தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பு 05.07.2015
இடம்: பெரிய சிவன் ஆலய கலாசார மண்டபம்
1148 பெல்லாமி வீதி. ஸ்காபரோ. ( 1148 Bellamy Road, Scarborough)
திகதி; 05.07.2017 புதன்கிழமை -- நேரம்: மாலை 5:00 – 6:30 மணி
அன்புடையீர்:
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் எழுதி வெளியிடவுள்ள “கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் - ஓர் வரலாற்றுப் பதிகை” என்ற நூலானது கனடாவில் வாழும் ஈழத் தமிழரது வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஓர் அரிய வரலாற்று ஆவணமாகும். 1950ஆம் ஆண்டு முதலாக இலங்கைத் தமிழர் கனடாவுக்குக் கல்வி, தொழில், ஏதிலிக் கோரிக்கை, குடிவரவு என்ற அடிப்படைகளில் வருகை தந்துள்ளனர். அவர்களின் வரலாறு, இந்நாட்டில் அவர்கள் கல்வி கற்றுத் தம் வாழ்வை வளமாக்கிய வரலாறு, கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றைப் பேணுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட முயற்சிகள், ஈழத்தமிழரின் அரசியல் செயற்பாடுகள், கனேடிய அரசியல் பிரவேசம், குடும்பம், வாழ்வியல், இளையோர், முதியோர், தலைமுறைஇடைவெளி. தமிழ் ஊடகங்களின் தோற்றம், வளர்ச்சி என்ற பல்வேறு விடயங்கள் இந்நூலிலே வரலாறாக எழுதப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் பற்றிய தரவுகளைக் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரட்டி, ஆராய்ந்து 530 பக்கங்களில் தனிநூலாகத் தந்துள்ளார். இது எமது எல்லோரது வாழ்வியல் பற்றிய வரலாற்று ஆவணமாகும.; இந்நூலின் வெளியீடு இம்மாதம் 16. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை மேலே குறிப்பிடப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கனடாவில் வாழும் ஈழத்தமிழர் அனைவரும் இச்செய்தியை அறிந்துகொள்ளச் செய்வதில் தமிழ் ஊடகங்களுக்குப் பெரும் பங்குண்டு. அது பற்றிக் கலந்துரையாடத் தமிழ் ஊடகத் துறையாளர் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
(குறுகிய கால அறிவித்தலுக்கு மன்னிக்கவும்,)
நூல் வெளியீட்டுக் குழுவின் சார்பாக:
டாக்டர் போல் ஜோசப் 416 986 4903 திரு. லிங்கன் நடராஜா 416 573 0985
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.