திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான சுமதி ரூபனுடனான சந்திப்பு - பெண் எழுத்து... பெண் அரங்கு -
அவரது குறுந்திரைப்படங்கள் திரையிடலும் அவரது "உறையும் பனிப் பெண்கள்" சிறுகதைத் தொகுதி மற்றும் அவரது குறுந்திரைப்படங்கள் பற்றிய உரைகளும், கலந்துரையாடலும்.......
வழிப்படுத்தல்- மாதவி சிவலீலன் | உரைகள்- கோகுல ரூபன், பாத்திமா மாஜிதா
காலம்- 20 ஆகஸ்ட் 17 (ஞாயிறு), மாலை 4 .30 மணிக்கு | இடம்: London Tamil Sangam, 369, High Street North, Manor Park, E12 6PG . London, (Nearest underground - Eastham)
more information - 07817262980
சுமதி ரூபன், 1983 புலம்பெயர்ந்து, 1989யிலிருந்து கனடாவில் வசித்து வருகின்றார். யாதுமாகி நின்றாள் (2003, ), உறையும் பனிப் பெண்கள் (2010, ) என்ற இரு சிறுகதைத் தொகுதிகளைத் தந்தவர், மேலும் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட இனி (2002), உஸ் (2004), மனுஸி (2004), யூ ரூ (2005), பிள்ளை (2006), ரு பி கொன்ரினியுட் (2006) போன்ற குறுந்திரைப்படங்களை எழுதியும் இயக்கியும் இருக்கின்றார். 2015ல் இவர் இயக்கிய -நியோகா- என்ற முழு நீள திரைப்படம் என்ரிரிஎப் 2016 மிட்நைற் சன் விருதைப் பெற்றுக் கொண்டது .
அனைவரையும் அழைக்கிறோம்.
- தமிழ்மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம் -