1. புத்தாயணப் புரிதல்.
பட்டுத்தான்
தெரிய
வேண்டியதாக
இருக்கிறது.
பறவைகளுக்கு
இலைகளின்
அருமை.
இறகுகளீன் பெருமை.
காலத்திடம்
இருக்கிறது
துளிர்ப்பதெல்லாம்
கவலைகளைக்
கடந்து.
துளிர்விடாத
போதிமரம்
பறவைகளுக்கானது
நம்பிக்கைகள்
வளர்க்க.
துளிர்த்த
போதிமரம்
இலைகளை
உதிர்க்கிறது
மனிதனுக்காக.
2. தாழிடாத பிரவாகம்.
பகைமைகள்
கொள்ளத்
தேவையில்லை
என்
பரிவுகள் நினைவுக்கு வந்திருந்தால்.
கோவங்கள்
மிகைக்கத்
தேவையில்லை.
குடும்பமாக
பழகியது
நினைவுக்கு
வந்திருந்தால்.
ஏளனங்கள்
எதுவும்
தேவையில்லை
என் பேச்சுக்களெதுவும்
நினைவுக்கு வந்திருந்தால்.
குத்தல் வார்த்தைகள்
தேவையில்லை.
கொண்ட அன்பு
நினைவுக்கு
வந்திருந்தால்.
வெறுப்புகள்
வீசத்
தேவையில்லை.
விருப்பமாக பழகியது நினைவுக்கு வந்திருந்தால்.
சீற்றங்கள்
எப்பொழுதும்
தேவையில்லை
சிரித்துப்பேசியது
நினைவுக்கு வந்திருந்தால்.
தவறாக
சொல்லத் தேவையில்லை.
தண்ணீராக
எப்பொழுதும்
நான்
இணைந்தது
நினைவுக்கு வந்திருந்தால்.
மாறாமலையே
நீங்கள்
மகிழ்ச்சியாக
மனதிடம் மாட்டியே
இருந்திடுங்கள்.
மாறாக
இன்றே விட்டு விடு
இதனையென
என்னிடம்
நீங்கள்
சமிக்ஞை
மட்டும்
செய்திடுங்கள்.
இருகரம் கூப்பி
நீங்கள்
வணங்குமாறு
என்னிடம்
மாற்றமில்லையென்றால்
என்னை எப்படியாக வேண்டுமானாலும்
அழைத்திடுங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.