* ஓவியம் AI
1. ஆரம்பமாகி விட்டது ..
தற்போது ,ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் , சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது . அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...? எதிரியாகி , சார்ப்பாக நின்றதிற்கு அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி விரயமாக சாகிறது வருத்தமாக இருக்கிறது .
உள்ளூர் அரசியல் தலைவர்கள் கலவரங்களில் எல்லை மீறும் ஈழவரசை கட்டுப்படுத்த போட்ட இரகசிய விதையே இந்த ஆயுதம் ஏந்தல் . வன்முறைக்கு வன்முறை தீர்வாவதில்லை என்பதை நிரூபிப்பது போல கோபம் , விரக்தி ..என கொந்தளித்த குறைபாடுடைய ( ஆங்கிலேயக்) கல்வியைக் கற்ற மாணவர்களிற்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை . விடுதலைக் கொள்கையை ஏற்படுத்தியவர்கள் இளைஞர்களில்லை , அவர்களுக்கு அதற்கான புத்திசாலித்தனமும் கிடையாது . இந்த அரசியல் தலைவர்கள் தாம் . . எனவே , கையில் ஆயுதம் கையில் ஏற கட்டுப்பாடின்றி செயல்படத் தொடங்கி விட்டனர் .
அமைப்புகளாக தாமே ஏற்படுத்திக் கொண்ட புதிய விதிமுறைகள் சிலந்திக்கணவாய் கணக்கில் அவர்களையே கவ்விப்பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தன . பேச்சு தடிக்கிற போது கேட்கவில்லையா ... உடனே சூடு . மக்கள் மத்தியில் அமைப்புக்கள் தெரியாமலே இருந்தன . வங்கிக்கொள்ளை நடைபெறுகிற போது பலவித இடையூறுகள் ஏற்பட்டன . மக்கள் சிலசமயம் கொள்ளையர் என கருதி தடுக்க முயன்றனர் . விடுதலைப்போராட்டதிற்கு அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கொண்ட புனிதம் குழப்பித் தள்ளியது . அதனால் , எடுத்த பணத்தை பிரித்து வைத்திருந்த இளைஞர்களில் ஏற்பட்ட சில்லறைச் சந்தேகங்களும் சூட்டில் முடிந்தன . நகர , தரைக்கடினரின் நடமாட்டமும் வேறு அதிகமாக இருந்தன . ஒரு சிக்கலான நிலமை . தோழமை மேலும் சிதறி .... அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன . நேற்றைய நண்பர் இன்று எதிரி .
'மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ' என்ற அவசியத்தை உணர்ந்த பிரதான அமைப்பு தாம் நிகழ்த்திய பல செயல்களுக்கு உரிமை கோரி பிரசுரம் அடித்து வினியோகித்தது . ஈழக்கடினரும் "தேடப்படுகிறார்கள் ' என்ற பட்டியலுடன் பல இளைஞர்களின் பெயர்களுடன் கூடிய புகைப்படங்களை , பெரிய போஸ்டர்களை நகர்களில் ஒட்டின . '' சொந்தமக்களே விடுதலையை எழுதுபவர் . அது வெளியிலிருந்து கிடைப்பதில்லை . வெளி அரசியலின் ஊடுருவல்கள்( நலன்கள் ) , ஈழவரசின் ஏதேச்சாதிகாரம் ...இவற்றின் மத்தியில் பாலஸ்தீனர்களின் அனுபவம் எமக்குத் தேவை '' என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்ட இவர்களின் கருத்து...எல்லாமே சரி தான் ! . ஆனால் , புதியவர்களாக உருவெடுத்தவர்கள் எப்படி அந்த இலக்கை அடையப் போகிறார்கள் ? . மக்களுக்கு அவர்களை ஏற்பதா , தொழுவதா ..? எனத் தெரியவில்லை . எங்களுக்காக போராட வெளிக்கிட்டு விட்டார்கள் ''என்ற மரியாதை இருக்கவே செய்தது .
பல சிறிய தலைவர்கள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் . ஐந்து' பேரியக்கங்கள் ' உருபெற்று அவற்றுக்கிடையில் சூட்டுச்சம்பவங்கள் வலுவாக குறைந்து நடை போடத் தொடங்கின .
'' நலிந்தவர்களாலும் போரிட முடியும் ! '' என்கிற கவி ...
" பார்வையாளராகவிராது பங்காளராக பங்குபற்ற வேண்டும் . பங்கு பற்றினாலே அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும் . அதை கடக்காமல் ... விடுதலையை அடைய முடியாது. ஒவ்வொரு கலவரத்திலும் ஓடிக்கொண்டிராமல் திரும்பி நாம்பன் மாடு போல ஒரு கோபப்பார்வை பார்த்தாலே... மாற்றங்கள் ஏற்படும் . நம்மிலும் ...பலசாலிகள் இருக்கிறார்கள் . போரிலே தப்பிப்பிழைத்து நாமும் படையப்பாவாக மாற முறையான . பயிற்சிகளையும் பெற வேண்டும் . அரசியலும் , ராணுவமும் வீடுதலையின் இரண்டு கண்கள் '' என்றான் . இவன் கிழக்கில் இருந்து வந்தவன் .அங்கே எழுந்த நாகப்படை தான் இவனுக்கு ...நம்பிக்கைப்பொறி . யாழ்பல்கலைகழக மாணவன் .
அவனோட வந்திருந்த பல்கலைப்பெடியள் தெருவில் சிறிய வட்டமாக மக்களை இருத்தி விட்டு பெடியள்கள் ' மண்சுமந்த மேனி ' என்ற கவிதா நிகழ்வை ஒழுங்கை வெளியில் நடத்தினர் . அந்த இடம் ஒரு விளையாட்டு திடல் . அருகில் திருமகள் வாசிகசாலை ஒன்றும் இருந்தது .ஏற்கனவே , அதிலிருந்தவர்கள் , கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கூடி விட்டிருந்தனர் ..ஒழுங்கையில் , மாட்டுவண்டில் , சைக்கிளில் வந்தவர்களும் இறங்கி நின்று பார்த்தார்கள் . பல்கலைப்பெடியள் என்ற மதிப்பு கிராமத்தவர்களிடமிருந்தது . அது முடிய ஊரவர்கள் மாணவர்களுக்கு தேனீரை வரவழைத்து வழங்கினர் . பகலில் இந்நிகழ்வு முடிய , அது ஏற்படுத்திய அதிர்வலைகள் ! , பார்த்தவர்கள் சொல்ல, சொல்ல பல்வேறிடங்களுக்கும் பரவிக் கொண்டு சென்று கொண்டிருந்தது .
மாலையில் இருள்சூழ்கிற போது கருப்பெட்டிபிள்ளையார்கோவில் தேர்முட்டியில் கவியின் சிறு விளக்கக் கூட்டமும் நடைபெற்றது . கலந்துரையாடல் போல் நடந்ததில் கேள்விகள் கேட்க . பதில் அளித்துக் கொண்டிருந்தான் . அப்ப , நடராஜன் " அண்ணே , உங்களுக்கு , எனக்கு ...எல்லாருக்கும் பூஞ்ஜை உடம்பு . எப்படி படையினரோடு போரிட முடியும்? " கேட்டான் . " வேற வழி இல்லை . கல்லையாவது எடுத்து எறிய வேண்டாமா . கொத்து , கொத்தாக செத்துக் கொண்டிருக்கிற பாலஸ்தீன பெடியள் அதைத் தானே செய்தார்கள் . முதலில் , நாம் கோழை இல்லை , மனசுக்கு 'முடியும் ' என்ற தைரியத்தை ஊட்ட வேண்டும் . ரஸ்ய தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்கள் இவற்றைப்பற்றி நிறைய பேசுகின்றன . எடுத்து வாசி !. வாசிக்க , வாசிக்க ...புரியும் '' என்கிறான் .
பிறகும் , கவி , வடமராட்சியின் பல பகுதிகளிற்கும் வந்து விளக்கக் கூட்டங்களை நடத்திருக்கிறான் . ராஜன் ஒன்றையும் தவற விட்டவனில்லை . அவனுக்கு கவியின் எளிமை பிடித்தது . குரல் பிடித்து போகிறது , வலியச் சென்று , சென்று கதைக்க , கதைக்க நட்பு வளர்ந்தது . அவனின் இயக்கம் தாமரை என அறிந்து , அதில் சேர்ரருக்கான விருப்பத்தையும் தெரிவிக்க , அவனோட நெடுக வாரவர் அவ்விடத்து பொறுப்பாளர் என்பது தெரிந்திருக்கவில்லை . அறிமுகப்படுத்தினான் . யாழ்ப்பாணத்திலும் கவியை சந்திக்க முடிந்தது. பஸ்நிலையத்திற்கு அண்மித்த ஒருதேனீர்க்கடை கவியின் சந்திப்பு மையம் என தெரிய வர , வேலை முடிந்த பிறகு அங்கே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான் . அதற்கு அருகில் தான் அவனுடைய வசிபறையும் இருக்க வேண்டும் . கிழமையில் ஓரிரு தடவையாவது சந்திக்க முடிகிறது . இல்லா விட்டாலும் கூட அவன் நண்பன் கிருபாவது நிற்பான் . அல்லது யாராவது தாமரையில் வேலைசெய்ற ஒருத்தரைக் காணலாம் . கவியை விசாரித்து இருந்து கதைக்கலாம் . பெரும்பாலும் அவனுக்கும் ஒரு இலவசதேனீர் கிடைக்கும் . ஓரிரு தடவைகள் அவனும் வாங்கிக் கொடுத்திருக்கிறான் . ஒரு தோழரின் அண்ணர் கடையை நடத்தியதாகப்பட்டது .
2. கதைக்க என்ன இருந்ததா ? . நிறையவே இருந்தன .
யாழ்ப்பாணத்தில் , கப்பல் , வெளிநாடு என சென்று திரும்பி வந்திருக்கும் கட்டுடல் இளைஞர்கள் சுபாஸ்கடையில் அங்க , இங்க வைத்து ஆமிக்காரர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் . அந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திற்குப் புதிது , சனம் சிதறி ஓடும் , தெரிந்தவர் , தெரியாதவர் எல்லாரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் பஸ்கள். எல்லாத்திசைகளிலும் ஓடும் . ஊரடங்கு உத்தரவு வானொலியூடாக பிறப்பிக்கப்பட்டு விடுகிறது . பஸ்சை தவற விடுகிற பெண்பிள்ளைகள் வழியில் எதிபடுற தெரிந்தவர் ,தெரியாதவர் வீடுகளில் நுழைந்து விடுகிறார்கள் . யாழ்ப்பாணத்தில் வானொலி வைத்திருப்பவர்கள் வெகு குறைவு . எண்ணியேவிடலாம் . ராஜனே தணியாததாகம் கேட்க ஜே .பி வீட்டேயே போகிறவன் . பலர் கூடியிருப்பார் . யாழ்ப்பாணம் அமளி , துமளிப்பட்டாலும் கேட்கத் தவறாத ரசிகர்க் கூட்டம் இருக்கிறது . அது நாடகம் போடப்படுற நாட்களில் மட்டுமே கேட்கப்படுகிறது . பிறகு யார் வானொலியை திருகிப் பார்க்கிறார்கள் ? . பெண்தரப்பினரே நெடுக கேட்பவர்கள் . அவர்கள் மூலமே ஊரடங்கு போடப்படுறது அயலில் பரவுகிறது . பரிதாபம் , ஊரடங்கு போடப்பட்டதையே அறியாது திரிந்த சிலர் வீதிகளில் பதுங்கி இருந்த தரைக்(படை)கடினரால் சுடப்பட்டு இறப்பது .
அமைதி பூக்கும் வேளைகளில் விரைவாக தம்பெடியளை சைக்கிளில் அவரவர் ஊர்களிற்கு அனுப்பி பெண்பிள்ளைகள் தம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அறிவிக்கப்படுகிறது . சகோதரர் வந்து ஏற்றிச் செல்லும் வரையில் தம்பிள்ளையைப் போல அரவணைக்கிறது கண்களை குளமாக்கின்றது .. அப்படி தான் அன்றைய யாழ்ப்பாணம் இருந்தது . சில வேளை , ஊரடங்குகள் நீண்டும் கிடந்தன .
கொஞ்ச நாட்கள் பதுங்கிய முயலைப் போல இருந்து விட்டு வீடுகள் வெளிய எட்டிப்பார்க்கும் . மெல்ல மூச்சு விடும் . உயிர் கொள்ளும் . தேனீர் அருந்தி கதைத்து முடிவெடுப்பர் . பிறகு , பெரிய பஸ்நிலையத்திற்கு வரவும் , தெரிந்தவர் வானில் தொற்றி குறைவேலைகளிற்கு செல்லவும் முடிகிறது . வேலை முடிந்து செல்கிற ராஜன் சைக்கிள் பட்டாளத்தில் தொற்றியும் ஊர் திரும்புகிறான் . அரைவாசி தூரம் ..மூட்டு எரிய .உழக்க வேண்டும் . கால்கள் நோகும் . யாழ்நகரில் ஆமிக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்து உயிர்ப்பலிகள் கூடி கடைகள் எரிந்தில் பழையச்சந்தையும் எரிந்து போனது .அந்நாளில் நூலகம் எரிந்து போனது ராஜனுக்கு மட்டுமில்லை பலருக்கும் தெரிந்திருக்கவேயில்லை கோட்டையில் தரைக்கடினர்கள் இருந்தனர் . அதைச் சுற்றிய பாதுகாப்பு வளையம் போன்றிருந்த பகுதியிலே நூலகம் இருந்தது . பலநாட்களாக ஊரடங்கு . போடப்பட்டிருந்தது . முதலே , கோட்டைப் பகுதியை யாருமே சீண்டுவதுமில்லை . நூலகம் எரிந்த நாளாக இருக்க வேண்டும் , வீதியில் பதுங்கியிருந்த தரைக்கடினர்களால் சுடப்பட்டு கவியும் , கிருபாவும் ...பலியாகிப் போயினர் . அந்த செய்தியை உடனேயே அறிந்து விட்டான் . இறப்புச் செய்திகள் விரைவாகவே பரவி விடும் .
செய்தி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே , அங்கே இருந்து வெளியாகிற அந்த ஒரே ஒரு ஈழநாடு பத்திரிகை பிரசுர நிலையத்தையும் தரைக்கடினர் எரித்து விட்டனர் . ராஜனுக்கு செய்திப்பத்திரிக்கையை வாசிக்கிற பழக்கமும் இருக்கவில்லை . நடுத்தரவர்க்கத்திலும் ...அதிகமாக பெரியவர்களே பத்திரிக்கை வாசிப்பவர்கள் . வானொலியில் எரித்தது தணிக்கை செய்யப்பட்டு செய்தி சொல்லப்படவே இல்லை . இரவில் கேட்கிற வெரித்தாஸ் தமிழ்ச்சேவைக்கும் தெரிய வரவில்லை . பிபிசி ஈழவரசோடு கூட்டு சேர்ந்தது . அதிலும் வெளியாகவில்லை . வெளிக்கிறது , பதற்றப்படுறது என்றே காலம் கரைந்து கொண்டிருந்தது . பிறகு , தின்னவேலி தபால் சந்தியில் ...ரக் வீதியில் புரள அதில் வந்த 13 ராணுவக்கடினர்கள் இறக்க வரலாற்றுத்துயரமான ஜூலைக்கலவரமும் கட்டவிழ்த்து விடப்பட்டது . அவன் , பிறகு , முற்றாகவே வேறொரு கிரகத்தில் வாழ்ந்தது போலவே உணர்கிறான். வலிகள் மறக்கப் படுகின்றன .
காவேரியை முதன் முதலில் பார்த்து விக்கித்து நின்றது ராஜனுக்கு ஞாபகம் வந்தது . அவனும் பாண்டியும் புதிதாக எழும்பி முடிந்த வீட்டிற்கு வெள்ளை அடித்துக் ( பூசிக் ) கொண்டிருந்தார்கள் . யாழ் டவுணுக்குள் இருந்த அந்த வீதியில் இருபுறத்திலும் எரியாது தப்பிய கடைத்தொகுதிகள் இருந்தன . வீட்டைக் கட் டுறவர் பயண ஏஜென்ஜிகாரர். ஒரு புடவைக்கடையிலிருந்து வெளிப்பட்டு கலகல என கீச்சுக்குரலில் பேசி சிரித்துக் கொண்டு எதிர்த்தாற்பக்கமிருக்கிற தேனீர்க்கடைக்கு சென்ற பெட்டையள் கூட்டத்தில் பளீரென மின்னியது போல ஒருத்தி அவனின் கவனத்தைக் கவர்ந்தாள் . " இவ்வளவு நாளும் இவளைப் பார்க்கவில்லையே யாரடா இவ? " என்று பாண்டியிடம் சுட்டிக் கேட்டான் . அவள் பேசுவது சங்கீதமாக காற்றில் மிதந்து வந்து காதில் இனித்தது . அவர்கள் அந்த வீட்டில் வெளி வேலை செய்யத் தொடங்கி இரண்டு நாள் தான் ஆகிறது . மிச்சம்படி உள்ளேயே வேலை நடந்தது . இருவரும் மேஸ்திரியல்ல , உதவிக்கூலிகள் . ஆனால் , நாகேந்திரமண்ணை அவர்களுக்கு மேசன் வேலையைகற்றுக் கொடுத்து வாரவர் . நீண்டநாள் பயிற்சி கொடுத்த பிறகு , ஒரு வீட்டிலிருந்து மேஸ்திரி சம்பளம் குடுக்கத் தொடங்குவது அவர் வழக்கம் . அடுத்த வீட்டில் தருவதாக கூறி இருக்கிறார் . ராஜன் வடமராட்சியிலிருக்கிற அவருடைய உறவுக்காரப் பையன் . வர்ணம் தயாரித்து அடிக்கவும் தெரியும் . வர்ணப்பூச்சு வேலையை அவனுக்குத் தான் கொடுப்பார் . துணைக்கு அனுப்புற பாண்டி , அவர் கலயாணம் கட்டிய மல்லிகைக் கிராமத்தில் அயலுக்குள்ள இருப்பவன் .
இவன் வடமராட்சியிலிருந்து வாரவர்களுடன் தொத்தி எப்படியோ யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விடுகிறான் . அங்கே இருக்கிற மேஸ்திரிகளும் அவருமே சேர்ந்தே வீடுகளை ஒப்பந்தத்தில் எடுத்து கூட்டாக வேலைகளை செய்து வாரார்கள் . யாழ்ப்பாணம் சந்திக்கும் மையம் . பாண்டிக்கும் அவனுக்கும் நட்பு படரவே இருவரையும் சேர வேலை செய்ய விட்டு விடுகிறார் . " நீ ஒரு புத்தர் ! எங்கே பார்த்தாய்? , அவள் காவேரியை" என்க , ' இவனும் சுழட்டுறானோ ? ' என ஒருப்பார்வை பார்த்தான் . " பொறாமையைப் பார் . முகத்திலே அப்படியே வழியுதடா " என்று சிரித்தான் . " அவ , எங்க குறிச்சிலே தான் இருக்கிறா . இங்கே மாசக்கணக்காக வேலை பார்க்கிறாள் , . இருந்திட்டு தான் வெளிய வருவாள் , போவாள் " வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு " என்று பாடி விட்டு , " விரும்புறாயா ? " என்று கேட்டான் . " இப்ப தானே நான் பார்க்கிறேன் . அவளைப் பற்றி ஒன்றும் தெரியாதே , நீ சொன்னால் தானே தெரிய வரும் " என்றான் . " விதி கொடியது இருவருக்கும் முடிச்சுப்போட்டு விட்டது " என்று விட்டு" மச்சான் , இனி , முழங்க வைக்க வேண்டியது தான் மிச்சம் " என்று பெலத்துச் சிரித்தான் . அவனும் தம்பி மாதுவும் தான் . எனவே , வீட்டிலே முடிக்க தடை இருக்கப் போவதில்லை .
" அவள் படித்தது எட்டாம் வகுப்புவரைக்கும் . இருந்தாலும் , ஆங்கிலம் , சிங்களம் எல்லாம் பேசுபவள் " என்றான் . வடமராட்சியில் ' வேலை' என்று கொழும்புற்கே படை எடுக்கிறது அவனுக்கு தெரியும் . வவுனியாவில் இருந்தால் ஆங்கிலம் பேச வராது . " கலவரம் வரையில் கொழும்பிலா இருந்தவள் ? " என்று கேட்டான் '' ஓம் '' என்றவன் , ஆச்சரியப்பட்டு '' எப்படியடா ? '' என்றவன் ''அதை விடு , மல்லிகைக் கிராமத்தில் , சிவபுலத்து வாசிகசாலைத்தலைவர் ராமைய்யாவின் ...ஒரு மகள் ...'' என்று பாண்டி தொடங்க . ராஜனுக்கு மல்லிகைக் கிராமப் பெயர் தெரியும் . சிலருக்குத் தான் கதை சொல்லும் கலை இருகிறது . காதல்க்கதை என்றாலும் கூட '' என்ன கதலிக்கதையா? ''என்று ஓடி விடுறது கிடக்கிறது . அவன் மூஞ்சி கதை கேட்கும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு ....
" உடனேயே , காதல் வைபோகத்துக்கு ஓடிப் போய் விட்டாயா? " என நக்கல் அடித்தான் . ''டேய் , எல்லாம் வெல்லலாம் ! , அவள் என்ர பெரியம்மாட மகள் தான் ''என்றான் . இல்லா விட்டால் , அவனுக்கு அவள் சரிதம் எப்படி தெரியப் போகிறது ? . கிராமத்தில் , ' சோசல் லைவ் அதிகம் ' எனப்படுகிறது.... என்னவோ உண்மை தான் ! . ஆனால் , சாதி வேலிக்கப்பால் ...நட்பு மலர்ந்திருந்தாலேயே மற்றய சாதியரைப் பற்றி அதிகமாக தெரிய வாய்ப்யிருக்கிறது . அங்கேயிருக்கிற ஆசிரியர் , தபால்காரர் , அரசகந்தோரில் வேலை செய்பவர் , ' தொண்டர் ' என திரிகிற அரசியல் பையித்தியங்கள்.. தோழர்கள் ...முதலான உள்ளங்களிலே மனிதம் குடி கொண்டிருந்தன . அவர்கள் தாம் கோடுகளை உடைத்து ஒளிவட்டங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் . ஈழத்தமிழரில் சாதியம் இந்தியாவில் நிலவுறது போன்றதுமில்லை .. அதை அறியாது சாதியை ஒழிக்கப் போறேன் என்று கிளம்புறவர் ...பெரும் முட்டாளாக இருப்பார் . ஏனெனில் , அயலிலுள்ள பென்னம் பெரிய நாடு அதன் தாய்நிலம் . அங்கே , சாதியை ஒழிக்காமல் இங்கே ...ஒன்றும் வேகாது . துரஷ்டவசமாக இயற்கைக்கோளாறால் இந்தியாவின் நிலப்பகுதி பிரிந்து தனித்தீவாகி , அங்கே , எழுந்த அரசியல் புனைக்கதைகள் .. வரலாறாகி.... தற்போது ஈழம் அமைதியை இழந்து கிடக்கிறது .
சிறந்த மாணவர் தலைவர் போல ஆளும் தரப்பில் சிலர் எழுந்து 'ஒழுக்கம் ' என்று நேர்மையாக நிர்வாகம் செய்ய முயன்றாலும் கூட 'இனப்பிரச்சனை தீர மாட்டாது' என்று கூறப்படுகிறது . 'புராதன ...பிரச்சனை ஒன்று புரையோடிப் போய் இருப்பது தான் ...! , புத்தர் ,அகிம்ஷையைப் போதித்தார், காந்தியும் அகிம்ஷையை வலியுறுத்தினார் . ஆனால் ,இவர்களின் பேச்சு வெறியுடன் இருப்பவர் காதில் ஏறாது 'என்று சொல்கிறார்கள் .
பழைய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வு , உள்ளூர் அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்ட திமுக சீர்திருத்தங்கள் , ஏன் சிறிமா காலத்தில் , முரண்படாமல் இருக்க எழுந்த வாசிகசாலை , சனசமூக நிலயம் என அவர்களின் சுயத்தை வளர்த்துக் கொள்ள கட்டிய படிகளும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருக்கின்றன . அதனால் , சில குடிமை வேலைகளை தவிர்த்து , தனி வழியில் நடையும் போடுறவர்களும் ஒருபுறம் இருக்கிறார்கள் . இருந்தாலும் , அனைத்து செய்திகளை அறிவதென்பது கோட்டுக்குள்ளே மட்டுபட்டதாகவே கிடக்கிறது . கல்யாணவீடு , செத்தவீடு ...இரண்டும் சாதியில் ஆட்சியுடையவை . அவறிற்கு விதிகள் தளர்த்தப்பட்டு விட்டன . விரும்பினால் அழைக்கலாம் , விடலாம் . ஒதுக்கி வைக்கப்படுறது இல்லை . பாதுகாவல் நிலவுமா ? என்றபதைக் குறித்த பதை ,பதைப்பு காணப்படுகிறது . முற்றாக அணையவில்லை . கிளறினால் தணலைக் காணலாம் . பிரச்சனைகளிற்கு தீர்வுகளையே ஏற்படுத்தலாம் . அவனுக்கும் சாதியத்தை ஒழிக்க முடியாது என்பது தெரியும் . ஆனால் , எந்த காலத்திலும் சாதிப்பிரச்சனையும், ஒரே மாதிரியாக இருந்ததில்லை . நம்மவர்கள் பார்க்கிற பார்வையும் காலத்திற்கு காலம் மாறி , சீர்திருத்தங்கள் புகுந்து ஒரு ஏறி இறங்கும் கோட்டிலே செல்கிறது . நிலவிய கோரம் பல படிகளில் அவிந்து தணிந்தும் விட்டிருக்கிறது . பாதிப்புக்களால் ஏற்பட்டு , (சாதியர்) தம் தொழில்களையே நோக்கிய இழிவுப்பார்வைகளாலும் சாதியம் வாழ்ந்து கொண்டிருந்தது . மாகாணவரசு எழுந்து வாய்ப்புகளை வழங்குற போது இந்நிலமை மெல்ல , மெல்ல கழன்று விடும் . ஆனால் ஈழவரசு , தேர்த்தலையே நடத்த விரும்பாது கால்கள் கொழுவப்பட்டு நிற்கிறது . உரிமை கேட்கிறதையே 'பயங்கரவாதம் 'என்று சாடி சிறையில் அடைக்கிற போது ...வானில் வெள்ளிகள் முளைக்கவில்லை .
எம்முடைய அயலவர் ,வெளியார் ,தங்களது கொடூரமுகத்தை மறைக்கவே சாதியத்தைப் பற்றி பேசுகிறார்கள் . யானைப்பார்த்த குருடர் போல வெளியாரின் விமர்சனங்கள் சரியானதில்லை . .சாதியர் சார்பில் நகரக்கடினரால் சுட்டு ...சாகிறது அல்லது அவர்கள் துவக்கை இரவலாகப் பெற்று...நடைபெறது எல்லாம் மறைக்கப்படுகிறது . அவர்களின் ஊடகங்கள் பிரச்சாரத்திற்காக , வியட்னாமில் போர்க்குற்றங்கள் புரிந்த அமெரிக்கா , ஈழத்தின் போர்க்குற்றங்களைப் பேசுவது போன்று . பாமரப் பார்வையை பெருப்பித்து.. வைக்கின்றன .
ஒருபுறம் , தெருச்சண்டியர்களை , பாதாளக்குழுக்களை வளர்க்கிற அரசின் கை வரிசை இங்கேயும் தந்திரமாக நீள்கிறது . முன்னாள் படைக்கடினர் சண்டியக்குழுக்களை நிர்வகிக்க நிறுத்தப்படுகிறார்கள் . ஈழமும் , எக்கச்சக்கமான மறுபக்கங்களைக் கொண்ட ஒர்' ஈனம் ' பிடித்த அரசு .
வடக்கில் நிலவுற சாதியமைப்பு வேற . கிழற்கில் உள்ளது வேற எனவே , கலப்புமணம் புரிந்தவர்கள் வவுனியா , கிழற்கிற்கு ஓடினார்கள். அங்கே எண்ணெய் ஊற்றப்பட வில்லை . வாழ்வு கிடைத்தது, காலப் போக்கில் பிள்ளை பிறக்க பெற்றோரின் கோபம் கரைந்து விடுகிறது . தென்னிந்திய சினிமாப்படத்தில் நிகழ்வதெல்லாம் ( கொலைப்படலம்) இங்கே நிகழ்வதில்லை . கிழக்கில் , மந்திர தந்திர வழிபாடுகள் காணப்படுகின்றன . அங்கிருப்பவர்கள் மீது காதல் பூத்து மணந்து கொண்டாலும் , இங்கிருப்பவர் 'மருந்து போட்டு மயக்கி முடிக்க வைத்து விட்டார்கள் ' என்று ஒருவித ஆற்றாமையில் கூறுவது வழக்கம் . அங்கிருப்பவரும் தமிழர் . ' அவர்களது வாழ்வியலை அறிய வேண்டும் ' என்ற அவா ஒருபுறம் இருக்கிறது , சேர்ந்திருந்தால் பாதுகாப்பாகவும் , பலமாகவும் இருப்போம் என்பதால் வடக்கும் , கிழக்கும் இணைந்த ஒரு மாகாணவரசாக இருக்கவே விரும்புகிறார்கள் . ''மாகாண அலகுகளின் கூட்டமைப்பு தான் மத்திய அரசு . அந்த அலகு பிரிந்து போக விரும்பினால் கூட பிரிந்து போகலாம் '' என்கிறது ஜனநாயகம் . முதலாளித்துவ ,ஏகாதிபத்திய நாடுகள் அதற்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கின்றன . இன்று உலகம் அரைக்காலனிய நாடுகளாகவே கிடக்கின்றன .
கிழக்கிற்கு சென்று வசித்தவர்கள் ஈழவரசின் ' தரை , ஊர்காவல்க்கடினர்'களினின் இடையூறுகளால் கொலைப்படலத்தைச் சந்தித்துப் பாதிக்கப்பட்டார்கள், இனப்பிரச்சனை ஒன்றே ஒட்டு மொத்த தமிழர் வாழ்வையும் சிதைத்துக் கொண்டிருந்தது . நிலஊழல் வரலாற்றைக் கொண்டிருக்கிற ஈழவரசால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று தோன்றவில்லை . தியறியை பரீட்சிப்பதற்கு பிரக்டிக்கல் இருப்பது அவசியம் . தியறியே இல்லாதது போல மறைத்துக் கொண்டு , 'பிரக்டிக்கலாகவே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப் போறோம் ' என்றால் இடையில் மாயத்திரை ஒன்று விழுந்து நெடுக கிடக்கவே போகிறது .
பொலிஸிற்கு தமிழில் என்ன பெயர், பொருள் ? நகரக்காவலர் ! . அதாவது மாகாணவரசின் , நகரத்தின் படை !. மத்திய அரசிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை . முப்படைகள் மட்டுமே மத்தியவரசிற்குரியவை . ஈழம் ஒரு நாடே இல்லை . அது ஒரு மாகாணமாக தன்னை குறுக்கி . மாகாணவாட்சியையே அமுலாகிறது . எனவே , உலகிலுள்ள பலமான நாடுகளின் ஒரு மாகாணமாக அப்பப்ப தன்னை மாற்றிக் கொள்ளுற பலவீனமும் கொண்டது . எடுப்பார் கைப்பிள்ளை . பல்வேறு அரசியலின் நுழைவுகள் இருப்பதால் , நீதியும் , ஒழுக்கமும் உள்ளே இல்லை . தமிழருடன் சிறிதளவு கூட ஒற்றுமை இல்லை . சண்டித்தனங்களுடன் பேசப்படுற ஒற்றுமை ஒற்றுமையே இல்லை . எல்லாக் குழறுபடிகளுடன் மத்தியவரசு , ஒழுகுவதால் போரை முன்னெடுத்து கொலைகளை புரிந்து கொண்டிருக்கிறது . ' சுதந்திரமாக வாழத் தான் முடியவில்லை ' என சலித்துக் கொண்ட ராஜன் , சுதந்திரமாக காதலிப்போமென காதலியுடன் கனவில் உலாவச் சென்றான் .
3. சிவபுலம்
இயக்கத்தில் ஒரு கல்வி இருக்கிறது . 'சுயவிமர்சனம் செய்தல் ' . பலம் ,பலவீனம் எல்லாவற்றையும் பகவத்கீதை கணக்கில் ஒரே கோட்டில் கொட்டுதல் . துணிந்து கூற வேண்டும் . ஒவ்வொரு பாசறைவகுப்புகளின் முடிவிலும் தோழர்களுக்கு இந்த கண்டம் இருக்கிறது .'சுயவிமர்சனம் ' சொல்லித்தான் முடிக்க வேண்டும். தத்துபித்தென... என்னவோ சொல்லி ஒப்பேற்றி விடுவார்கள் . ராஜனும் , ஒருமுறை மானிப்பாய்யில் 5 நாள் பாசறைவகுப்பில் பங்கு பற்றி இருந்தான் . அதில் , ஒரு தோழர் , ஒரு பெண் பிள்ளையை அவனும் நண்பனும் சேர்ந்து ஒருதலையாய் விரும்பியதை குறிப்பிட்டான் . இயக்கத்தில் சேர்ந்து விட்டதால் நண்பனின் காதல் நிறைவேற உதவியதாக கூறினான் . இவன் உடனடியாக ஆசிரியரிடம் தன் பிரச்சனையைக் கொண்டு சென்றான் . ''கட்டலாம் , நீ தான் உறுதியாய் (விடுதலைப்பால்) நிற்க வேண்டும் '' என்று சிரித்தார் . நந்துவின்கொள்கைப் போல சறுக்கலாகக் கிடந்தது . கிடக்கட்டுமே . உயிரை வேண்டுமானால் விடலாம் . இந்த காதலை விடலேலாது .
விடுதலையை, கட்டமுதலே கனவு காணத் தொடங்கிவிட்டவனாச்சே ! அது , அவனை ஆட்டி படைத்துக் கொண்டு தான் இருக்கிறது ., உடம்பு முழுதும் நஞ்சேறிய ஈழவரசு தூங்க விட்டால் தானே , இவளும் வேண்டும் , அவளும் வேண்டும் . இரண்டுமே பிச்சுப்பிணைந்து போய் கிடந்தன . சிவபுலத்தில் இயக்கத்தில் சேர்ந்தவர் இல்லையென்றே சொல்லி விடலாம் . அதைப்பற்றியும் அறிந்திருக்கவில்லை . வேலை , கோயில் திருவிழா , சினிமா , மற்றது காதல்... இவையே இவர்களின் பொழுதுபோக்கு . சலீம்க்கு புது ஆடைகளை அணிந்து நடிகர் போல ஸ்டைலாக வலம் வருதலில் ரசனை இருந்தது .
.அப்புலத்திலே அன்டனின் குடும்பம் மட்டுமே கத்தோலிக்கர் . வேற யாருமிருக்கவில்லை . காவேரி , நீர்கொழும்பில் இருந்த போது கத்தோலிக்க தேவாலயத்திற்கு சினேகிதிகளுடன் சனி,ஞாயிறுகளில் போய் வருகிற போது அவளை தேவாலயத்தில் இருந்த பல்வர்ணசிலைகள் கண்ணைக் கவர்ந்தது . பைபிளை வாசிக்க முதலே குடும்பச் சித்திரம் மனதில் பதிந்து போயிருந்தது . அவற்றை நெடுகப் பார்ப்பதில் அவளுக்கு ஒர் பிரியம். அவளுடையப் பிரியதை பார்த்த மாமா '' இங்கே எல்லாரும் எல்லாக்கோவிலுக்கும் போய் வாரவர்கள் . ஞானஸ்தானம் எதும் ஏடுத்திடாதே புள்ள . உங்க அப்பா விரும்ப மாட்டார் '' என்று மறித்திருந்தார் . அவள் ரோஸ்மேரியாகவில்லை . வெறும் காவேரியாகவே அவளை கலவரம் மூட்டைக்கட்டி கிராமத்திற்கு அனுப்பியது . கிராமத்திலேயே , மற்றய கிருஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது . அதைச் சார்ந்த கணிசமான குடும்பங்கள் சூழ இருத்தன . கத்தோலிக்க தேவாலயம் இருக்கவில்லை .
அவனுடைய கல்யாணம் , பாண்டி மூலமாக ஆறுமாசத்தில் டும் ,டும் ! சிவபுலத்திலே , சிவன் , உமை வீற்றிருந்த கொட்டிலிலே, பூசாரி செல்லைய்யா பூஜைத்தட்டை நீட்ட அதிலிருந்த தாலியை எடுத்துக் கட்ட சிறப்பாக நடந்தேறிது . பிறகு ,விடுதலைபால்... உறுதி ஆட்டம் காணவே செய்தது . வெளிக்காட்டிக் கொள்ளவில்லை .
அவனையே இயக்கமும் கிராமத்திற்கு பொறுப்பாளராக நியமித்து விட்டது . முதலில் , பாண்டியைச் சேர்த்துக் கொண்டான் . மால்லிகையில் பரந்திருந்த அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள் . அச்சமயம் , இங்கே , தொழினுட்பக்கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த நவீனை பஸ் நிறுத்ததில் நிற்பதைப் அடிக்கடி பார்ப்பான் . ஒரு முறுவல் மலரும் . ராஜன் அவ்விடத்து இயக்கதலை என்பது அவனுக்கு தெரியாது . யார் , யாரையோ கேட்டு சிவபுல வாசிகசாலைக்கு வந்து சேர்ந்த போது ' இவன்' எனத் தெரிய வர நவீனுக்கு சிரிப்பே வந்தது . வழியில் பார்த்த காவேரி அவனைப் பார்த்து சிரித்திருந்தாள் . அந்த அதுவும் மரமண்டைக்கு ஏறவில்லை . பிறகு , அவள் "நவீன் என்னோட படித்தவர் '' என்று கூறிய போது ராஜனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது . அதை நவீனிடம் தெரிவிக்க " கிராமங்களில் , தலையைக் குனிந்து கொண்டு படிக்கிறவர்கள் பெட்டைகள் அல்ல , பெடியள் தான் " என்று ...கூற இருவரும் சிரித்தார்கள் . பொதுவாகவே கிராமத்துப்பள்ளிகளெல்லாம் இருபாலர் படிக்கிறவையே . கிராமத்திலே சடங்கு , சம்பிராயம் எல்லாம் ஒலிபெருக்கிகள் கட்டி கிரமமாக எளிமையாக நடப்பவை . செலவுகளை , ' மொய் ' என அளித்து அவ்விடத்து சாதிவமூலங்கள் பெருமளவில் உதவிகள் செய்து குறைத்து விடுவதால் ஆடம்பரம் என்று கூற முடியாது . ( சிலபகுதிகளில்) ‘மொய்’ எழுதுவதற்காயே 3 , 4 நாள்கள் திருவிழா போல நடைபெறும் . அது பெருமளவு சமாளிக்க உதவுகிறது . வாழ்க்கைக்கு தீர்வளிக்காத கல்வியின் குறைப்பாட்டை இச்சடங்குகளே பூர்த்தி செய்கின்றன .
நகர்புறத்திலே பள்ளிகள் தனிபால் என தனித் , தனியாக இருப்பதாலே ...சுழட்டுதல் , குற்றம் எல்லாம் நடைபெறுகின்றன . கிராமத்து ஆசிரியர்கள் மட்டும் பெண்பிள்ளைகளை மட்டும் அவமதிக்காது ...'' படிப்பு ஏறாது என மூளையை சலவை செய்யாது , 'சனியன் , மூதேசி 'என்று திட்டுவதை விட்டு பொன்விலங்கு நாவலில் வருகிற ' சத்தியமூர்த்தி ஆசிரியரைப் போல கற்பித்திருந்தால் குட்டி வயசிலிருந்தே நட்பாக பழகிறது , வளர்ச்சி என நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் '' என்று நவீனுக்குத் தோன்றியது .
உண்மையில் , பெண்ணின் பாத்திரம் என்ன ? சமுதாயக் கோடுகள் போடப்பட்டிருந்தாலும் அழகிகள் . பெடியள்களைப் போலவே தமக்கிடையே நிலவும் வகிபாகம் புரியாதவர்கள் . காவேரி 'கொழும்புவாசி'யாக இருந்தது நவீனுக்குத் தெரியாது . கேட்க அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது . பிரசுரம் விற்க , நிதித்திரட்ட ...திரிந்த போது இவனோட படித்த மற்றைய பெண்பிள்ளைகள் ,சாதிய இழைகளை மீறி தமது தம்பி , அண்ணைமாருக்குச் சொல்லியும் உதவியாக நின்றதைப் பார்த்த போது இருவருக்கும் ஆச்சரியம் தான் . வெளியில் , அவர்கள் தாம் தம்வகுப்பினரை முதலில் தோழர்களாகப் பார்த்தவர்கள் .
. எல்லா சாதிகளிலிருந்தும் திரண்ட தோழர்களிடம் காலகதியில் எல்லா இழைகளுமே கழன்று கொண்டிருந்தன . கல்யாணமும் , செத்தவீடுகளுமே சாதியத்தின் கண்கள் . இவர்களுக்கு இல்லற வாழ்க்கையே அமையப் போறது சந்தேகம் என்பதால் எல்லோருக்கும் சகோதரர்களாகி விட்டார்கள் . விரிந்து செல்லும் உறவு யானைப்பலமாகி நாளை ஒரு நாள் நிச்சியமாக விடுதலையை வென்றெடுக்கும் !.... சிறகடிக்கின்றன .
சாதியம் களைதல் பற்றி தமிழர்களே பேச வேண்டும் , வெளியார் பேசுற போது உள்நோக்கங்கள் கூடி பிழையாகி விடுகின்றன . ஈழவரசும் இனப்பிரச்சனையிலும் ...இப்படி சவாடல் பேசுகிறது . இந்த வாதம் சரியா ? பிழையா ? தெரியவில்லை . ஆனால் , அங்கே 'ஒற்றையாட்சி'யில் அடக்கி ஆளும் அடிமைத்தனமே விரவிக் கிடக்கிறது . அதில் , ஜனநாயகத்திற்கான வாய்க்காலுக்கான இடம் எங்கே இருந்தது .இருக்கிறது ? . சாதியமும் அடக்கிற பொறிமுறை எனச் சொல்லப்படுகின்றது . கானல் நீர்களே ஓடுகின்றன . பிரித்தாள்கிறவர்கள் பிரிவுகள் மேல் நின்று எதை வேண்டுமானாலும் விலாசமாக பேசலாம் . பேசுகின்றன . உள்ளே குத்துற முள்ளு வலிக்க குத்துகிறது . இவர்கள் பக்கத்திலும் சீர் திருந்தங்கள் புக வேண்டியது அவசியம் தானா ? . வினோபாஜியின் பூதானக் கொள்கையை அறிதல் வேண்டும் . அக்கொள்கை ,சாதியதிற்கு தீர்ப்பதற்கு ஏதாவது வழிவகைகளைக் கூறலாம் .
அன்னையரின் பிரச்சனைகளிற்கு தீர்வு , சிறையிலிருந்து விடுதலை , சாதி களைதல் எல்லாமே ஒரே நேர் கோட்டில் நிகழ வேண்டியவையா? .''முதலில் தேசியப்பிரச்சனைகளிற்கு தீர்வுகளை வையுங்கள் . சம்பந்தமில்லா வாண வேடிக்கைகளைக் காட்டிக் கொண்டிராதீர்கள் '' என்கிற தமிழ்த்தலைவரின் பார்ளிமெண்ட் குரல் சரியானரே , ''மரத்துப்போன ஈழவரசுடன் அவர்கள் பாசையிலே மட்டும் தான் பேச வேண்டும் '' என்றால் இளைஞர்களின் பாதை சரி தான் . உலக ஒழுக்கப்பாதையில் ஆயுதம் (ஏந்தல்) செல்ல வேண்டும் என ஒரு இறுக்கமான பாரிய கட்டுப்பாடும் கிடக்கிறது . அதை அரசியல் தலைவர்கள் புரிந்திருந்தனர் . இரண்டையும் கடைபிடித்த ஒரு விலாங்கு மீனின் நடையே அவசியமானது என்பது இளைஞர் தரப்பிற்கு புரிந்திருக்கவில்லை . இப்படியான சூழலிலே, மிகப்பெரிய ஜூலைக்கலவரம்' நிகழ்தேறியது . அக்கலவரமும் உலகத்தின் செயற்கையாக ஏற்படுத்தும் போரின் ஒரு வடிவமே. உலகம் , ஈழவரசைக் கொண்டு மிக மோசமான இனப்படுகொலையை செய்வித்தது . அதற்குத் விடுதலைக்குழுக்கள் எழும் என்பது நிச்சியம் தெரியும் . அச்சமயம் அரசாங்கம் , வேறு வடக்கு இளைஞர்களுக்கு ''(அரச நிறுவனங்களில்) வேலைவாய்ப்பளிக்க வேண்டாம் ''என்று கட்டளை இட்டிருக்கிறது .
இப்படி , ஈழம் எத்தனை கண்டங்களை கடந்திருக்கிறது . அப்படி செய்கிறவர்களை எப்படி ‘ நம் அரசாங்கம் ‘ என்று பெருமையாக சொல்லிக் கொள்வது ? அது ஒரு மிருகம் !. அதனாலே , இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட மாகாணவரசு முறை தமிழரைக் காப்பாற்றவல்லது என நம்புகிறார்கள் . உண்மையில் இதை ஏற்படுத்தியதும் இந்தியாவேயல்ல , இங்குள்ள அரசியல்வாதிகள் தான் . மாவட்டசபை ...என்று எத்தனை சுத்துமாத்துக்கள் ; ஏமாற்றல்கள் .... ஆமாம் ! , அமிரின் குழுவே பேச்சுக்களை சலிக்காது இந்தியத்தலைவர்களுடன் நடத்தி எடுத்துரைத்து ..அவர்களுக்கூடாககொண்டு வர வைத்தது . மையின் ஈரம் காய முதலே இலங்கை அரசால் அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய முடியவில்லை . முதல் தடவை யாக அது எதிர் கொண்ட பெரும் தோல்வி . ஒரு நாட்டில் பெரிய அரசு , மத்திய அரசு . அடுத்தது மாகாணவரசு , அதற்கடுத்ததே உள்ளூராட்சிகளைக் கொண்ட முனிசிபல் அரசு . இங்கே என்ன கூத்து நடக்கிறது ? அடுத்து நடக்கப் போகிறது உள்ளூராட்சித் தேர்த்தல் ! . மூன்றாம் தர அரசாங்கம் . இரண்டாவதைக் காணோம் . ஜே .ஆரின் காலத்திலும் , மகிந்தாவின் காலத்திலும் தான் அத்தேர்த்தல்கள் ஓரளவில் நடந்திருக்கின்றன . எனவே இவர்களை விட அவர்களே பரவாயில்லை என்று சொல்லலாமா? . பள்ளிப்பாடங்களில் தியறிகள் இல்லை , மாணவர்க்கு நோட்ஸ் எடுக்க வேண்டியதில்லை . ஹாய்யா ! .ஆட்சியிலும் கொள்கைகள் இல்லை , மக்களுக்கு ஹாய்யாவா ? பிரக்டிக்கல்களின் ஆட்சி மட்டுமே ! , இது என்ன பழைய இயக்கர் ,நாகர் ஆட்சியா ?! . ஈழவரசு பிரக்டிக்கலில் கொடி கட்டிப் பறக்கிறது .
அன்று ,கழுகுக்கும் தமிழ் ....அரசியல்வாதிகளுக்கும் தெறித்து விட்டதால் கெளரவப்பிரச்சனையில் சதாகாலமும் அமிர் குழுவை எதிர்த்துக் கொண்டேயிருந்தது . முயற்சியில் ஒருபடியைக் கடந்த பிறகும் மேற்கொண்டு செல்ல விடாது கூட்டாக செயலிழக்க வைத்த கூட்டில் விடுதலைக்குழுக்களும் இருந்ததால் ...மாகாணவரசு தேர்த்தலையையே நடத்தாது ஈழவரசும் சரசமாடி வர முடிகிறது . உலகம் இரண்டாக அல்ல மூன்றாகவே ஆசிய , ஐரோப்பிய , அரபு ...எனவே பிரிபட்டிருக்கிறது . ஐரோப்பா 'அரபு'இல் ஊடுருவி விட்டது . ஆசியாவில் முடியவில்லை , ரஸ்யா , சீனா , இந்தியா ...கூட்டணியோடு நாடுகளும் நிற்பதால் ....சித்து விளையாட்டுக்களை நடத்த சாதகமான சூழலே நிலவுகிறது . களப்பிரர் ஆட்சி போல ஒரு இருண்ட ஆட்சியையே ஏற்படுத்திக் கொண்டு போகிறது . இப்படியே அலட்டிக் கொண்டு போக......
அலுப்படைந்து விட்ட பாண்டி '' நாம் நோஞ்சல்கள் , இவர்களை எதிர்த்து போரிட முடியுமா? '' என்று குறுக்கே கேட்டான் . நவீனுக்கு வாசித்த நாவலில் இடம் பெற்றிருந்த காட்சி ஒன்று நினைவுக்கு வர 'இந்த மிருகங்களைப் போல எங்களாலும் போரிடவே முடியும் . கடைசியில் ,வெடிமருந்துகளைக் கட்டிக் கொண்டாவது ...பாய்ந்து வெடிக்க வைக்கலாம் '' என்றான் . வியட்னாமியர் முறை . '' ஆனால் , வெடிமருந்துக்கு எங்கே போவாய் ? ''. '' வெடிக்கிற நிலத்தில் எப்படியும் பெற்று விடலாம் என்ற குறைந்தபட்ச வாய்ப்பு கிடக்கிறது '' . ''சரி பெற்று விட்டோம் என வைத்துக் கொள்வோம் . அப்ப , சாகத்தான் போராடுகிறோமா , வாழவில்லையா ?'' என ராஜனின் தம்பி குறுக்கே கேட்டான் . '' இவர்களுக்கு 'கேட்க மட்டும் தான் தெரியும் ' என்ற நாகேஷின் நிலை . அடுத்து என்ன செய்வது .... என்று தெரியாது ? .
'' ஒரு சந்ததி உயிரைக் கொடுத்து அழிந்தே மற்றதை வாழ வைக்க முடியும் ''என்று நவீன் சோர்வாக பதிலளித்தான் . கவியைப் போல இவனும் அற்ப ஆயுசிலே போய் விடப் போறானோ ? என ராஜனுக்குள் ஒரு கலக்கம் ஏற்பட்டது . வெளியில் சொல்லவில்லை . தொடர்ந்து '' பயிற்சி மட்டும் போதாது . அறிவார்ந்த சமூகமாக எல்லோரும் இருந்தாலே வெல்ல முடியும் '' என்றான் . அது உண்மையே ! . தற்போதைய ஏட்டறிவு , இயலறிவு போதாமலே இருக்கிறது . எந்தறிவு ... , தேவைப்படா விட்டாலும் சட்டறிவு அவசியம் தேவைப்படுறது . ரஸ்யப்புரட்சியை ஒரு சட்டறிஞரான லெனிலே வழி நடத்தினார் . இங்கே , அரசியல் தலைவர்களை பகைத்து கொன்று வருவதால் ஒரியக்கம் , வெளிநாட்டினர் சிலரைக் கடத்தி வைத்திருந்த போது எப்படி அரசுடன் பேசுறது என்று தெரியாமல் . அதற்காக அனுபவமற்ற பல்கலைகழக பேராசிரியர்களையும் கடத்தி வைத்திருந்து , அந்த அலுப்புகள் சொல்லியதை கிளிப்பிள்ளை போல சொல்லி சிக்குப்பட்டு கடைசியில் , ....கேலிக்கிடமாகி , விரயமாக விட்டு விட வேண்டிய கூத்தும் நடந்தது .
பட்டி தொட்டியிலுள்ளவர்களையும் உள்வாங்க எந்தக்கல்வியாக கிடந்தாலும் அந்த கல்வியை புகட்டி கூட்டப்பட வேண்டியிருக்கிறது . அதாவது கொண்டு செல்ல வேண்டும் . அரசின் கையில் கல்வி மேலும் , மேலும் ஒடுக்கப்பட்டு வாறதை நிறுத்தி , செத்த பாம்பிற்கு உயிரூட்ட புதிய பாடங்களையும் சேர்த்தும் விடுதலை அமைப்புகள் , உயிரூட்டமான கல்வியை புகட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது .
நவீனுக்கு ஏதோ புதுயோசனை தோன்ற '' முடியுமடா , முடியுமடா !'' என்று திரும்ப உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தான் .
சறுக்குப்பலகையை ( ஸ்கேட்ஸ் போர்ட் -) பற்றி நவீன் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் ...விளங்கியும் , விளங்காமலும் வாசித்திருந்தான் . அது நினைவுக்கு வரவே இப்படி துள்ளிக்குதித்தான் . " டேய் , சைக்கிள் விடுறது போல பழக வேண்டிய சறுக்குப்பலகை ஒன்று இருக்கிறது . ஒரு சிறிய நீளப்பலகை இருமுனைகளிலும் சிறிய வளைவுடன் கிடக்கிறது . வளைவுகளுக்கு கீழே இரு முனைகளிலும்( பலகைக்கு கீழே) இரண்டு , இரண்டு சில்லுகள் பொறுத்தப்பட்டிருக்கிறது . வெளிநாட்டுப்பெடியள் அதன் மேலே ஏறியே , ஓடியே ....கடைக்கு , பள்ளிக்கு ...நாம சைக்கிள் விடுறது மாதிரியே ஓடித்திரிகினம் '' கதை அளக்கத் தொடங்கினான் .
''ஸ்கேட்ஸ்போட் ' என்று ஒன்றிருக்கிறதடா ! அதை , சைக்கிள் பழகிறது மாதிரியே படிப்படியாக பழக வேண்டுமடா . கால்களில் சமாளித்து பலகை மேலே நிற்கவும் நகர்த்தவும் பயின்று (பழகி ) விட்டால் கால்கள் , கைகளும் உரமேறும் . பலம் பெற்று விடும் . இயல்பாக ஓடி வருகிற போது உடலும் திண்மை பெற்று விடும் . உடம்பு , இறுக்கமாகவும் பலமாய் இருந்தால் தான் தைரியமே வரும் , தன்னம்பிக்கையும் வரும் . நம்மவர்கள் ,நோஞ்சலிருந்து விடுபட ...இது பெரிதும் உதவுமடா ." என்றான் . இருவருக்கும் ஒரு கத்திரிக்காயும் புரியவில்லை . " சரி ! , அந்தப்பலகையை எங்கே பெறுவாய்? " என்று கேட்டார்கள் . " வெளிநாடுகளில் இளைஞர்கள் சர்வசாதாரணமாக விளையாட்டாக இந்தப்பலகையில் ஓடித் திரிகிறார்களடா . இங்கேயும் ,இந்தியாவிலும் தான் காணமுடியவில்லை . வெளியிலே இருந்து வாரவர் மூலமாக ஒன்றைப் பெற்று விட்டால் நம் தச்சர்களைக் கொண்டு நாமே அதை வடிவமைத்து தயாரித்து விடலாம் '' என்றான் . தொடர்ந்து '' சைக்கிள் கடைகளிலிருந்து பெயரிங்கோடு சிறிய சின்ன சில்லுகளை எடுத்து பொறுத்த வேலைகள் இலகுவாகி விடும் . நம் விடுதலைப் போராட்டம் ஒரு நீண்டகாலப் போராட்டம் !. எனவே எல்லா வகைகளிலும் உடலைத்தேற்ற காலமும் இருக்கிறது , எல்லா வழிகளிலும் முயல வேண்டும் . " என்றான் . பாண்டி " உனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி யோசனைகள் எல்லாம் வருகிறது ?" என்று அலுத்துக்கொண்டான் .
''முதலில் ,தோழருக்கு உடல் பலம் வேண்டியது அவசியம் , நீ கூறிய நோஞ்சல் அகற்றும்படலம் '' என்று கூற ... '' வழி,வகைகளையும் ஆராய்வது தவறில்லை தான் '' என்பதை ஒப்புக் கொண்டவன் . அவனுடைய வாய் சும்மாவிராதே , '' உடல்ப்பலம் இருந்தால் மட்டும் போதுமா ? '' தலையை தொட்டு காட்டி '' பலத்தை பயன்படுத்த அறிவு ( விவேகம்)வேண்டாமா ? '' என்று கேட்டான் . '' தமிழரிடையே , சிலம்பாட்டம் , களிறு அடக்கல் , மாட்டுவண்டி போட்டி ...என மண்ணாங்கட்டி கலைகளெல்லாம் கிடக்கிறதே . .. '' என்று இழுக்க , '' அப்ப , திரும்பவும் கோயில்களுக்கு போவோமா?'' என்று ராஜன் நக்கலடித்தான் . '' நீ சொல்றது சரி தான் ! , றைய தமிழர் அப்படித் தான் உடலைத் தேற்றி இருந்தார்கள் . கல்வியை கோயிலில் வைத்திருக்கிறார்கள் . இந்த , ஐரோப்பிய கழுதைகள் வந்து பள்ளி(க்கல்வி)யை உயர்வுபடுத்தி அதை இழிவு படுத்தி விட்டார்கள் , மதமாற்றம் போல நாம் மூளை சலவைக்குள்ளாகி கிடக்கிறது . அன்று கிரேக்கர்களின் , வகுப்பில் , கூட 'தோற்றம் ' என்ற ஒரு பாடமும் சேர்த்திருந்தார்கள் . பாடத்தை படிக்கிறார்களோ இல்லையோ , அந்தப்பாடம் ,பள்ளியை விட்டு வெளியில் வருகிற அனைத்து மாணவர்களையும் மல்லர்களாக திகழ வைத்தது . இனிமேல் இல்லை என ,சகோதரச்சண்டையாக அடித்துக் கொண்டவர்களும் அவர்கள் தான் . ஜனநாயக ஆட்சிமுறையைக் கண்டவர்களும் அவர்கள் தான் . அடிமைப்பெண்ணில் சிங்கத்தோடு சண்டை போடுற வழக்கம் எல்லாம் எங்கே இருந்து வந்ததாம் ? , இவர்களிடமிருந்து தானே . தனி ஆள் , பயமே இல்லாது பொறுத துணிந்து நிற்பான் . சோக்கிரஸ்டீசை , அரிஸ்டோட்டிலே , சண்டையிலே நில்லு என்றாலும் பயமே இல்லாது துணிந்து இறங்கி நிற்பார் . அதற்குரிய உடல்பலம் , வீரம் .பயிற்சி ...எல்லாம் பெற்றிருக்கிறார்கள் . '' என நவீன் என்னவோ அலம்பினான் . ''நீ , அந்த சாமிநாத சர்மாவின் புத்தகத்தை வாசித்து நல்லாய்கெட்டுப் போய் விட்டாய் ! ''என்று பாண்டி கூறினான் .
'' இது , மக்களுடைய போராட்டம் ! , எல்லாரையும் இழுத்து விடுறதில் என்ன பிழை ? '' என்று நவீன் கேட்க , ராஜன் சிரித்தான் . உண்மையில் அது சிரிக்கிற விசயமில்லை , செயல்படுத்த வேண்டிய விசயம் தான் .
''டேய் ! ரஸ்யா , புரட்சி வென்றபிறகு ....அங்கே , எரிபொருள் தொட்டு ...பொருளாதாரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன . முக்கியமாக எரிபொருளை சேமிக்க வேண்டும் . அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் . அவர்கள் , முதலில் செய்தது ஜேர்மனியிலிருந்து ரொலார் ஸ்கேட்ஸையே , இரண்டு , இரண்டு சில்லுப் பொறுத்திய சப்பாத்துகளை நிறைய வாங்கியது தான். அது சப்பாத்து . இது பலகை அது தான் வித்தியாசம் . அச்சமயம் பலகை கண்டுபிடிக்கப்படவில்லை . இருந்தால் சீப்பான இதையே தெரிந்திருப்பார்கள் . அவற்றை வாங்கியதால் , ரஸ்யா வீதி முழுதும் சில்லுச்சப்பாத்துக்காரர் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள் . எரிபொருளை வெகுவாக சேமித்தது . 5 ஆண்டுத்திட்டம் , 5ஆண்டுத்திட்டம் என போட்டு மெல்ல மெல்ல தன்னை வல்லரசாக வளர்த்து கொண்டது . இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலின் காலத்தில் அது அசூர வளர்ச்சியை அடைந்து விட்டது . 'வெற்றி இவர்களுக்கே சென்று விடுமோ ? ...என்ற பயந்த , அமெரிக்கா அணுகுண்டை ரஸ்யாவிற்கு அயலில் போடவில்லை ,கொண்டு போய் யப்பானிலே தான் போட்டது , '' என்றான் நவீன் .
ரஸ்யா ஒரு பனிக்கரடி . அது அமெரிக்காவுக்குத் விளங்கும் . ஐரோப்பியருக்கு விளங்குதில்லை . அமெரிக்க ஜனநாயகக்கட்சியினர் ரஸ்யாவை பலவீனப்படுத்தினால் ..நல்லது என நினைக்கிறார்கள் . ஆனால் , அதற்கும் ஜனநாயகத்திற்கும் ஈழவரசு போல எட்டாப்பொறுத்தம் .
இன்றும் பெரும்போர்களுக்கு முதலே தொடங்கிய' நில ஆசை' காரணமான பலி எடுப்புக்கள் , எல்லா தில்லுமுல்லுகளிலும் தொடர்ந்தபடியே இருக்கிறது . அது இல்லாட்டி உலகத்திற்கு தூக்கமே வராது போல கிடக்கிறது .
ஒவ்வொரு முறை பெரும்போரை தொடுக்கிற போதும் சிறிய நாடுகளில் மண்ணென்ணெய் தொட்டு ...எரிபொருள் , உணவுப்பொருட்கள் எல்லாவற்றின் விலைகளும் ராக்கெட் கணக்கில் எகுறுகின்றன . அரபுகளின் எரிபொருள் எண்ணெய்களின் இறக்குமதிகளை . சிக்கனப்படுத்துவதிலே (பாவிப்பை) நம் சமார்த்தியம் இருக்கிறது . மாற்று வழிகளைக் கண்டு நடை போடுவதே பெரும் அறிவுடைமையாகும் . இப்படி ஏதாவது வழிகளில் ஈடுபடுவதால் மட்டுமே( வடக்கு , கிழக்கிலும் ) எரிபொருளை சேமிக்கலாம் ! . பண்டமாற்றத்தை கொண்டு வருவதன் மூலமும் ,அந்த கடைகளை திறக்கப்படுவதன் மூலமும்... பஞ்சத்தில் விழுவதை தவிர்க்கலாம் .
பசியால் இறந்தவர்கள் , தற்கொலை புரிந்தவர்கள் தொகை அச்சமூட்டும் வரைபாக அதிகரித்துச் செல்கிறது . இடிப்பது கோவில் , பேசுவது சமாதானம் என்பது போல , புதிதாக பிறக்கிற இளையபிரிவை வளைத்துப்போட்டு நல்லாட்சி மலர்கிறது ,வசந்தம் என ஜாலம் புரியும் சாயம் ...வெளுத்துப்போகவே செய்யும் . அவர்களும் காலத்தை இழுத்தால் தம் ஆசைகளை நிறைவேறி விடும் என நம்புறார்கள் .
'மக்கள் கடைகள் ' என ஒருவித ரேசன் கடைகளைத் திறந்து இவர்களின் தொழிற்சங்க அமைப்புகளின் மூலம் செய்யப்படும் தயாரிப்புகளை மலிவு விலையில் விற்று வந்தனர் . தாமரையில் அரசியல் , விடுதலை ராணுவம் , தொழிற்சங்கம் என மூன்று அமைப்புகள் இயங்கின . இவர்களுடைய அரசியல் பிரிவு . மற்ற இரண்டுக்கும் தோள் கொடுப்பது , அவர்களுக்கு தோழர்களை தெரிந்து வழங்குவதும் இப்பிரிவுதான் . வாசிகசாலையும் , சனசமூகநிலையங்களும் செய்ய வேண்டிய வேலைகளை , அரசியல் அமைப்பு , அதிலிலுள்ளவர்களை ஈடுபடுத்தி 'விழிப்புக்குழு' க்களை ஏற்படுத்தி சமூகப்பிரச்சனைகளை தீர்த்தும் வந்தது . சுயமாக இடையூறின்றி நீள இயங்கினால் ...எதிர்காலத்தில் பல கோல்களை போடும் .
பழைய சூத்திர , ஏர்மேடைக்களை மீளக்கட்டி ,கட்டி நீரிறைப்பை செய்வோம் என்றால் எமக்கு உழைக்க வேலையும் , நேரமும் அதிகம் கிடைக்கும் " என்று நவீன் கனவில் மிதந்து கொண்டு ஏதோதோ பிதற்ற ராஜனும் பாண்டியும் சேர்ந்து '' முத்திப்போய் விட்டது '' என்று கூறி பெலத்து சிரித்தார்கள் . '' இதற்கே ஒரு வருசம் எடுக்குமேயடா '' என்று பாண்டி நையாண்டியாக கூற ''எடுக்கட்டுமே ! , எமக்கு தான் காலம் இருக்கிறதே , முயற்சிகிறதும் முக்கியம் இல்லையா ? ( என்ற பல்லவி) , 'முந்தி என்ன கோஷித்தோம் . பார்வையாளர் வேண்டாம் ,பங்காளர் வேண்டும் !' அதிகமான பங்காளராவோம் '’ என்றான் . லொஜிக் சரி தான் ! .
''சரி ! , டேய் , நம்முயற்சிகள் சரிவராட்டி ...'' ராஜனுக்கு திடீரென ஒரு சந்தேகம் எற்பட்டது . '' வீழ்வது எழுவதற்கே ! , கடைசியில் , . உன்ர பிள்ளை ஈசியாய் வெல்லுவான் . சரியான தடத்திலே வண்டி ஓடும் '' என்று முடிக்க '' சந்தேகத்தை ஒருபுறத்தே வைத்து விட்டு நேர்ப்பார்வையிலே பார்க்க வேண்டும் '' என்பதை ஒப்புக் கொண்டான் . '' தளைகளை அறுத்துக் கொண்டு விடுதலைப்போர் முன்னேறும்' . '' வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..'' என்று ராஜனின் தம்பி பாடத் தொடங்கி விட்டான் .
அப்ப தான் மக்கள் அனைவருக்குமே நம்பிக்கைகள் விரிய வளரும் . பூக்கள் மலரும் பாண்டிக்கு தீடீரென ஒரு சந்தேகம் எழ '' சரி ! , போராளிகள் சிலுவை சுமக்கலாம் . மக்கள் ஏன் சுமக்க வேண்டும் ? '' கேட்டான் . நவீன் உடனடியாக பதில் சொன்னான். '’ நாம் , வானத்திலிருந்து இறங்கி வந்த தேவ தூதர்களில்லையே ' , மக்கள் வேற , போராளிகள் வேற இல்லையே . '' . ராஜனுக்கு புரைக்கேறியது போல இருந்தது . ''எம் போராட்டம் மக்கள் போராட்டமா மாற்றப்பட வேண்டியது அவசியம் தான் . ஆனால் , இது மக்களை ... பிடித்து முன்னிலையிற்கு அனுப்புவது போன்றது ? '' கவியும் இந்த நெருக்கடியைத் குறிப்பிட்டேயிருந்தான் . விடுதலைப்போராட்டம் என்று இறங்கினாலேயே அதிலுள்ள சிக்கல்கள் தெரிய வருகிறது .
காந்தி , இந்திய விடுதலைப் போராட்டத்தில் , ஆரம்பத்திலிருந்தே இது வன்முறையல்ல , அகிம்ஷைப்போராட்டம் ' என்று வன்முறைப்படிவை அகற்ற சாத்வீகங்களை கையில் எடுத்துக் கொண்டார் . அந்த பக்குவம் எமக்கு இல்லை . இன்று ஈழத்தின் தெற்கு மக்களிடம் தமிழரின் போராட்டம் என்றால் வன்முறையுடையது என்ற படிவே படிந்து போய்க் கிடக்கிறது . வன்முறையில் பிடித்து தள்ளியது ஈழவரசே ...என்ற உண்மை மறைக்கப்பட்டு விட்டது . அன்று , எதிர்காலத்தில் , நிகழவிருந்த துர்திஷ்ட சகோதரச்சண்டை பெரிதாய் இருக்கும் ' என்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை .
கடைசியில் , ' அடக்குமுறை எந்த ரூபத்தில் வந்தாலும் அவை தகர்க்கப்பட்டேயாக வேண்டும் , உடைத்தெறியப்படும் !' என்று ஏட்டுச்சுரக்காயை படித்து விட்டு புலம்பியது தான் மிச்சமா ? .
ரஸ்யாவின் செஞ்சேனை , வெண்படையையே சந்தித்திருக்கிற போது இது எம்மாத்திரம் ? . இன்னும் எத்தனையோ அறியாத்தடைகள் , படுறபோது ...பையித்தியம் பிடிக்க வைக்கா குறையாக . உறைக்கும் ; வேதனை பட வைக்கும் .
சொந்த மூளை , அதிகமாகவே வேலை செய்ய வேண்டும் . ' போராட்டம் ' வெல்லப்படவும் வேண்டும் . ‘ முடியாது ‘என்ற சொல்லே அகராதியில் இல்லை என்கிற நெப்போலியன்களாக மாற வேண்டும் .
அனுபவம் வேணும், வேணும் என்கிறார்களே அதற்கு . செல்ல வேண்டிய பாதை தெரிகிறது . காலம் எப்படியும் போகட்டும் . சாதியம் , மதம் என்கிற பழைய குப்பைகளையெல்லாம் கூடையில் விலாசி விட்டு புதிய நடை போடுவோம் . இறங்கி விட்டோம் . வைத்த காலை பின் வைக்க மாட்டோம் . . அந்த நடை தொடரும் .
இவர்கள் நடப்பார்கள் ! , நடப்பார்களா ? .
4. மல்லிகைக் கிராமத்தில்..
அங்கே , காவேரியின் உறவுக்காரரான சந்திரமெளலி அண்ணரை அவனுக்கு நிறைய பிடித்திருந்தது . அவருடைய சிறிய குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது . அவ்விடத்திலே , அவருடைய பொறுப்பில் 10,12 பரப்புகளைக் கொண்ட கோவில்க்காணி ,இருந்தது . குடும்பவழியில் நீண்ட காலம் இருக்கிற அக்காணிகள் காலப்போக்கில் அவர்களுக்கே சொந்தமாகி விடுறது வழக்கம் . அதில், ஒன்று , ஒன்றரைப் பரப்புநிலங்களை ...வழங்க , கோயில் , வாசிகசாலை ....எல்லாம் எழுந்திருந்தன . ''சாந்தா'' என்ற பெயரில் இருந்த 'அக்குறிச்சி ' கோவில் எழுந்ததும் சிவபுலமாக பெயரை மாற்றிக் கொண்டு விட்டது . மிச்ச நிலம் , சிறுவர்களின் விளையாட்டு திடலாகவும் , வீட்டு விசேச நிகழ்ச்சிகள் என்றால் ஸ்பீக்கருடன் நடைபெறுகிற, இரவல் தொலைக்காட்சி ஏற்பட்ட போது விடிய ,விடிய சினிமாப்படங்கள் பார்த்த , ஒருமுறை காத்தவராயன் கூத்து கூட நடைப்பெற்றிருக்கிற..பொதுப்பாவிப்பில் கிடக்கிறது .
''அண்ணே , எங்களுக்கு வீடில்லை '' என காவேரி அவரிடம் கவலைப்பட்டு சொன்ன போது , '' இதிலே , இரண்டு பரப்பு நிலத்தில் வீட்டைக்கட்டி கொள் '' என கோவிலுக்கு பக்கத்திலிருந்த துண்டை வழங்கியும் இருந்தார் . மிக நல்ல மனிசர் . அச்சமயம் அவர் மனைவிக்கு பேறுகாலமாக இருந்தது . அவருக்கு பாசமுள்ள நான்கு அக்காமார்கள் . அயலிலே , பெரும்பாலானவரின் குடும்பங்கள் இருந்தன . கடைசியாய் பிறந்த தம்பி என்பதால் அவர்மேல் எல்லாருக்கும் பாசம் , செல்லம் அதிகம் . அப்பா வழியில் வந்த குடும்ப கோவில்க்காணியின் உரிமையை ஏகோபித்து தம்பிகையிலே கொடுத்து விட்டார்கள் . சினிமாவில் தான் அடித்துக் கொள்றது நடக்கிறது . நிஜத்தில் இல்லை
மூத்தவரான ஜானகியக்கா காவேரி வீட்டுக்கு அயலில் இருந்தார் . அவருடனே அவருடைய குடும்பமும் வசித்து வந்தது . ஒருவர் கிராமத்தில் வேறு பகுதியிலே இருந்தார் . பிள்ளை பிறந்த பிறகு அவரும் கோவில் வளவிலே வீடொன்றைக்கட்டிக் கொண்டு குடியேறுகிற பிளான் . அக்குடும்பம் மகிழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருந்தது . பிள்ளை பிறக்கப்போகிறது என அந்தரப்பட்டு யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள் . குழந்தையும் , ராதாவக்காவும் சேர்ந்தே இறந்து போய் விட்டது அக்குறிச்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மெளலியண்ணை இடிந்தே போய் விட்டார் . 'கடவுளுக்கு , கடவுள் என்ற பெயர் எதற்கு?' என்று பாண்டி , ராஜனுக்கே வெறுத்துப் போய் விட்டது .
அவருடைய காதல் கோட்டை முற்றாகவே தகர்ந்து போய் விட்டது . அக்காமார் கவலைப்படக் கூடாது என்பதற்காகவே காலையில் , பழையபடி மேசன் வேலைக்கு போகத் தொடங்கினார் . தவறாமல் போகிறார் . இரவில் இரண்டு போத்தல் கள்ளை வாங்கிக் குடிப்பார் . குத்தகைப்பத்திரத்தை '' இனி , இது எனக்கு எதற்கு அக்கா'' என்று ஜானகியக்கா கையிலே கொடுத்து விட்டார் . அவர் நிலத்தில் எழுந்த மண்வீட்டிலே தான் காவேரி எல்லாப்பிள்ளைகளையும் சுகப்பிரசவத்தில் பெத்தெடுத்தாள் . கடவுள் சிலருக்கு அருளை அள்ளிக் கொடுக்கிறார் . சிலரை சோதிக்கிறார் . பெண்களுக்கு முதலுதவியைப் போல பேற்றுப்பயிற்சியையும் தேவாலயமே அளிகிறது போல படுகிறது . பிள்ளை பிறக்கிற ஒவ்வொரு தடவையும் அந்த அக்காக்கூட்டமே குவிந்து ...வீடே கலகலவென இருந்ததை நினைத்துப் பார்த்தான் . ' ஒருவேளை மொளலி அண்ணருக்கும் இந்த அக்காமாரின் உதவி கிடைத்திருந்தால் ..இருவரும் பிழைத்திருப்பார்களோ ? . கவி , முதலுதவிப்பயிற்சிகளை கூட்டுப்பண்ணை வாயிலாகவே மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருப்பதையும் நினைத்துப் பார்த்தான் .
ரஸ்யர்கள் தீவிர மத நம்பிக்கையுடையவர்கள் . ஆனால் லெனினின் சோவியத் கட்சி, மதக்கலப்பில்லாமல் தோழர்களை செயல்பட பழக்கியது . செயல்படவும் வைத்தது . அதனாலே, அன்று , உக்ரேன் தொட்டு எல்லாக் குடியரசுகளும் அதன் பின்னால் அணிவகுத்தன . சோவியத் யூனியனாக வலிமையாக காலூன்றி நின்றது . கூட்டுப்பண்ணை தான் தான் அதன் அடிப்படை பலமாக இருந்தது . அதிலிருந்தே பல திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன . அதிலிருந்தே பெருமளவு தோழர்கள் செந்சேனைக்கும் பொறுக்கி எடுக்கப்பட்டார்கள் . பகலில் உழைப்பு . இரவில் கல்வி கற்கைகள் , அவசியம் ஏற்படும் போது போராளிகள் என சுழற்ச்சியாக செயல்பட்ட சோவியத்கள் , கல்வியில் குறைய வீதத்தில் இருந்த ரஸ்சியாவை தொண்னூறு வீத அறிவுடையதாக மாற்றி சாதனையும் படைத்தது .
அந்த அறிவையும் கூட்டுச் செயற்பாட்டையும் ராஜன் தேவாலயப்பெண்களிடம் காண்கிறான் . ஒரு வித்தியாசம் . மற்ற மதத்தவர்கள் உதவி என்று கேட்டால் ....இவர்கள் உதவத்தயார் . ஆனால் , கேட்க வேண்டுமே . தட்டினால் தான் கதவு திறக்கும் , உதவிகள் கிடைக்கும் . ஆனால் , சுய பிரிவிற்கு தட்டாமலே தாள் திறக்கும் . சகோதர உறவுவில் மத . வர்த்தகத் தன்மைகள் புகுந்து விட்டனவா ? வாழ்கிறவர்கள் . குறை சொல்லவும் முடியாது போல அனைத்து மனிதர்க்கூட்டத்திலும் கலப்பு , மாற்றம் என்கிற சிந்தனையும் , சிதறல்களும் வலிந்தோ , வலியாமலோ ஏற்பட்டும் விட்டிருக்கின்றன . அந்த வரைபு ஆட்சிப்புள்ளியை அடைகிற போது .....வெடிக்கின்றன . அதனாலேயே மதத்தை , மொழியை அரசியல் கலக்காமல் தனிப்பட்ட விசயமாக வைத்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது . அரசியலில் கலந்தாலோ பிரச்சனை வளர்ந்து விடுகிறது . ஆட்சியாளர் , இதைத் தீர்ப்பதா ? அதைத்தீர்ப்பதா? ...என்று சொல்லி, சொல்லியே தீர்க்காதே காலத்தை இழுத்தடிக்கிறார்கள் . நஞ்சுகள் ஏறி விடுகின்றன . மருந்துகள் தான் இல்லை . கண்டு பிடிக்க வேண்டும் . பெரியார் அதில் தான் கவனத்தை பதித்தார் போலவும் படுகிறது .
பெண்ணடிமைத்தனம்' நிலவுவதே உலகம் அவர்களுக்கு உள்ளக்கிடக்கையை கொட்ட ஒரு வெளி வேண்டும் . கொட்டுறதுக்கு கிடைத்திருக்கிற மடமும் மனிதர்களுமாக தேவாலயமும் கிடக்கிறது .
தீவிரமாக ஒழுக வேண்டும் என சில விதிகளை , எல்லா மதங்களும் கொண்டிருப்பது ஒரு பலவீனம் .
இதில் , ஓரணியாக செபம் செய்யும் போது பாரம் கரைந்து விடுகிறது . அவர்களுக்கு மேடைக் கூச்சமின்றி, பயமின்றிப் பேச ...என ஆளுமைகளை ஒரு கல்வி நிலையம் போல வளர்த்தும் வருகிறது . அதோட பாடுவது ...நடிப்பது போன்ற கலைகளையும் பழக்கிறது . பாடசாலைக் குறைபாட்டில் கிடைக்காத பலவித ஆளுமைகளை இங்கே சேவையாக வழங்கி வருகிறது . சந்தாவாக சேவைக்கு கட்டணமாக உழைப்பில் 15 வீதத்தையும் வசூலிக்கவும் தவறுவதில்லை . சரி ,பிழைகளுக்கு அப்பால் கிடைக்க முடியாத இச்சேவைகளை முறைக்கு கல்விநிலையங்கள் வழங்க வேண்டியவை , வழங்கப்படுவதில்லை என்பதை நோக்க வேண்டும் . ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கிற கல்விமுறையை இங்கே புகுத்தியதால் ,இங்கே நிலவிய முறை .....ஆட்சி இழந்து விட்டிருக்கிறது . ஒவ்வொரு நாட்டிலும் சுயக்கல்வியைப் புகட்ட பல பெரியார்கள் முயன்றிருக்கிறார்கள் . முயற்சி , வெற்றிகரமாக நடைபோட விடாது மொழி , மதம் , இனம் போன்ற கர்மங்களும் தடை போட்டுக் கொண்டே கிடக்கின்றது .
அதனாலே''ஐஸ்பழம் விற்கத்தான் லாயிக்கு '' என்று சொல்கிற ஆசிரியரையும் காண்கிறோம் ,
பொறுப்புணர்வுடன் கற்பிக்கிற ஆயர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள் . மதம் ,அரசியலுடன் கலக்கப்படுகிறது . அரசியல் வன்மத்தையும் ,வன்முறைகளையும் காலப்போக்கில் வாங்கியும் கொள்ளறதும் நடைபெறுகிறது . ராஜனைக் கேட்டால் ''கல்விநிலையத்துக் கூடாக எல்லாவற்றையும் கற்பிப்பதே நல்லம் ''என்பான் . ஆனால் , அரசுகள் கல்விநிலையங்களை ஆட்டுவிக்கின்றன . தமிழ்ப்பகுதிகளிலே , ஒரு அதிபர் மாற்றதிக்கு ...பாரபட்சமாற்றல் , விசாரணை என கண்றாவிகள் ஏராளம் . சாதாரண இரு மனிதருக்கிடையிலேயே ஒற்றுமை நிலைப்பதில்லை ,இங்கே இரு வேறுபட்ட இனங்கள் நம்பிக்கையையே கிடையாது .வென்றெடுக்க வேண்டும் . ஈழத்திலிருந்து படைகளை விலத்துற போது , பிரிட்டனின் சர்வாதிகார முறையை , ஒற்றையாட்சியிலும் ஏறபடுத்தி விட்டுச் சென்றது . இன்றும் இதே பாணியே தொடர்கின்றன . வடக்கு , கிழக்கில் நிறைய படைமுகாம்கள் . திரும்பிய பக்கமெல்லாம் கடினர்கள் .
தமிழர்களுக்கெதிராகவே பிறிம்பான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன . ஒடுக்குவதையே தொழிலாகக் கொண்ட நீதி மன்றங்கள் . எல்லா உரிமைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு இனம் ஆடும் ஆட்டம் சகிக்கவேயில்லை . போராட்டம் , புரட்சி ..என்பது அவசியமாகி வி ட்டிருக்கிறது . விடுதலைப் போராட்டத்தின் மூலமே எல்லா கட்டுக்களையும் அவிழ்த்தெறிய முடியும் என தோழர்கள் போராட முன் வந்திருக்கிறார்கள் . ஆனால் . இதுவோ நீண்ட காலப்போராட்டமாக கிடக்கிறது .
அனைத்து மக்களுக்கும் சம வசதி , வாய்ப்புகள் , சேவைகள் கிடைக்க வேண்டும் . கிடைக்காததால் ... கடவுள் உலகம் முழுதிலும் சில தனிமனிதர்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார் . காலனி நாடுகள் ருசி கண்டவை விலகினாலும் இழைகளை அறுக்க விடுவதில்லை . வைத்திருக்க எப்படியும் அப்படியே விரும்புகின்றன .
ஒன்றும் தெரியாத நாடுகளையும் வசப்படுத்தி போரில் இழுத்து விடுகின்றன . விடுதலைப் போராட்டம் நடந்தால் இதுதான் சாட்டு என நுழைந்து குண்டுகளை கொட்டி மனிதப்படுகொலைகளை செய்கின்றன .
சிறுநாடுகளில் , பங்காளிச்சண்டை , சகோதரச் சண்டை என பலவீனங்கள் ரத்தத்தோட ஊறியது . பழத்தை எளிதில் அடைய சர்வதேசசட்டம் , அது , இது ...எனக் கூறி , நல்லவர் போல வேசம் போட்டு களம் இறங்கி விடுகிறது .
எல்லாருக்கும் பயந்து விடுதலைப் போராட்டத்தைக் கை விட்டு விட முடியுமா ? . விளைவு ? . விடுதலைப் போராட்டத்தையும் அடித்து , அழித்து குற்றுயிராக்கி விட்டார்கள் . பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் . ஈழநாட்டில் , 'சிங்களமொழியை அனைவரும் அறிதல் அவசியம் ' என்பதை வன்முறையின்றி அன்பாக கேட்டிருக்கலாம் . புது மொழியை அறிய எவருக்கும் பிடிக்கும் . பொசுபரசுக் குண்டுகளையும் , கொத்துக்குண்டுகளையும் , நிறை கூடியகுண்டுகளையும் ....கொட்டி கேட்டிருக்க வேண்டாம் . வன்முறை நில விஸ்தரிப்பினூடாக ... வாயில் இரத்தம் ஒழுகிற பேயாக , மிருகமாக மாறி நிற்க வேண்டாம் . தமிழரை அழித்து அந்நிலத்தைப் பிடித்து குடியேற்றுவதன் மூலம் சிங்கள நாடாக்கும் ஈனக் கொள்கை வேண்டவே வேண்டாமே !
பிணம் தின்னியாக இரண்டு பெரும்போர்களை நிகழ்த்திய உலகதிற்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை , 3ம் போரை நடத்த இங்கே கண்ணைப் பதிக்கிறதோ என்று தோன்றுகிறது .
இச்சிறிய நாட்டின் படுகொலைகளுக்கு மூட்டு கொடுத்து நிற்கிறது . இந்த கூட்டுக்கு மன்னிப்பே கிடையாது . தடைகள் போடட்டும் , பயங்கரச்சட்டங்கள் போடட்டும் , இவர்களின் பெரும் தலைக்குனிவு வரலாறை பெரும் சினிமாவாக எடுத்து... இவர்களிடமே நீதியைக் கேட்போம் . அப்படி பல வழிகளில் இடித்துரைப்பதன் மூலம் சொரனை பெறலாம் . எம். மக்கள் , தாம் கீழானவர்கள் என்பதை விரும்புவார்கள் ? எனவே , புதிய வரலாறு நிச்சியம் எழுதப்படும்.
இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு ? ' என தாமரைப்பெடியள்களும் பேசி , பேசி களைத்துப் போய் விட்டார்கள் .
' பதிலுக்கு வன்முறை தீர்வாகாது ' என்று கூறிய காந்தி ''வெள்ளையனே வெளியேறு '' என்று தான் முழங்கமிட்டார் . அதைப் போல ''சிங்களவரே வெளியேறு ...'' என்ற ...முழங்கமும் அவசியமாகிக் கிடக்கிறது . அகிம்ஷை என்பது பிழைகளை ஏற்றுக்கொண்டு நிற்பதில்லை , இடித்துரைப்பது . தர்மத்திற்கு எதிராக எவர் வன்முறையைக் கையில் எடுத்தாலும் தோற்றே போவார்கள் என்பதை தெரியப்பெடுத்துறது . கலிபிடித்த சூரனும் ஒரு நாள் வீழவே செய்வான் . நோஞ்சல்களின் கைகளும், கால்களும் உரமேறி முருகனாக நிற்கும் காலமும் வரும் . கந்தபுராணத்தை ஒரு புலவர் எழுதியதும் இதற்காகத் தான் . இதிலுள்ள வன்முறை , அகிம்ஷையைக் கைவிட்டால் ...இதே நேரும் என எச்சரிப்பதாக வைத்துக் கொள்வோம் . கடந்த கால வரலாறைக் கூறி ...வரலாறையும் எழுதச் சொல்லியே காந்தி சென்றிருக்கிறார்.
இரண்டு வருசத்திற்குப் பிறகு மெளலியை ராஜன் '' அண்ணே அந்தப்பிள்ளை தனிச்சு தானே இருக்கிறது . வயந்தியை கட்டிக் கொள்ளுங்களேன் " என்று கேட்டுப் பார்த்தான் . '' என்னால் ராதாவை மறக்கவே முடியாதடா !''என்று மறுத்து விட்டார் . நனவிடைத் தோயவிரும்புகிறார் . இப்படியான அதிசய மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த குறிச்சியில் , அக்கா ,தங்கச்சி , அண்ணர் தம்பிட... என ஒரே குடும்பத்தினரே அதிகமாக இருந்தனர் . எல்லாரும் உறவினர் தாம் . காவேரிக்கு , அன்டன் குடும்பமும் உறவினர் தாம் . அவர்களுடன் நவாலியிருக்கிற தேவாலயமொன்றிக்கு போய் வரத் தொடங்கினாள் . கால்நடையில் போய் வர முடியாத தூரம் ராஜன் சைக்கிளில் ஏற்றிச் சென்றான் . கல்லுண்டாய் ,வீதியிலிருந்து மாட்டொழுங்கையில் இறங்கிச் செல்லல் வேண்டும் . இவர்கள் கதைக்க ராஜன் , ஒருவித ஒட்டாத் தன்மையை உணர்ந்தான் . காவேரி கதையும் என இடைக்கிடை கையைக் கிள்ளுவாள் . கண்டதையும் கதைத்தால் இராவிலே குட்டு வேற விழும் . சைக்கிள் கைவளையிலிருந்து கையை எடுத்து தலையை தடவிச் சிரிப்பான் . ஒரு முறைப்பு .. தேவாலயத்து ஆயர் பிரான்ஸிஸும் இளவயதினராக இருந்தார் . காவேரி ' ஞானஸ்தானம் ' எடுக்க விரும்பினாள் . ராஜனின் முகத்தைப்பார்த்தவர் சிரித்துக்கொண்டு '' இப்ப வேண்டாம் . கொஞ்சநாள் போகட்டும் பிறகு இருவருமே எடுத்துக் கொள்ளுங்கள் ''என்றார் . இப்படியும் ஒரு சிக்கல் இருக்கிறது . அவருக்கு இருவர் மீதும் ஒருவகை பாசம் ஏற்பட்டு விட்டது . அன்டனின் அம்மா முந்திரிக்கொட்டையாக '' ராஜன் , உமக்கு சம்மதமா ?'' எனக் கேட்டார் . '' சிசிலின் அக்கா , சேர்சிற்கு வாரதால் ஞானம் பெறனும் என்ற கட்டாயமில்லை . '' என்று சிரித்தார் . அவர் பைபிளை அப்படியே வாசிக்காமல் பக்கத்தைப் பார்த்து விட்டு தன்வழியில் சொல்லிக் கொண்டு போனார் . அது அவனுக்கும் பிடித்திருந்தது .
பிரார்த்தனை முடிய , '' ஞானஸ்தானம் எடுக்கிற போது ' காவேரி ' என்ற பெயரே நல்லாய் இருக்கிறது . அதையே முதல் பெயராய் வைத்திரும் . ரோஸ்மேரியை இடைப்பெயராய் வைக்கலாம் . பெயர் மாற்றிறது என கச்சேரி வழியே அலைய வேண்டியதில்லை . அது உங்க வீட்டிற்கும் பிடிக்கும் . (பொதுவாக முதல் பெயராக புதுப்பெயரை வைப்பர் . இடைபெயராக தமிழ்ப்பெயர் இருப்பது வழக்கம் ) . நான் , இங்கே (மேலே ) சொல்லிக் கொள்கிறேன்'' என்றார் . இப்படியே ஞாயிற்றுகளில் போய் வந்து கொண்டிருந்தார்கள் . உண்மையிலே ஆயர் நல்லவர் தான் ! . மூத்தவன் பிறக்கிற போது சகோதரிகளை வீட்டிற்கே அனுப்பி சுகப்பிரசவமாக பிறக்க வைத்தார் . பிள்ளைக்கும் ஞானஸ்னானம் செய்யப்படவில்லை. அவள் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது . சேர்ச்சில் செபம் மட்டுமே செய்யப்பட்டது . இப்ப , மெளலியின் அக்கா , ஜானகியக்கா , வீட்டிலே குழந்தையை விட்டு விட்டு போய் வந்து கொண்டிருக்கிறார்கள் . 6 , 7 மாசத்திற்குப் பிறகு , பெயரை மாற்றிக்கொள்ளாமலே தாயும் பிள்ளையும் ஞானஸ்னானம் பெற்றுக் கொண்டார்கள் . ராஜனை . கட்டாயப்படுத்தவில்லை . தோழர்... மத நம்பிக்கையற்றவர் என விட்டு விட்டார்கள் .
5. காதலர்கள் களிப்பில்......
பாண்டி வீட்டாரும் அவனுக்கு உதவியாய் இருந்தனர் . சிலசமயம் , இந்த ஜோடியில் ஆயருக்கு அன்பு பிறந்து விட்டதால் , தேவாலய சமூகசேவை செய்ய வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பித் திரிய வேண்டியிருந்தது . அவை இவர்களுக்கு முதலுதவி , மற்றும் பல்வேறு பயிற்சிகளை பெறும் களங்களாகவும் இருந்தன . ''ராஜ் , உம்மால் சைக்கிள் உழக்க முடியும் தானே '' என்று ஒரு சிரிப்பு . முதலே பட்டியல் போட்டு விட்டிருப்பதால் முகவரிகளை முன்னரே தெரிவித்து விடுவார் . அப்படி வெவ்வேறு இடங்களிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள் . அன்டன் குடும்பம் நவாலிக்கு சென்று கொண்டேயிருந்தது . நவீனை பொறுப்பாளராக்கி விட்டிருந்தான் . ராஜன் காவேரியை சைக்கிளில் ஏற்றி பண்டதரிப்பு சந்தியில் ஏறி சில்லாலைக்கு உழக்கினான் . இவர்களப் போல வேறு பகுதியிலிருந்தும் சைக்கிளிலில் வருபவர் இருந்தனர் . இவர்கள் மட்டுமே தம்பதி . மற்றவர்கள் பெரும்பாலும் சகோதரர்கள் அல்லது லேடீஸ்பைக்கில் வந்தனர் . அப்படி அவ்விடத்து இளையவர்களுடன் வேறிடத்தவர்களும் ...சேர்ந்து பணிபுரிந்ததில் ஒரு உற்சாகம் இருக்கவே செய்கிறது . கூட்டிவந்தவர்களும் குழுவில் இடம்பெறுவர். ராஜன் , இவர்களுடன் கதைக்க சிரமப்பட்டான் . தப்பித்தவறியும் விடுதலைப்பற்றிக் கதைக்கக் கூடாது என்று ஆயர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டிருந்தார் . அவரவர் விசங்களையே துருவுவார்கள் . சில்லாலை சேர்ச்சுகள் நிறைந்த ஊர் .
சேர்ச்சில் பிரார்த்தனை முடிய சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு கால்நடையாய்ச் சென்றார்கள் .அங்குள்ள அக்காமாருடன் சேர்ந்து மீனவர் பகுதிக்கு குழுவாகச் சென்றனர் . மூன்று பேர்களாக தம்மை பிரித்துக் கொண்டு குறிச்சியிலுள்ள அத்தனை குடும்பத்தையும் சந்தித்தனர் . துப்பரவாக சூழலை வைத்திருப்பதை வலியுறுத்தியும் , மற்றும் முதலுதவி , பிள்ளைப்பேற்றின் போது செயல்பட வேண்டிய எளிதான வழிகளை முறைகளை அங்குள்ள பெண்களுக்கு விளங்கப்படுத்தியும் வகுப்பெடுத்தனர் . பிறகு சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு வெளிச்சுற்றாடல் பகுதியில் கிடப்பவற்றை துப்பரவாக்கும் சிரமதானப் பணிதொடங்கியது .
ராஜன் ஆயரிடம் குதர்க்கமாகவும் ஒரு கேள்வி எழுப்பி இருந்தான் . ''பாழ்பட்டுக் கிடக்கும் குள திருத்த வேலைகள் செய்யக் கூடாதா? '' . ''அதை , ஊர்க்காரர்கள் தாம் செய்ய வேண்டும் . தவிர , பெரிய ...என்று இறங்கினால் சிறியதைக் கூட செய்ய முடியாமல் போய் விடும் '' என்றிருந்தார் . அவர் கூறியதும் சரி தான் .
அன்னை ரெரேசாவின் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன .அவன் வரும் போது வலக்கம்பரையில் இருக்கும் தோழர்களை சந்திக்கும் விருப்பத்தையும் ஆயரிடம் தெரிவித்திருந்தான் . அவர் யோசித்துப் விட்டு இருவரிடமும் '' ராஜன் நீ , கிட்டவாக இருக்கிற தோழர்களின் வீட்டையும் சென்று பழக்கப்படுத்திக் கொள் . இவளை ஒருத்தர் வீட்டிலே விட்டு விட்டு போய்ச் சந்தி . பாதகமில்லை . காவேரி , நீ நிற்கிற வீட்டில் ...மதம் பற்றி பேசக் கூடாது . சைவக்கோயில்கள் பழமை வாய்ந்தவை . அங்கிருப்பவர்களுடன் அவற்றைச் சென்று பார்த்து சிறப்புக்களை அறியப்பார் . அறிவுத்தேடல் என்பது ஒரு கல்வி ''என்று குறிப்பிட்டார் . என்ன ஒரு ஆயர் இவர் ! .
அப்படி அவள் ' பறாளைக்கோவிலை ' தொங்கல் தோழரின் தங்கச்சிமாருடன் சென்று பார்த்தாள் . தேர் சிறப்பு வாய்ந்தது . திருக்குறளின் மூன்றாம் பிரிவை விளக்கும் அனேகச்சித்திரங்கள் செதுக்கப்பட்டிருந்தது . அவளை வெட்கப்பட வைத்தது . அதிர்ந்து போனவள் . ''இதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? '' என்று கேட்டாள் . '' அறிய வேண்டியவை தானே '' என்று சிறுசுகள் சொல்லிச் சிரித்தன . . பழசுகள் , கட்டுப்பெட்டித்தனமில்லாது . அறிதலும் அவசியம் என்பதை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் . கோயிலைச் சுற்றி விட்டு வீட்டிற்கு வர , அவளைப்பற்றி அறிய விரும்பினர் . 'ஒரு குழந்தை இருக்கிறது 'என்று சொல்ல ...பாசம்பெருகி விட்டது . '' உங்களோட வந்தவர் 'அவரா।' என சிறுமிகள் கேட்டு பகிடி பண்ணத்தொடங்கி விட்டனர் . ஒரு மணி நேரத்திற்குப் பிறகு . ராஜன் தொங்கலுடன் வந்து விட்டான் . திரும்ப , மாலை மங்கத் தொடங்கி விட்டது . பின் கரியலில் இருந்தவள் ஏதோதோ பேசி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் . ''என்ன ரொமான்ஸ் பிறக்கிறது '' என்று கூற குட்ட முடியாததால் ஒரு பெரிய கிள்ளல் . ''எடியே வலிக்கிறதடி '' என மறுபடியும் 'கிள்ளல் '. உனக்கு என்னவோ நடந்திருக்கிறது ..என்று சொல்லிச் சிரித்தான் .
ஜானகியக்கா அவர்களுக்கும் சமைத்திருந்தார் . அவனுக்கு வெட்டுறதில் கவனமாகவிருந்தான் . அவள் , ...முதல் தடவையாய் சென்றதால் ஒவ்வொன்றையும் அதிசயமாக விபரித்துக் கொண்டு , இடையே '' அக்கா , சாப்பாடு நல்லாய் இருக்கிறது '' என்றும் மெச்சினாள் . '' என்ன ராஜன் வாய் திறக்க மாட்டீர் போல இருக்கிறது '' என்று கேட்க '' கன உழக்க வேண்டியிருந்தது , சிரமதான வேலை . தேனீரும் இரண்டொரு பீற்றூட் கரட் சன்விச் மட்டும் தான் அவன் சாப்பாடு . அவனுக்கு ரொம்ப பசி அக்கா '' என்றாள் . அவன் ஏறிட்டு மனிசியைப் பார்த்தான் . அவள் அவனை கவனித்து கொண்டிருந்திருக்கிறாள் . கண் கலங்கியது . தோழர்களை சந்திக்கும் ஆசையில் பசியை தாங்கிக் கொண்டிருந்தான் . பெடியள் மத்தியில் எங்கே சாப்பாடு ? . அவளுக்கு ஏக கவனிப்பு . அவனுக்கு பசி பழகி விட்டது .
செல்வன் உறக்கத்தில் கிடந்தான் . தூக்கிக் கொண்டு விடை பெற்றார்கள் . பெடியனையை வளத்திப் போட்டு , அவள் ராஜனைச் சீண்டினாள் . '' நான் ஏன் கட்டையாய் இருக்கிறேன் ? '' என்று கேட்க , சாப்பிட்ட பிறகு வீமன் போல பலம் வந்திருந்தது . அவளை அலாக்காகத் தூக்கி '' யார் சொன்னது கட்டை ..என்று , தொடும் அந்த வளையை " என்றான் . அவள் வளையைத் தொடவில்லை , வாய்ப்பாக தலை வந்திருந்தது . ஒரு பெரிய குட்டு . அவள் கை தான் வலித்தது . முகத்தை சிணுங்கினாள் . அவன் அப்படியே அவளை ஒரு சுற்று சுற்றினான் . '' பொடி முளித்து விடப் போகிறது . விடும்ப்பா '' என்றாள் . அவன் அவளை தழுவி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் . அவளுக்கும் களைப்பு தான் . குழந்தைக்குப் பக்கத்திலே போய் படுத்துக் கொண்டாள் . பக்கத்தில் இருக்கிற வாசிகசாலைக்கு பாண்டியோட அலட்டப் போனான் . '' அலைந்துப் போட்டு வந்திருக்கிறாய் , போடாப்போ'' என்று அனுப்பி விட்டு அவனும் வீட்ட போய் விட்டான் . குழந்தையோடு நித்திரையாகி கிடந்தாள் . அவளுக்கு பக்கத்திலே படுத்துக் கொண்டு ஓலைவேய்ந்த மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தான் .
6. சரவணை
அடுத்த ஞாயிறு , அன்டன் வீட்டாருடன் கோவில் பிரார்த்தனைக்கு சென்றார்கள் . அதற்கடுத்த கிழமை வேலணையிலுள்ள சரவணையில் ...தேவப்பணி . கடல்க்கடினர்கள் காரைநகர் துறையை பொதுமக்களுக்கு ...தடுத்து மூடி விட்டிருந்தது . கிராமத்துறையூடாகவே இடையில் இவர்களுடைய தாமரைத்தோழர்களும் படகுச்சேவையை நடத்தினார்கள் . அதில் ஒன்றில் இவர்களுக்கு இலவச கடல்ப் பயணம் . சைக்கிளையும் ஏற்றி அலட்டிக் கொண்டு போனான் . காவேரிக்கு கடலில் போவது ...முதல் தடவை , திரிலாக இருந்தது . அவனுக்கு தேவாலயத்தில் கேள்விப்பட்ட செய்தி வயிற்றை கலக்கியது . ஒருநேரம் , அல்லைப்பிட்டிப்பகுதியிற்கு செல்லடிக்கப்பட மக்கள் ஊர்காவற்றுறைப்பக்கம் ஓடுபட்டார்களாம் . இவர்கள் சென்ற தேவாலயத்து ஆயர் ஒருவர் , அவர்களை கோவில் தங்க வைத்து உதவிகள் புரிந்தார் . அவரை பிறகு கடற்கடினர் கடத்திச் சென்று ...அன்று வரையில் ஒரு செய்தியும் இல்லை . காணாமல் போனவர் பட்டியலில் அவரும் ஒருத்தராகிப் போய் விட்டார் . இதே போல , மன்னாரில் .. என பல இடங்களிலும் மதத்தலைவர்களும் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள் .
வரும் பொழுது வங்களாவடியில் அவன் , சுதர்சனன் ஒரு வெல்டர் , மானிப்பாயிலிருக்கிற வெல்டிங்கராஜில் வேலை பார்க்கிறான் . தோழர் வீட்டில் , அவன் மனைவியும் மூன்று சிறு பிள்ளைகளும் இருந்தார்கள் , காவேரியை விட்டு சென்றான் . காவேரியோடு ..சிறுசுகள் ஒட்டிக் கொள்ள அக்காவுக்கும் ஒரு நேசம் பிறக்க ..., அங்கிருந்த சைவக்கோவில் தேர்முட்டியில் இருந்த தோழர்கள் சிலரைப் போய்ச் சந்தித்தான் . அவனுக்குத் தான் தேனீரோ , உணவுப்பருக்கைகளோ கிடைப்பதில்லை . முந்தியெல்லாம் இங்கேயிருக்கிற ...(இவர்களுடைய) காமிபில் சுடுசோறும் கறுவாட்டுக்குழம்பும் வெட்டிப் போட்டு வருவான் . காவேரியோடு... நின்று மினக்கெட முடிவதில்லை . அரை , முக்கால் மணித்தியாலம் நின்று விட்டு விலகி விடுகிறான் .
இன்னொரு நாள் , காரைநகர் பாதை போன்று கடலுக்குள்ளாகச் சென்ற புங்குடுதீவு பாதையில் காவேரியை சைக்கிளை உழக்கிக் கொண்டுச் சென்றான் . அங்கே , இவர்களுக்கு 'காம்' இல்லை . சந்திப்பு மையம் வங்களாவடி தான் . அங்கே , மரக்கன்றுகளை வளர்க்கிறது போல பனங்கன்றுகளை நட்டு சதுர வேலி அடைத்து வளர்க்கிறது ஆச்சரியத்தை மூட்டியது . வடலிகள் குறைந்து போய் விட்டதாம் . யாழ்ப்பாணத்து பெரும்பாலானக் கிராமங்களில் வடலிகள் மலிந்து தானாகவே பனைமரங்கள் பெருகி முளைத்து விடுறது வழக்கம் . அவன் அதைக்குறிப்பிட '' நெடுந்தீவில் ஆலமரக்கன்றுகளையே நட்டு வளர்க்கிறார்கள் , மிகப்பழைமையான ஆலமரம் எல்லாம் அங்கே நிற்க்கின்றன''என்ற புதுமையான செய்தியை அவ்விடத்தாக்கள் தெரிவித்தனர் . நெடுந்தீவு ஈழகடற்கடினரின் கட்டுப்பாட்டில் கிடக்கிறது . போக முடியாது . முன்பொரு நேரம் அங்கேயிருந்து வந்த குமுதினிப்(படகு)பயணிகளைத் தான் கடல்க்கடினர் இந்த புங்குடுதீவுத் துறையில் வைத்து கொடூரமாக கொன்றார்கள் .
'' ஒரு காலத்தில் நெடுந்தீவில் , வீட்டு வளவுகளில் பருத்தி வளர்க்கப்பட்டது போல , புங்குடுதீவு வீடுகளிலும் புன்னை மரங்கள் வளர்க்கப்பட்டன . இரண்டும் அறவே அரசியலின் வெப்பத்தால் அழிந்தே போய் விட்டன '' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள் . ராஜன் ஒரளவு ... இடங்களில் திரிந்தவன் . திரியாத காவேரிக்கு அவை எல்லாமே புதியஅனுபவங்களா இருந்தன . அவளும் சைக்கிள்ஓட பழகி இருக்க வேண்டும் . இப்ப சைக்கிள் விட தெரியாதவளாக இருந்தாள் . ''பழகடி '' என்று கேட்டுப்பார்த்தான் . "பழக வரவில்லை '' என்று சொல்லுறது ... பாவமாக இருந்தது . ஏதாவது சொன்னால் அழுதிடுவாள் போல இருந்தது . நெடுக பாரில் , கரியலில் இருந்து வர அவளுக்குத் தான் பின்புறம் அண்டும் ,நோகும் . அதற்கு சாக்கு சுத்தி என எத்தனை வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது .
தீவுகளில் சைவக்கோவில்களுக்குச் சமமாக தேவாலயங்களும் கிடந்தன . அவற்றில் சிறிய வாசிகசாலைப் போல சிலுவை மண்டபங்கள் அதிகம் என இருந்தது தான் ராஜனை வியப்பில் ஆழ்த்தியது .
7. வேதபுலம்
''எரிமலை என்று வெடிக்கும் ...'' என்று கூட வந்த குணா , ராஜனின் தம்பி பாட நிறுத்தடா" என்று தம்பியை அடக்கி விட்டு , " நீ ஒன்றும் வெடிக்க வேண்டாம் .சாதாரண மனிதனாகவே இருந்து விட்டுப் போ '' என்று ராஜன் கூற எல்லோரும் சிரித்தார்கள் . ஆனால் , இந்தப் பேச்சில் விசயம் இல்லாமலில்லை . உலகதிற்கு , ரஸ்யாநாடு தலைமை தாங்கி விடுமோ ...என்ற அச்சம் முதலாளித்துவதுக்கு ஏற்பட்டு விட்டிருக்கிறது . அது தான் சதா செயற்கையாக போர்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது . இரண்டாவதுப்புரட்சியை ஏதோ ஒரு நாடு முன்னெடுக்கவே போகிறது . அது ரஸ்யாவாக இருக்கலாம் . இல்லை , வேற நாடாகவும் இருக்கலாம் கலிகாலம் அவ்வளவுக்கு முற்றிப் போய்க் கொண்டிருக்கிறது . ''ஆஹா என்றெழுந்தது யுகப்புரட்சி .." என்ற பாரதியின் வார்த்தைகள் பொய்யாகப் போகாது .
'' சிந்திக்கத் தெரிந்த மனித இனம் ,. சீர் கெட்டுக் கிடப்பதேன் , காலங்கள் வருமென்று காத்துக் கிடப்பதும் வீண்! "என்ற வரிகளை நவீனின் பழக்கத்தால் தம்பியும் சமயசந்தர்ப்பம் தெரியாமல் இடைக்கிடை பாடித் தொலைக்கிறான் . கேட்கிறானில்லை . இங்கே வந்த இடத்தில் அயலில் , அவனும் ஒரு பெட்டையைப்பார்த்து மையல் கொண்டு முடித்து இங்கேயே ...இருக்கிறான் . அவனைப் பார்த்து .....ஆரம்பித்து விடுறான் ராஜன் அவனை. நிறுத்த முடியாது தவிக்கிறான் . ஒவ்வொரு இயக்கத்துக்கும் இன்னொரு இயக்கத்தின் பாட்டு பிடிக்காது . தாமரை வரிகளையே எடுத்து விடுறான் , போறவன் ஒரு நெருப்புப்பார்வை பார்க்கிறான் . ''பிள்ளை பிறந்த பிறகு தான் உனக்கு இந்த அச்சம் புரியும் . தனிய இருக்கேக்க இஷ்டப்படி பாடு , வீதியில் , தயவு செய்து பாடாதே'' சொன்னால் கேட்கிறானில்லை .
பிறகு காலத்தின் கோலம் எத்தனை தூரம் மாறிப் போய் விட்டது . கட்டியிராவிட்டால் ... இவனும் வடமராட்சி, சிறு பகுதிக்கு பொறுப்பாளராக இருந்திருப்பான். இவன் மேலும் பாத்தி கட்டி புல்லை கூட வளர்த்திருப்பார்கள் .
கழுகு , தாமரை மேலும் வேட்டை யும் தொடங்கி விட்டது . இவனையும் , தம்பியையும் உடனடியாக அந்தோனியாயும் ஜேம்ஸாகவும் மனைவிமார் மாத்தினர் . காவேரி , இதில் எல்லாம் புத்தியுடையவள் . தம்பிக்கு பீற்றர் பிறக்க இருந்தான் . கழுகு ,பொறுப்பாளர் என நவீனைத் தான் போட்டுத்தள்ள தேடியது . அவன் கொழும்புக்கு ஓடினான் .
இப்ப , ஆறுதலாக சூழலை கவனிக்க கூட நேரம் கிடைக்கிறது
அயலில் இருந்த அமெரிக்க தமிழ்க்கலவன் ...கேவலமான் நிலையில் ஓடு உடைந்து , அரைச்சுவர் உதிர்ந்து கொட்டுப்பட இலட்சியமற்றிருந்தது ஆசிரியர் வருகை வேறு .... குறைவு . அதனாலே நெடுக இந்த சமூகமே பின்தங்கிய நிலையில் இருக்கிறது . இவள் படித்த போது பெரிய பள்ளிக்கூடத்திலும் சிறுவர் வகுப்பு ஏற்பட்டு விட ..அதிபருக்கு அவள் அப்பா மீது மதிப்பும் ,மரியாதையும் இருந்ததால் அவளை உடனடியாகச் சேர்த்துகொண்டார் . கிராமத்துக்கு சிறிய பள்ளிக்கூட நிலை தெரியும் . அரசாங்கத்திற்கு எங்கே களநிலமை தெரிகிறது . அது எப்படி தமிழரை மேலும் ஊனமாக்கலாம் என்ற சிந்தனையில் ...எப்பவும் கிடக்கிற ஜென்மம் . ஆனால் , வடமராட்சியில் அவனும் தம்பியும் அமெரிக்கன் தமிழ்பாடசாலையில் தான் 5ம் வகுப்பு வரையில் படித்து , மற்ற மூன்று வகுப்புகளையும் பெரிய பள்ளியிற்குச் சென்றுபடித்தார்கள் . அங்கே பள்ளியை ஊர்ச்சனமே திருத்தி இரு ஆசிரியரை அனுப்பினாலும் ...கண்காணித்து நல்ல நிலையிலே வைத்திருக்கிறார்கள் . பெரிய பள்ளிக்கூடமும் அதை தனது சிறுவர் பள்ளி ...என பராமரிக்கிறது . மக்களின் புத்திசாலித்தனங்களைப் பொறுத்தும் சிற்சில மாற்றங்களும் இருக்கின்றன . ஆனால் எல்லா இடங்களிலுமே அன்றாட காய்ச்சி வர்க்கத்திற்கு 8ம் வகுப்பிற்கு மேலே படிக முடியாமலே கிடக்கிறது . அதை விளங்காத பிரகிருதிகள் 'சாதிப்பிரச்சனை என்று சிலாக்கிறார்கள் . அது வேறப்பிரச்சனை.
சோனகர் , வித்தியாசப்படுத்தி தமிழை பேசுவது போலவே கிருஸ்தவர்களும் பேசுகிற போது சில வித்தியாசங்களை வைத்திருக்கிறார்கள் . இப்பவும் காவேரியின் ஒரு முறைப்புக்குள்ளே எல்லா ஆராய்ச்சிகளுமே அடங்கி ஒடுங்கி போய் விடுகின்றன .
ஆயராலே அவனுக்கு விவசாயப்பண்ணையில் வேலை ஒன்றும் கிடைத்தது . இப்படி ஒரு வேலை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கு தானே விடுதலைக்கு போராட நினைக்கிறார்கள் . 'புத்ததிற்கு , கிருஸுதுக்கு , முஸ்லிம்க்கு ...மாறினால் தான் வேலை 'கிடைக்கும் என்றில்லாமல் , சமமாக..கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது அவா,கனவு எல்லாமே . அரசிற்கு நாட்டை புத்தநாடாக்கனும் என்ற நரிப்புத்தி , இந்த சிலந்தி வலையில் சிக்கி காணாமல் போய் விடுறது தான் மற்றவர்களின் தலைவிதியா ? ,
என்ன.. , வாழ்க்கை இது ? . வலையை அறுத்துதெறிவது . ஒவ்வொருவரின் கடமை , இல்லையா ? இப்படி பேசுறது மார்க்சியமில்லைரின்யய்யா , மனிதமய்யா ! .இன்று , மனம் திறந்து வெளிலில் கொட்டிப் பேச ... தோழர்கள் என அயலில் ஒருவருமில்லை . குமுறல்களை உள்ளே அடக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது . ''எரிமலை என்று வெடிக்கும் '' தம்பியைப் போல அவன் வாயும் முணுமுணுக்கிறதே . அடச் சீ ! , இது ஒரு வியாதி ! .
தேவாலயம் , நாலுப்பிள்ளைகளின் பிறந்தநாள்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி , அவர்கள் முன்னேற்றங்களையும் அக்கறையுடன் கவனித்து வருகிறது . அதற்கு நன்றியுடையவனாகவே இருப்பான் . இருக்கிறான் .
ஆனால் , ஜனநாயக வழியில் எல்லாம் நடந்திருந்தால் இன்னும் நல்லாய்யிருக்குமே ! எல்லாத்திலுமே தரப்படுத்தல் , ஊழல்களை வைத்திருக்கிற தற்போதைய வாழ்வியலில் அவனால் சுயமாக... நீச்சலடித்திருக்க முடியாது . பிள்ளைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள் . அவனும் அந்த நீரோட்டதிலே கிடக்கிறான் . இவ்விடத்தில் அதிகமானவருக்கு வேலைகள் எடுத்துக் கொடுத்ததிற்காக சிவபுலம் '' வேதபுலம் '' என பெயரையே மாற்றிக் கொண்டு விட்டது . வேலை முக்கியமானது . அது வாழ்க்கையின் இலட்சணம் . 'வேலை' இல்லை என்றால் ...வாழ்க்கையே இல்லை . பிறப்பு வேலையை துரத்திக் கொண்டு தானேயிருக்கிறது .
கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு , கொல்லப்பட்டு , ஊமைகளாக்கப்பட்டு , கண்டறியாத சட்டங்களால் சிறைப் பட்டு... வதிவிடங்களில் அன்னியரான சிங்களவர் குடியேற்றப்பட்டு , எத்தனைப்புலங்கள் வேதப்புலங்களாகி ......இந்த காட்சிப்பிழைகள் தாம் வேண்டாமே !
. மீட்சி?? அதை மாகாணவரசே பார்த்துக் கொள்ளட்டும் . ஈழவரசு , எல்லாத்திலும் மூக்கை நுழைக்காதிருந்தாலே பெரிய உபகாரம் . ''சாதிப்பிரச்சனை மிக மோசமானது '' எனக் கூறியும் நுழைக்க வேண்டாம் .
8. அன்று... ,
நவீன் தந்த புத்தகம் ஒன்றை ....பொழுது போகவில்லை என்று எடுத்து வாசித்த போதே அவனுக்குக்குள் இருந்த பல கட்டுக்கள் அவிழ்ந்தன . வாசித்ததை பாண்டியுடன் கதைத்துக் கொண்டிருந்தான் . ராஜன் ''டேய் , இங்கே ,அரசர் காலத்திலே அதாவது 15ம் நூற்றாண்டிலே யும் அதற்கு முந்தியும் , சாதி , ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லையடா . அச்சுயந்திரமும் கண்டு பிடிக்கப்பட்டு , பணமும் அச்சிடப்பட்ட பிறகே , அது ...பிரச்சனையாய் உருவெடுத்தது '' " என்றான் . தொடர்ந்து
''அன்று , பண்டங்கள் அனைத்தும் குடிசைத்தொழிலாக , கைத்தொழிலாகவே செய்யப்பட்டன . எல்லாருக்கும் வேலை இருந்தது . வேலை தேடி போக வேண்டிய அவசியமே இருக்கவில்லை . அவரவர் விரும்பிய வேலைகளில் பொறுத்திக்கொண்டார்கள் . மேலே , கீழே என எவருக்குமே மாறுகண் பார்வை ஏற்படவில்லை . எப்படியோ கற்றுக் கொண்டார்கள் . வேலைகள் முடிவில் சலிக்கவே செய்யும் . எனவே கோவில்களின் திருவிழாக்களில் ...சிலம்பு , காவடி ஆடுதல் , வர்மக்கலை , கூத்து...என பல விளையாட்டுக்களையும் சேர்த்துக் கொள்ள கலைகளாகவும் மலர்ந்தன
படைக்குறிச்சிகளில் , ஆயுதப்பட்டறைகள் இருந்திருக்கலாம் . பண்டமாற்று முறையில் வர்த்தகம் நிலவியபோது , அதிக பண்டங்களை வைத்திருப்பவர்களே வசதியானவர்களாக திகழ்ந்தார்கள் . இன்றும் இப்படி கிராமங்களில் வடக்கு , தெற்கு என அழைக்கப்படுகிற ஓரிரு வீடுகள் காணப்படுகின்றன . இந்த வீடுகளில் பால் , தயிர் , வெண்ணெய் தொட்டு கோமேயம் ஈறாக மக்களுக்கு வேண்டிய சகலத்தையும் பெற்றுக் கொள்ளலாம் . விவசாயமும் , கால்நடை வளர்ப்பையும் கொண்ட கூட்டுக்குடும்ப வீடுகள் , பழையகால எச்சமாக கூட இருக்கலாம் . அரசர் காலத்தில் , யாரும் தொழில்களைக் கேவலமாக பார்க்கவில்லை. குடும்பமும் அழகாக இருந்தது . உதவியும் .. வாழ்ந்தார்கள் . வாழ்வியலையே முறையாக கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள் . ' பண்டாதாரம் ' என்ற சொல் 'பொருளாதாரம்' என்றாகியும் இருக்கலாம்என்று கூறிச் சிரித்தான் .
இன்று, வேலையின்மை மாபிரச்சனை ? . எப்படி ஏற்படுகிறது ? . நிறுவனங்கள் பல வேலைகளை பறித்தெடுத்து ...டிமாண்டில் வைத்திருக்கின்றன . காந்தி , ராஜாஜி போன்றோர் குலக்கல்வி முறையை மீளக் கொண்டு வந்து வேலை இல்லாப்பிரச்சனையை நீக்க விரும்பினார்கள் எனப் படுகிறது . தி.மு.க வினர் , நிலவுற சாதி வழக்கிற்கு (இருந்து) சீர்திருத்தங்களை ஏற்படுத்தக் கூறுகிறார்கள் . தொழிலைக் கற்க தொழில்கல்வி நிலையங்களும் பிறிம்பாக இருக்கின்றன . பார் . , அதில் ,படித்து முடித்தாலும் வேலை எடுக்க முடியாத நிலை . நேரவிரயம் , இரட்டிப்புச் செலவு செலவாகிறது . இதை விட குலக்கல்விமுறை எளிதும் சிக்கனமுமல்லவா . அதில் சொலிற்றாய் ஒரு வேலையும் இருக்கிறதல்லவா .
9. கர்த்தரே ஆசீர்வதியும் !
அன்ரிரவு பாண்டி கொட்டிலுக்கு வரவில்லை . சண்டிலைப்பாய்க்குப் போயிருக்கலாம் . அங்கே அவன் தங்கச்சியிட குடும்பம் இருக்கிறது . போனவன் வரவில்லை போல இருக்கிறது. தேவபுலத்தில் இருந்திருந்தால் நிச்சியம் வந்திருப்பான் . நிலவைப்பார்த்தான் . மெழுகுதிரி ஒன்று எரிந்து முடிந்திருந்தது . ஒன்றுக்கு மேலே கொண்டு வாரவனில்லை . மேகம் , நிலவு முழுதையும் மறைக்காமல் ...அவனுக்கு இரக்கப்பட்டு மங்கல் ஒளியாக எரிய விட்டிருந்தது . " யார் கூப்பிட்டாலும் போகாத ராஜா , ராணிமார் ,யமன் வந்து கூப்பிட்டதும் ஏறியிடுறார்களே பூந்தேரில்..! " என்ற கவிதை வரிகள் திடீரென ஞாபகத்திற்கு வர ' உயிர் ' ..இருக்கிறவரையில் தான் யாருமே வாசிக்கப்படுற புத்தகம் என்றும் அவனுக்கு தோன்றியது . கழன்ற பிறகு ...கனகாலம் கையில் வைத்திருக்கபடாது தூசுகளுடன் கனிப்பாரற்று கிடக்கிற பரணுக்குள் எறிந்து விடப்படுகிறது . நெருங்கியவர் மட்டும் தான் நினைவுகளை தாலாட்டிக் கொண்டிருப்பர் .
ஒரு தடவை , இயல்பா பழகிய முகங்களை எண்ணிப் பார்த்தான் .
ஊரிலே( வடமராட்சி) , படிப்பித்த ஆசிரியை ஆசிரியர்மார் ... என பற்று வைத்தவர்கள் எத்தனைப் பேர்கள் ! அவனே எத்தனை குத்துக்கரணங்களை போட்டு விட்டான். இன்று அவனுக்கு பிறக்கிற பிள்ளைகளுக்கு , வடமராட்சி சொந்தங்களுடனான கொண்டாட்டங்களும் அறுபட்டு விட்டிருப்பதால் ,அவன் சரிதம் தெரியாமலே பற்றி போய் விடப்போகிறது . எல்லாம் சகஜம் என்ற தோற்றத்தில் வாழைபழத்தில் எத்தனை புதிய ஊசிகள் ஏற்றப்படுகின்றன .
சாதியம் போல மதமும் ஆழ வேரோடியவை . எதிலுமே வன்மங்களை ஏற்றி விடுவது சுலபம் , இறக்குவது... கஷ்டம் . புதிய நம்பிக்கைகளுடன் ஊறிப்போறவர்க்கு பழைய வாழ்க்கை ஒட்டப் போவதில்லை . பிரிபட்டே போகிறார்கள் .சமூகத்திற்கு ( இனத்திற்கு) ' தனி மனிதசுதந்திரம் ' எத்தனை மடங்கு முக்கியமானது என்பது தெரியாமலே கிடக்கிறது .
ஆரம்பத்தில் , விடுதலைப்போரில் முஸ்லிம் இளைஞர்களும் கூட கணிசமாக பங்குபற்றியிருந்தார்கள் . ஈழ ராணுவத்தில் , ' ஊர்காவல் ' பிரிவை ..ஏற்படுத்தி மேலும் சேர்வதை நிறுத்தி விட்டது . சேர்ந்தவர்கள் விடுதலையுடன் ஒட்டிய நைந்த இழைஇணைப்புகளுடன் பயணிக்கவே செய்தார்கள் . அஸ்ரப் கூட அப்படிப்பட்ட ஒரு இழையாக இருந்திருக்கலாம் . என்று ராஜனுக்கு தோன்றியது இல்லாவிட்டால் , அவர் வாக்கினில் எப்படி தெளிந்த நீரோடை பிரவாகித்திருக்க முடியும் ? . அப்படி , எழுந்த இளைஞர்கள் கடைசியில் தோற்றுப் போய் விட்டார்கள் . நம்பிக்கை நட்சத்திரமாக எழுந்த முஸ்லிம் காங்கிரஸின் கூரும் மலுங்கி விட்டது .
மதப் பாடசாலைகள் இருப்பதைப் போன்றில்லாமல் முஸ்லிம் மாணவர்களும் ஒன்றாய் சேர்ந்து படிக்கிற பொதுப் பாடசாலைகளும் எழ வேண்டும் . இந்துக்கல்லூரி ,கிருஸ்தவக்கல்லூரி , முஸ்லிம்கல்லூரி என்றிராமல் எல்லாரும் சேர்ந்து படிக்கிற மாதிரியான பொதுக் கல்லூரிகள் கட்டாயம் வடக்கு , கிழக்கில் எழவே வேண்டும் . காந்திக்கல்லூரி , பாரதியார்க்கல்லூரி , கலாம் கல்லூரி...என்ற மாதிரி என்ன பெயரை வேண்டுமானாலும் சூட்டுங்கள் . தனித்துவமானவர்கள் எனப் பேசப்படுற விதிமுறைகளை எல்லா மதங்களிலும் , சமூகங்களிலும் . மொழியிலும் , சாதியத்திலும் , இயக்கங்களிலும் கடைப்பிடிக்கிற ஒருவித அடிப்படைவாதச் சாயல்களே ! . சமமாக மதிக்கப் பழக வேண்டும் . ஹஜ்ஜிமார் (பெரியவர்கள் ) பொதுப் பாடசாலை மாற்றத்திற்கு ...வித்திடவே வேண்டும் . ஒரு காலத்தில் இந்துக்கல்லூரியில் விளையாட்டில் சாதனைப்படைத்த ஜமால்டீன் , ஓட்டவீரனை ...எவரால் மறக்க தான் முடியும் ? யாழ்ப்பாணத்தில் , அவர்க்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது .
முஸ்லிம் இளைஞர்களும் இயக்கங்களும் பிரச்சனைப்பட்ட பிறகு , விலகலுற்ற பிறகே .... பழைய பேப்பர் , பாத்திரம் வாங்கிறவர்கள் மேல் இராணுவத்துடன் தொடர்பில் இருந்து காட்டிக் கொடுக்கிறார்கள் எனற சந்தேகங்கள் எல்லாம் முளைத்தன . அச்சமயம் , இராணுவமும் , குச்சுவீட்டிலிருந்த அப்பாவிப் பெடியள்களையெல்லாம் சுட்டு , சுட்டுத் தள்ளின .
அப்பவே, செல்வன் பிறந்து விட்டான் . வளர்ந்த பிறகு பாண்டி கதை சொல்லி ,சொல்லி ...அவன் மேல் அனுதாபமுடையவனாகவும் வளர்கிறான் .
மாமா இறந்த பிறகு , அவனுக்கு தற்போது உயிருடன் இருக்கிற அவருடைய நெருங்கிய நண்பரான வெள்ளையப்புடன் மட்டுமே நாட்டு அரசியல் பற்றி கொஞ்சம் பேச முடிகிறது . என்ன , சக்கர நாற்காலியில் இருக்கிற அவரை வீட்டிலே இருந்து உருட்டி வெளியில் கொண்டு வரவேண்டும் . " இப்ப நான் உங்கட தம்பி போல இருக்கிறேன்" என்று தன் தோற்றத்தை அவருடன் ஒப்பிட்டு சொல்லிச் சிரிப்பான் . அவரும் அப்புலத்திலே மதம் மாறாதவர் . அவர் ,இங்கே தேவாலயம் எழுகிற போதே வயதான ஆயர் தோற்றத்தில் , ' வெள்ளை தாடியில் முகம் மறைக்க , வெள்ளைக்காட்டுத் தலையுடன் இருந்தார் . அவரை வருத்த இளம் ஆயருக்கு மனம் வரவில்லை . அவரின் பிள்ளைகள் வாரிசுகள் எல்லாமே தேவ சேவைக்கு வந்து விட்டார்களே , போதும் தானே ! , சமரசவாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் . இப்ப , வயசு90 ஐக் கடக்கிறது ., உடல் உறுதி குலைந்தாலும் மறதிநோய் ...ஏற்படவில்லை . விடுதலைக்குழுக்களையும் அனுதாபத்துடன் பார்த்தவர் .
அவருக்கும் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் . அவனும் பாண்டியுமே உருட்டி, உருட்டி வந்து அங்க , இங்க இருந்து கதைக்கிறவர்கள் . அவர் பிள்ளைகள் வீட்டிலேயுமிருந்து எல்லாம் இவர்களுக்கும் சாப்பாடு , தேனீர் எல்லாம் வருகின்றன . அவ்விடத்தில் , வேத மாற்றதிற்கு பிறகு , எல்லார் வாழ்விலும் முந்தியதைப் போலில்லாத ஒரு எழுச்சி , வளர்ச்சி காணப்படுகிறது . அதேசமயம், சாதியம் ஆக முந்திய மாதிரியான நிலையிலும் இல்லை . இயக்கத்தை இளக்கமாக பார்த்தவர்கள் அவனோடும் நின்று அமைதியாகக் கதைக்கிறார்கள் . சனத்தொகை குறைந்து விட்டது . கதைக்கிறதுக்கு ஏற்பட்ட ஆள் பஞ்சம் கொடுமை தான் .
10. ஒளிவிளக்கு
" டேய் , மெழுகுதிரி , அல்லது நிலவு வெளிச்சத்திலே ...சந்திக்கிறோம் . நவீனும் , நாமும் , மனிதம் பத்திரிகையில் , சில்லாலை விமல் எழுதிய இயற்கைவாயுக் கட்டுரையை வாசித்துப்போட்டு ... அலட்டியது , .கதைத்தது , நினைவிருக்கிறதா ? " என்று கேட்டான் . ''இந்த தாமரையால் நாம் கண்ட கனவுகள் எத்தனை , இப்ப நினைத்தாலும் மனம் கண்ணீர் வடிக்கிறது '' . '' நீ நினைக்கிறது புரியிறது . செல்வன் சிவில் பொறியியலாளர் . அதை ...முயற்சித்துப் பார்க்க விரும்புகிறாய் . வேதக்கோயிலில் வேணாம் . வாசிகசாலையில் விளக்கேற்றிப் பார்க்கலாம் தான் " என்று சார்பாக சொன்னான் .
' பட்சி சொல்லுறது ... 'பாண்டி கொஞ்சகாலம் தான் இருக்கப் போறேன் " என்று கூற அவனை முளுசிப் பார்த்தான் . காவேரிக்குப் பிறகு ...உடைந்து போய் கொண்டிருக்கிறான் . அதை நோக்கியே அவன் பேச்சுக்கள் இடம்பெறுவதை கழிவிரக்கத்துடன் பார்க்கிறான் . நவீனோடு பேசி எவ்வளவு வருசம் இருக்கலாம் ? . நினைத்துப் பார்க்கிறான் . முற்பதுக்கு மேலே ...இருக்குமா ? . விமல் வேதக்காரன் .கோயிலே கதியெனக் கிடந்தவன் . ஆங்கிலம் எழுதும் வல்லமை , வாசிப்புமிருந்தது . ஊரும் , கோயிலும் அவன் மேல் .. பலத்த.எதிர்பார்ப்புகளை வைத்திருந்தன . கையில் அகப்படுறதையெல்லாம் வாசித்துத் தள்ளுவான் . பல்கலைக்கழக மாணவன் . அங்குள்ள ஆயரிடமே காட்டினான் , அவர் கிருஸ்தவ இளைஞர் மன்றதின் ஊடாக கொழும்பு , மட்டக்களப்பு ,இந்தியா ..என மத இளைஞரமைப்புக்களை சந்திக்க சென்று வர உதவினார் .
பையிள் வாசிப்பால் 'விடுதலையில் ஈடுபடுவதே..' தர்மம் என கருதி கட்டுரைகள் எழுத வெளிக்கிட்ட அவனுக்கு ஈழத்தமிழருக்கு 'சுய பொருளாதாரம் இருக்கவேண்டும்' என்று தோன்றி விட்டது . எழுதிய கட்டுரைகளைக் காட்டி 'மனிதன்' பத்திரிகை பிரசுரிக்க விரும்புவதை ஆயருடன் கதைக்க , அவற்றை அவர்களின் அச்சுக்கூடத்திலிருந்தே வெளிவர உதவினார் . அழகான கட்டமைப்புடன் சிறுபத்திரிகையாய் வெளி வந்தது .
அதில் , போர்வெறியர்களினால் ...எதிர்கொள்கிற எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஈடுபட்ட ஆபிரிக்க இளைஞர்கள் ... இயற்கை வாயு தயாரித்த முறையைப் பற்றிய ஆங்கில கட்டுரையை விளக்கப்படங்களுடன் மொழி பெயர்த்து போட்டிருந்தான் . அவர்களுக்கு அந்த ஒரு பத்திரிகை கிடைக்க , வாசித்து விட்டு , அதை , ' முயற்சித்துப் பார்க்கணும் ! ' என்று பையித்தியத்தனமாக அலட்டினார்கள் . இலகுவான முறை. ஒரு டியூப் போன்ற ஓரளவு பெரிய பெரிய பரளில் மேல்மூடியில் றபர் பைப்பை காற்றிறுக்கமாக பொறுத்த துளை இடப்படுகிறது , பக்கவாட்டில் துளையிட்டு காற்றிறுக்கமான அடைப்புடன் சிறிய எஸ்லோன் பைப்பை வளைத்து ...பொறுத்தி உள்ளே இருக்கிற கரைசலைக் காட்டுகிற அளவுக்காட்டி , பக் ஃபயர் ஏற்படாமல் இருக்க சைக்கிள் டியூப்பில் சிறிய துண்டை சைக்கிள் கடைக்காரனுடன் மேல் மூடியிலிருந்து வார றபர் பைப்பில் சிறு துளையை ஏற்படுத்தி பொறுத்தி கிளையாக ஒட்ட வேண்டும் . றபர் பைப் முனையில் வெல்டிங் டோச் போல வால்வுடன் கூடிய உலோகக் குழாய்த்துண்டு . இவையெல்லாம் காற்றுக் கசிவு இராமல் அமைக்க வேண்டும் . பிளமர் , வெல்டிங் ஆள் , சைக்கிள் கடைக்காரன் உதவி (இவர்களின் )அனுபவ அறிவு தேவை . மிச்சம்படி பிளாஸ்டிக்பரளிலே கால்வாசிக்கு மாட்டுச்சாணம் , அதோடுகொஞ்சம் பச்சை இலைக்குழை, சாணத்தின் அளவில் நீரை ஊற்றி நல்லாய் கலக்கி விட வேண்டும் .
இரண்டு கிழமைகள் வெளியே ஒதுக்குப்புறத்தில் வைத்து விட உள்ளே நொதித்து இயற்கை வாயு உருப்பெற்று விடும் . பிறகு றபர் பைப் முனையிலிருக்கிற டோச்சைத் திறந்து லைற்றரால் பற்ற வைக்க சுடர் எரியும் . அச்சுடரைப் பயன்படுத்த வேண்டியது ...இன்னொரு விரிந்தப்பிரிவு . வாசிகசாலைக்கு ஒளிவிளக்காக ஒளிர ஒருமுறை தயாரிக்கிற வாயு இரண்டு கிழமைக்கு மேல் போதும் . திரும்ப புதுச்சாணக்கரைசல் என ஏற்படுத்தி ,ஏற்படுத்தி பாவிக்க வேண்டும் .ஒவ்வொரு முறையும் வெளிய கொட்டுற கழிவு நல்ல இயற்கைப்பசளை .மரக்கன்று , பூக்கன்றுக்கு போட்டு வர , ஏன் , கத்தரி வெண்டிக்குப் போடவும் காய்த்துக் கொட்டும் . பேச்சு பேச்சாகவே போய் விட்டது .
விமலும் ஏட்டுப்படிப்பாளி . எதையும் செய்து பார்க்கவில்லை , இதைப்போல பல எளியக் கண்டுபிடிப்புகளை எல்லாம் எழுதியே வந்தான் . அவை அவர்களுக்கு அலட்ட கிடைக்கவில்லை .
அடுத்தடுத்த நாள் ,அதைப்பற்றி செல்வனோடு கதைத்தார்கள் ...அவனும் ஓரளவு அறிந்திருந்தான் . அவன் கூட்டாளிகளோடு சேர்ந்து சேர்ந்து ஒருமாசத்திலேயே தயாரித்துக் கொடுத்தான் . விளக்குப் போன்றக்கட்டமைப்புடன் வாசிகசாலையில் ஒளிர வைத்த போது.. கூட வந்த ஆயர் ராஜனைப் பாராட்டி பேசினார் . தெருவோரம் விளக்காகவும் பயன்படுத்தலாம் என கோயில் திட்டமிட்டது . வீட்டுத்தோட்டம் வைக்கலாம் , சிறுபரப்புகளில் நெற்காணி, தோட்டம் வைத்திருப்பவர்க்கு பசளையை விற்கலாம் ...என ..சிறகடித்துப் பறந்தது .
சில வீடுகளில் முற்றத்தில் மஞ்சள் , இஞ்ஜி ,சேம்பு வைக்கிறதும் , பின்வளவில் பூமரம் , கத்தரி வெண்டி ,மிளகாய் ,சுண்டங்காய் என கொஞ்ச கொஞ்சப்பயிர் வைப்பதும் , வாழை , நெல்லி என மரம் நடுவதும் என சங்ககால முறை துளிர் விட அது உதவியது .
இப்ப , அவன் ஒரு கூசா ! . இந்த தனிமை ஆறு மாசமாக அவனை படாதபாடு படுத்துகிறது. அறுபதைத் தாண்டி தளர்ந்து போய் விட்டான் . பாண்டி அவனை " டேவிட் ஐயா'' என்று அழைக்க தொடங்க அது ஆயர் பிரான்ஸிஸ்க்கு பிடிக்கிறது . அதனால் , ராஜன் தேவாலயத்திற்கு வராமல் விடுவதை அவர் பொருட்படுத்துவதில்லை . காவேரி இருக்கும் மட்டும் எப்படியும் இழுத்துக் கொண்டு சென்று விடுவாள் . அப்பவெல்லாம் ஆயர் கூறுவதை வீட்டிற்கு வந்து ஒரு கொப்பியில் டயறி போல எழுதி பைபிளை படித்து வந்தான் .
நிறைய போதனைககள் , '' அட , தாமரை பேசாத பேச்சுக்களா , போதனைககளா ! '' , அவனுள் சிரித்துக் கொள்வான் . அம்புலிமாமாக்கதைகள் போல சில சுவாரசியமாகவும் இருந்தன . தோழர்களுக்கு மதநம்பிக்கைகள் குறைவு தானே , இருந்தால் என்ன ! .
11. புறவாழ்க்கை
இதுவரையில் , விடியலை எழுதாது வீழ்ந்த ஈழபோராளிகளின் சாக்கள் யாவும் அர்த்தமற்றவை தானா? . இடையிடையே அந்த புலம்பலும் அவனிடம் எட்டிப் பார்க்கும் . ஆயரிடம் '' அவர்களுக்கும் பிரார்த்தனை செய்யலாமா ? '' என்று ஒருநாள் கேட்டான் . ''மதத்தில் அரசியலைக் கலக்க கூடாது '' என மறுத்து விட்டார் .
இனியும் அரசியல் எனக்கு தேவையா ? '' என விரக்தியாயும் நினைத்தான்.
. அவனுடைய மூத்த பையன் செல்வன் அவன் குடும்பத்திலேயே(சந்ததியிலே) முதல் சிவில் என்ஜினியராக வேலை பார்க்கிறான் . அது பெரிய சாதனை ! . காவேரியால் தான் சாத்தியமாகியது . கிருஸ்தவத்திற்கு மாறி ,...அச்சமூகத்தினது உதவிகளைப் பெற்று குடும்பத்தை விளங்க வைத்திருக்கிறாள் . அவனுக்கு இலட்சியம் பெரிசு . அது , இது என்று பல தடைகளுக்குள் வீழ்ந்து கிடப்பவன் . சுயமாக நீச்சலடித்து முன்னுக்கு கொண்டு வந்திருக்க முடியாது . பிள்ளைகளின் எதிர்காலம்... தாயின் கைகளிலே இருக்கிறது .
. ஜூலைக்கலவரம் நடந்திரா விட்டிருந்தால் அவளும் அவனுக்கு கிடைத்திருக்க மாட்டாளா ? , இந்த முரண்னும் வேடிக்கையானதே .
காவேரி இருக்கும் வரையிலே அவனுடைய பேச்சில் ...சிந்தனைகள் இருந்தன .
இப்ப வறண்டு விட்டது. ''வானத்தைப் பார்த்தேன் , பூமியைப் பார்த்தேன் மனசிலே ஒன்றும் தெரியல்லையே ...''என்று முணுமுணுத்தான் . அவள் இருக்கையில்...அவன் ராசா . "கர்த்தரே " என்பதும் ஜெபம் செய்கிறதுமாக இருக்கிற அவளைப்பார்த்து சிரித்ததில் இரவில் எத்தனை தடவைகள் தலையில் விண்னென வலிக்க குட்டுகள் வாங்கி இருக்கிறான் . காதல் மனைவி , அவளை அணைத்து கொண்டிருந்ததில் தொடர்ந்தாற்போல் நாலு பிள்ளைகள் . கடைசி மேரிக்கு அவளின் 'அச்சொட்டானக்கண்கள் ' ஆச்சரியப்படுத்தின . அந்த கண்களைப் பார்த்து சிறிது ஆறுதல் அடைகிறான் .பெடியள்களுக்கு அவன் சாயலே அதிகம் . அவளின் நினைவலைகளும் அப்பப்ப அலையாய் வருகின்றன . அவளின் உயிர்ச்சித்திரம் நேரிலே தோன்றுகிறது . அவளுடன் பேசுகிறான் . பாண்டிக்கும் , தம்பிக்கும் யோசனையாயிருக்கிறது . அவள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் . அவனே முதலில் சென்றிருந்தால் நல்லாதாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது . பிள்ளைகளின் தெய்வம் அவள் . அவன் ...பிள்ளைகளுக்கு சுமை தானே .
.
12. கனவும் சுமை தான் ! .
ஒரு நாளிரவு , வாசிகசாலையில் இருக்கிற ராஜனைக் காணவில்லை என தேவபுலமே பரபரத்தது . பாண்டிக்கு , எங்கே போயிருப்பான் என்ற கவலையாய் போய் விட ...யோசித்தான் . முந்தி நெடுக சந்திக்கிற முருகமூர்த்தி கோவில் தேர்முட்டி அயலில் பூபதிமடத்தடியில் (பிரிவில்) இருக்கிறது . இரவிலே , தளர்ந்த வயசிலே அங்கே ஏன் போகப்போறான் ? . இருந்தாலும் " செல்வன் டோர்ச்சுடன் வா..போய்ப் பார்க்கலாம் '' என தார்வீதி ஏறி கோவிலடிக்குச் சென்றார்கள் . படிகளில் அடித்துப் பார்த்தார்கள் . ஒருத்தருமில்லை . ஆனாலும் , மனம் கேளாமல் ''மேலேயும் ஏறி பார்ப்போம் ''என்று இழுத்துக் கொண்டு ஏறினான் . மேடையில் அவன் சுருண்டு விழுந்து கிடந்தான் . அப்பவே பாண்டிக்கு விளங்கி விட்டது . சிவபுலம் இல்லை என்பதால் இங்கே வந்து செத்திருக்கிறான் . பாண்டிக்கு அவனை வாசிக்க முடிகிறது . ''ஒரு காலம் . இதுதான் எங்கட தங்குமடம் . கிராமம் முழுதும் தோழர்கள் இருந்தார்கள் . இங்கே வந்து ...கூடுவோம் . அந்த நினைப்பு வந்திருக்கிறது போல இருக்கிறது .''என்றான் . ''கிராமம் முழுதிலுமா தோழர்கள் இருந்தார்கள் '' என்று அச்சரியத்துடன் செல்வன் கேட்டான் .
இங்கே , பெடியள்களே சாதியத்தை உடைத்தவர்கள் . மற்றவர்களில்லை . போரில் ...கிராமத்தில் இளைஞர்களே இல்லாதது பேய் அடைந்தது போல மாறிப்போய் விட்டிருக்கிறது . பெடியள் இல்லாததால் பழைய காலம் கவிந்து மீளவும் தனிக்குறிச்சிகளாகத் தெரிகிறது . புதியவர்களான உங்களால்....நம்ப முடியாது தான் . புதிய ஆட்சியாளர் 'சாதி'பற்றிப் பேசுகிறார்கள் . அழித்து , சீரழித்து விட்டு சாம்பல் மேட்டிலிருந்து ...எதைப்பற்றியுமே பேசலாம் . 'வேதபுலமும் கூட சாதியத்தின் காரணமாகவே ஏற்பட்டது ' என நியாயம் கூட பிழங்கலாம் . அழிவுகளை ஏற்படுத்தி விட்டு தான் ...அரசியல் நடை போடுகிறது . செல்வன் , அப்பனை தூக்கிக்கொண்டு படிகளில் இறங்க '' நீ கட்டாயம் இயக்க மாற்றங்களைப் பற்றிப்படிக்க வேண்டுமடா'' என்கிற சோர்ந்து போன முகத்துடன் கிடக்கும் பாண்டியை அனுதாபத்துடன் பார்த்தான் . ஆங்கிலத்தில் , 'இயக்கம்' பற்றி ஒரு கட்டுரையுமில்லை ,அறுப்புமில்லை . இனி தமிழ்ப்புத்தகங்களை தேடி எடுத்து வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .
வானத்தில் நிலா தெரிந்தது . '' பாண்டியண்ணா இது தேய்பிறையா ? '' என்று கேட்டான் . இன்றைய பிள்ளைகள் நம்மை விட தைரியசாலிகள் தான் . வரலாற்றை சரி செய்து , அடுத்த படியிலும் ஏறி விடுவார்கள் ''என்று சிந்தித்துக் கொண்டு வந்தவன் , '' இல்லை நாலாம்பிறை ,வளர்பிறையாய் இருக்க வேண்டும் '' என்றான் . '' நண்பா , நீயும் தேய்பவனில்லை , வளர்பவன் தான் '' என மனதில் கூறிக் கொண்டான்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.