வல்லினம் கலை இலக்கிய விழா 8
வணக்கம். ‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாள் 13.11.2016 (ஞாயிறு)
இடம்
Grand Pasific Hotel (KL)
Jalan Tun Ismail, Kuala Lumpur, 50400 Jalan Ipoh, Kuala Lumpur.
(ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)
நேரம் பிற்பகல் 2.00
கலை இலக்கிய விழா 8 இன் சிறப்பு அம்சங்கள்
1. ஆளுமைகளும் ஆவணங்களும்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய சண்முக சிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் நேர்காணல்கள் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.
விமர்சன நூல்
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டு நூல்வடிவமாக்கப் பட்டுள்ளன.

" அவுஸ்திரேலியா மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால் அனுப்பி பட்டதாரிகளாக்கியுள்ளது. எனினும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற தமிழ் மாணவர்களின் தேவைகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன."
22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திரைப்படமாக்கப்பட்ட நாவல்கள் என்கிற தலைப்பில் எந்தெந்த நாவல் / சிறுகதையெல்லாம் திரைப்படமாக்கப்பட்டதோ அவையும் விற்பனைக்கு உள்ளன. இவைகள் அன்றி, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய திரைப்படங்களின் டி.வி.டி க்களும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கு கழகம் (NFDC) தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்பட டி.வி.டி க்களும், விற்பனைக்கு உள்ளன. சினிமா சார்ந்து என்ன வேண்டுமென்றாலும், இனி நண்பர்கள் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியலாம். சினிமா சார்ந்த உங்கள் அணைத்து தேவைகளும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நிறைவடையும் வகையில் அதனை செம்மைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். இன்னமும் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியாத நண்பர்கள் உடனே வருகை தாருங்கள். 

09-10-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
‘2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து இன்றைய காலகட்டத்தை உபயோகித்து, தமிழர்களுடைய போராட்ட வரலாற்றையே ஆராய்ந்து பார்த்துள்ளது இந்த நூல். தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்நது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு என்ற ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்கள் பற்றியும் பக்க சார்பில்லாமல் இந்நூலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜெயபாலன். ஜனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தார்மீகப் போராளியின் பதிவாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்’ என்று அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் அண்மையில் கிழக்கு லண்டன் றினிற்ரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூல் அறிமுகத்தின்போது அந்நூல் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.





ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை எழுத்தாளர் கவிஞர் வானொலி – மேடைப் பேச்சாளர் விமர்சகர் ஆய்வாளர் விவாத அரங்கு மேலாளர் நடிகர் நாடகவியலாளர் இனப்பற்றாளர் சமூக சேவையாளர் என்று பல தளங்களை வெற்றிகரமாகச் சந்தித்த இவர் இலங்கையில் 27 வருடங்கள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண் எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக மதிப்புப் பெற்ற இவரே கனடாவில் இலக்கிய பொன்விழா கண்ட ஒரேயொரு தமிழ் எழுத்தாளர். 1994 ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளை மதித்து தமிழர் தகவலால் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி இவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன்னர் வைரவிழா கண்ட இவர் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளாக கனடாவிலுள்ள பல பொது அமைப்புகளில் பிரதான பதவி வகித்து புகழ் பெற்ற குறமகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களின் ஒருவரான ரோசா மாவீரரானவர். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களுக்கு 905-274-1136 அல்லது 647-878-2451 தொடர்பு கொள்ளலாம்.




இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









