சர்வதேச அளவிலான சிறுகதைப்போட்டி!


1) அசோகமித்திரன் நினைவலைகள் உரை - முருகபூபதி
2) சிறுகதை வாசிப்பு - "பிரயாணம்"
3) அசோகமித்திரனும் நாமும் - ஜேகே
4) அசோகமித்திரனும் நாமும் - கேதா
5) கலந்துரையாடல்.
26/03/2017 ஞாயிறு மாலை நான்கு மணி.
நிகழ்ச்சி நடைபெறும் முகவரி
20 Frewin Street
Epping VIC 3076
TP : 0403406013
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது - 2011', தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ' தமிழியல் விருது - 2014', இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ' இரா. உதயணன் இலக்கிய விருது - 2016' என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள், தெய்வங்களின் படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின் "சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்" என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்- " பாரதியும் பெண்விடுதலையும்" என்ற தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும் உரையாற்றினர். இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை, தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா அவர்களும், சிறப்பதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், இப்ராஹீமிய்யா கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார், கொடகே புத்தக நிறுவனர் திரு, திருமதி சிரிசுமண கொடகே ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
Dear Friends, Delighted to invite you for my special concert “SHREE" to celebrate International Women’s Day at the NGMA on 9th March 2017 at 6:30 pm. Look forward to your presence at this event.
Regards
Dr. Vasumathi Badrinathan
m: +91-9821074222 | e: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'மல்லிகை' இதழுக்கு 2016ஆம் ஆண்டு ஐம்பதாவதாண்டு பூர்த்தியாகிவிட்டது. அது தொடர்பாக .மல்லிகை' சஞ்சிகையில் பங்களித்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றினை தயாரிக்கும்பொருட்டு அப்படைப்பு பற்றிய விபரங்களை (படைப்பின் தலைப்பு, ஆசிரியர் பெயர், வெளியாகிய இதழ் போன்ற) 'மல்லிகை' சஞ்சிகை நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இது பற்றிய அறிவித்தலொன்றினையும் 'மல்லிகை' சஞ்சிகையினர் வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிவித்தலை நண்பர் எழுத்தாளர் மேமன்கவி அனுப்பி வைத்திருந்தார். அதனை இங்கு 'பதிவுகள்'வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
நண்பர்களே! உங்களது படைப்புகள் 'மல்லிகை' சஞ்சிகையில் வெளியாகியிருந்தா;ல் அது பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள்.
'தமிழ் இதழியல்சார் முக்கிய முன்னெடுப்புகள்' - கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்
ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
சிறப்புபேச்சாளர்கள் உரை:
''கலை இலக்கியத் தளங்களில் உலகுதழுவிய இயங்குநிலை'' -திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)
''சமூக - பண்பாட்டுச் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்'' - திரு. பி.ஜெ.டிலிப்குமார் (தாய்வீடு)

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில், ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் - பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.
இவ்விழாவை மெல்பனில் வதியும் கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள். திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன் அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் " பாரதியும் பெண்விடுதலையும் " என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச " மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்" என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.
அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.
* இவ்வறிவித்தலைப் பதிவு செய்வதிலேற்பட்ட தாமதத்துக்கு வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது.

வணக்கம், 'நெய்தல்' எனும் கவிதை இதழ் அச்சில் வெளிவரவுள்ளதால் கவிதைகள்,கவிதை சார்ந்த கட்டுரைகள்,கவிதை இதழ்களின்,நூல்களின் அறிமுகங்கள்,கவிதைகள் பற்றி பெரியோர்கள் சொன்னவைகள் என எழுதலாம்.மொழிபெயர்ப்புக்கவிதை கள் முழுமையாக இருத்தல் வேண்டும்.
படைப்புகள் வேறெங்கும் வராதவையாகவும்,அதிக பக்கங்கள் வராமாலும் எழுதலாம்.
தங்கள் மேலான ஒத்துழைப்புடன்,
முல்லைஅமுதன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சிறிலங்கா விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களின் 524 ஏக்கர் சொந்த
நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரியும் 84 குடும்பங்களை சேர்ந்த கேப்பாபிலவு
மக்கள், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் இருபதாவது
நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக வருகிற செவ்வாய்க்கிழமை (21.02.2017) மாலை
ஆறு மணி தொடக்கம் ஏழு மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவிருக்கின்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொண்டு கேப்பாபிலவு
மக்களுக்கும் மற்றும் தமது சொந்த மண்ணை மீட்பேடுப்பு போராட்டத்தில் ஈடுபடும்
அணைத்து மக்களுக்கும் கரம் கொடுப்போம், வாருங்கள்.
ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நோர்வே ஈழத்தமிழர் அவை
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களுக்கு வணக்கம், ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் இந்த மாத(மாசி), பங்குனி, சித்திரை மாத நிகழ்வுகள் தற்காலிகமாக புதிய இடத்தில் நடக்க இருக்கிறது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். புதிய இடத்தின் முகவரி: Unit 1, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 ( நியூஓசியன் சுப்பர்மார்க்கட்டுக்கு அருகில் இருக்கிறது. )
நன்றி.
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின் நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில் ”Sumangali “,* களவாடப்பட்ட குழந்தைப்பருவம் மற்றும் சுப்ரபாரதிமணியனின் நூல்கள் நெசவு ( தொகுப்பு நூல் ), முறிவு (நாவல் ), * குழந்தைகளுக்கான நூல்கள் “ The art of stry telling “, “ The baniyan tree “ – Thought provoking stories for children ஆகியவற்றை திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் IAS வெளியிட,சம்ஸ்துதிதீன் ஹீரா, நடேசன்,ஜோதி , பிஆர் நடராசன்,பாரதி புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன், சேவ் வேணுகோபால், தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் கு.ந.தங்கராசு, அனைத்திந்திய கலை இலக்கிய பெருமன்றம் நிர்வாகி ரத்தினவேல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
உலகமயச் சூழலில் வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்க முடியும் என்று திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் கூறினார்.14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:குழந்தைகளுக்கு இலக்கணம் சார்ந்த மொழியாக தமிழைத் திணித்ததால்தான் அவர்கள் அச்சப்பட்டு விலகி இருக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உளவியலுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழில் சிந்திக்கும் திறனைக் குழந்தைகளுக்குத் தர மறுத்துவிட்டோம்.தற்போது தமிழ்ப் படைப்புலகில் 1950க்கு முந்தைய புத்தகங்கள் மறுபதிப்புகளாக வருகின்றன. படைப்பிலக்கியங்கள் வருகின்றன. ஆனால் சிந்தனை இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக வருகின்றன. தமிழில் சிந்திப்பது, எழுதுவது குறைந்துவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிவந்திருக்கிறது. இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் பற்றி விமர்சனம் உள்ளது. ஆனால் நமக்கு தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. தலைவர்கள் வியாபாரிகளாக இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கத்தான் அரசியல் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சுயநலமும் இல்லாத தலைவர்கள் அரிதாகவே உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பக்கூடிய ஆதாரமாக புத்தகங்கள் திகழ்கின்றன. உலகமயச் சூழலில் எல்லாமே வர்த்தகமாகிப் போனது. சிந்தனையும், செயலுமே வர்த்தகமாகிவிட்டது. சேவையாகத் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிப் போனது. அரசுக்கே தவறான பார்வை உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் அரசாங்கம், நல்ல ஆசிரியர்கள், தரமான கல்வி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. சிந்தனையே வர்த்தகமாகிப் போன சூழலில் நமக்கு ஆதரவரளிக்கக் கூடியதாக புத்தகங்களே இருக்கின்றன.

11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
PRESTON CITY HALL, GOWER STREET, PRESTON, VIC 3072
கண்காட்சி - கருத்தரங்கு - நினைவரங்கு - பட்டிமன்றம்
மெல்லிசை அரங்கு - நடனஅரங்கு
அனுமதி இலவசம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையத்தளம்: www.atlasonline.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் அழகைப் பாருங்கள்! உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். என் உள்ளங் கவர்ந்த நாடுகளுள் கனடாவுக்கு முதன்மை இடம் உண்டு. அந்த நாட்டில் மாந்தநேயம் கொண்டவர்களைத் திரும்பிய திசையெல்லாம் காணலாம். மாந்தர்கள் மட்டும் என்று இல்லாமல் விலங்குகளையும் நேசித்து ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளை அங்குச் சென்றால் நேரில் பார்க்கலாம். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஆதரவுகாட்டி, அடைக்கலம் தந்து செம்மாந்து வாழ இந்த நாடு வழிவகை செய்ததை ஒவ்வொரு தமிழரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும். அந்த நாட்டின் தலைமை அமைச்சர் தமிழர்களையும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் போற்றுவதில் தன்னிகரற்று விளங்குபவர். தமிழ்மொழி மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் திருவிழாவுக்கு வாழ்த்துரைத்த தலைமை அமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் நன்றிமலர்கள் உரியதாகட்டும்.
பார்க்கவும்: https://www.facebook.com/muelangovan
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]
வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:
21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.