அவுஸ்திரேலியா மெல்பனில்: முருகபூபதியின் "சொல்லவேண்டிய கதைகள்" நூல் வெளியீடும் 'ரஸஞானி' ஆவணப்படம் திரையிடலும்! - தகவல்: முருகபூபதி -

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். 'சொல்லவேண்டிய கதைகள்' யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும். இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் - எண்ணமும் எழுத்தும் : எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி. ஒளி, ஒலிப்பதிவு, தயாரிப்பு: கலை, இலக்கிய ஆர்வலர் மூர்த்தி. பின்னணிக்குரல் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் நவரத்தினம் அல்லமதேவன்.
முருகபூபதி வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பகுதியில் தொடர்ந்து பத்திக்கட்டுரைகள் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, சித்ரா லயனல் போப்பகே, கமிலா ஹனிஃபா, யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர் திரு.' லயன்' சக்தி கிருஷ்ணபிள்ளை, மூத்த கல்விமான் யூசுப் முஸ்தபா, கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைப்பர். இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின் மகள் மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக், தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழா, செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்வி ஹரினி ஶ்ரீதரன் தமிழ்வாழ்த்துப்பாடுவார். திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார், கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர்.







‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி, படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது. 

'நபிகள் நாயகம்' எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது. 
அன்புடையீர் வணக்கம் . இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின் அழைப்பிதழை இணைத்துள்ளேன் . உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும், 'கலைகளால் செழிக்கும் செம்மொழி' - தொடர் நிகழ்வு - இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் - செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற நிகழ்வுக்கு, தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் , முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் , சிறப்புரை : கவனகக்கலை மாமணி - கலை. செழியன் அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : 'திருக்குறள்' இரா. எல்லப்பன் அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள். உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில் வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.


நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









