25-06-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு மாலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
எஸ்.ஆர்.பிரபு வணிக வெற்றியோடு நல்ல தரமான படங்கள் எடுப்பதிலும் நல்லார்வம் கொண்டவர். அண்மையில் வெளியாகி மக்களாலும் பாராட்டப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே. வெளியானது முதல் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்று வருகிறது.
சினிமாவின் முதுகெலும்பாக இருக்கும் தயாரிப்பாளர்கள் கடந்து வந்த பாதை, அவர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் சிக்கல்கள், அல்லது சவால்கள், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் உள்ள தகவல் பரிமாற்றங்கள் என எஸ்.ஆர்.பிரபுவுடன் கலந்துரையாட பல தலைப்புகள் உள்ளன. அத்தோடு சினிமாவில் நாட்டமுள்ள இளைஞர்கள் முதல் எவரும் ஒரு சினிமா உருவாக அதன் ஆரம்பத்திலிருந்து படம் முடிந்து திரைக்கு வரும் வரையில் உள்ள படிப்படியான வளர்ச்சி நிலையினை அறிந்துகொள்வது முக்கியம்.
அதற்கான வாய்ப்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் நடைபெறப்போகிற இந்தக் கலந்துரையாடலை ஆர்வலர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.
ஞாயிறு மாலை மறவாமல் ப்யூர் சினிமாவிற்கு வந்துவிடுங்கள்… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் விவாதிக்கலாம்.
6 மணி வரை மட்டுமே உள்ளே வர அனுமதி. 6.01 க்கு வந்தாலும் அனுமதியில்லை. எனவே நண்பர்கள் 6 மணிக்குள்ளாக வந்துவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் 5.30க்கு சரியாக வந்துவிட்டால் விரும்பும் இடத்தில் அமர்ந்துக்கொள்ளலாம்.
தமிழ் ஸ்டுடியோ <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>