
வைகாசிமாதம் விசாக நட்சத்திரத்தன்று முருகபக்கர்களால் கொண்டாடப்பெறும் விசாகப் பெருவிழா ஆகும். சிவபெருமானிடத்தினின்று வெளிப்பட்ட ஆறுபொறிகள் அக்னிபகவானால் சரவணப் பொய்கையில் விடப்பட்டன. அவை வைகாசிமாதம் விசாக நட்சத்திரத்தன்று ஆறுகுழந்தைகளாக உருவெடுத்து கார்த்திகைப் பெண்டிர் அறுவரின் கரங்களை அடைந்தன. இந்த நாளை முருகன் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
தை மாதம் தை பூச நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்படும் தைப்பூசம் திருநாள் முருகனுக்குரிய விழாவாகும். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் முருகன் இந்திரனின் மகள் தேவசேனாவைத் திருமணம் செய்து கொண்டதன் நினைவாகப் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது பழநி, திருச்செந்தூா் திருத்தணி ஆகிய இடங்களில் காவடியாட்டத்துடன் சிறப்பாக விழா நடைப்பெறுகிறது. கோலாலம்பூருக்கு அருகிலுள்ள பமாகுகையில் அமைக்கப்பட்டுள்ளள முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்று வழிபாடிசெய்தல் சிறப்பம்சாகும்.(S. Duraiman, Indian Festivals in Malaya P. 15-18) அவ்வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் பறவைக்காவடி மற்றும் நேர்த்திக் கடன்கள் செலுத்தும் முறை முருகன் மீது அங்குள்ள தமிழர்கள் மேற்கொள்ளும் பக்தியைத் தெளிவுறக்காட்டுகின்றன. மேலும் முருக வழிப்பாட்டில் பால்குடம் காவடியாட்டம் முதலியானவை வழிப்பாட்டில் சிறப்பம்சங்களாக உள்ளன. நாக்கில் வேலினைக் குத்திக் கொள்ளல். கன்னப்பகுதிகளில் வேலினைக் குத்திக்கொள்ளல் போன்றவை முருகவழிபாட்டின் தனிப்பண்புகளாக உள்ளன. இன்றும் கடுமையாக விரதமிருந்து கால்நடையாகப் பழநிக்குச் நடந்து சென்று தைப்பூசத் திருநாளன்று தம்முடைய காணிக்கைகளைப் பக்தா்கள் செலுத்துவதும் அதன் பின்னர் மொட்டையடித்துக் கொள்வதும் சிறப்பம்சமாக உள்ளது.
முடிவுரை
முருகனின் புகழ் பரப்பும் பல நூல்கள் தோன்றி இன்று முருக வழிபாடு உயர்நிலை எய்தியுள்ள போது தமிழ்மக்களின் தனித்தன்மை பண்பாடு புலப்படுகிறது. தமிழக வரலாற்றின் தொடக்க காலந்தொட்டுப் பெருமையுடன் தனிப் பண்புகளோடு வளா்சியுற்றிருந்த பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் முருக வழிபாடு வரலாற்று உண்மைகள் காலத்தால் இழிக்க முடியாத விழாவாக உள்ளன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் பண்பின் அடிப்படையில் முருக வழிபாடு தன்னுடைய நெகிழ்வுறு தன்மையினால் ஒத்த நிலையிலுள்ள பல பண்பாட்டுத் தன்மைகளை உள்ளடக்கிக் கொண்டாலும் தனது ஒல்காப் புகழ்தனை இன்றும் கொண்டு விளஙங்குகிறதெனில் அதன் தனிச் சிறப்பு இயல்புகளும் அதன் வழி வழி விழாக்களே காரணமாக விளங்கிகொண்டிருக்கின்றன.
துணை நூற்பட்டியல்
முனைவா் இரா மோகன் பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட் 41- பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை – 600 098
முனைவா் இரா மோகன்-பரிபாடல் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், 41- பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை – 600 098
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.