அகணி சுரேஸின் 'இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு '– நூல் வெளியீட்டு நிகழ்வு.
சென்ற ஞாயிற்றுக் கிழமை (4-11-2018) திரு.அகணி சுரேஸ் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள, இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு என்ற நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வு ஈஸ்ட்ரவுன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாலை மூன்று மணியளவில் அமரர் அலெக்ஸ்சாந்தர் நினைவு அரங்கில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. சிற்றுண்டி உபசாரத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு வழமையான நூல் வெளியீடு போன்று இருக்காது சற்று வித்தியாசமானதாக இருந்தது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளோ அல்லது வாழ்த்துரை, அறிமுகவுரை போன்ற நூலாசிரியர் பற்றிய உரைகளோ இருக்கமாட்டாது என்று நூல் ஆசிரியர் விரும்பம் தெரிவித்தாலும் மாறாகச் சிலரின் உரை வாழ்த்துரையாக மாறியிருந்தது. ‘எதிர்காலச்சந்தியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தலாம்’ என்ற தலைப்பில் அறிஞர்களின் உரைகள் இடம்பெறவேண்டும் என்று ஆசிரியர் விரும்பி இருந்ததால் உரையாற்றியவர்கள் அதுபற்றித் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவையோர் மிகவும் ஆர்வத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளின் சிறப்பான திறமைகளும் இந்த நிகழ்வில் வெளிக்காட்டப் பெற்றன. நிகழ்வுகளை தந்த சிறுவர், சிறுமிகளுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். அறிஞர்களின் உரைகளுக்கு இடையில் அரைமணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது, அகணி சுரேஸ் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றும் அவரது மகனால் இசை அமைக்கப் பெற்று ஒலி வடிவில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது இடம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையில் இருந்து ஒரு பகுதியயைத் தருகின்றேன்:
எதிர்காலச்சந்ததியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றலாம் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நூலாசிரியர் கேட்டிருந்தார். பொதுவாக எடுத்துக் கொண்டால் படைப்பாளிகள் என்று குறிப்பிடும் போது படைப்பாளிகள் பல விதப்பட்டாலும் இங்கே ஆக்க இலக்கியத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சந்ததியினரைப் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு முதலில் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு ஏற்ற சூழலை அவர்களுக்காக உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தாயகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் படைப்பாளிகளாக மாறவில்லை. பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்தப் பொழுது போக்குப்படிப்புகளுக்கும் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. குறிப்பாக கதைப்புத்தகங்கள், வார, மாத இதழ்களைகூட வாசிக்க விடவில்லை. அதனாலே உயர்கல்வி கற்ற பலர் குறிப்பிட்ட துறையில் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், இலக்கியத்திலோ அல்லது பொது அறிவிலோ சிறந்து விளங்கவில்லை. எங்கள் சமூகத்தில் இன்றும் அங்கும்சரி, இங்கும்சரி அது ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து ஆங்காங்கே பல படைப்பாளிகள் உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதே உண்மை.

இதுவரை நான்கு முழுநாள் நாவல் கருத்தரங்கினை நடாத்தி முடித்த விம்பம் கலை இலக்கிய திரைப்பட கலாச்சார அமைப்பானது கடந்த சனிக்கிழைமை (03.11.2018) அன்று முழுநாள் சமகால கவிதை அரங்கொன்றினை ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இலங்கை,இந்தியா, புகலிட நாடுகள் என்று உலகெங்கும் பரந்து கிடக்கும் சுமார் 20 கவிஞர்களின் படைப்புக்களை ஒரே அரங்கில் அறிமுகப்படுத்தவும், விமர்சனம் செய்யும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அருந்ததி ரட்ணராஜ், T.சௌந்தர் ஆகியோரது ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், " 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. " என குறிப்பிட்டுள்ளார்.



மீண்டுமொரு முழுநாள் நாவல் கருத்தரங்கொன்றினை விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பானது வெற்றிகரமாக நடாத்திக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஒளியூட்டப்பட்ட நாவல்கள் அல்லது பிரபல்யமான படைப்பாளிகளின் நாவல்கள் என்றில்லாமல் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை களமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்ற படைப்புக்களையே தனது தேர்வாகக் கொண்டுள்ள விம்பம் அமைப்பானது இம்முறையும் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டிலிருந்து சற்றும் வழுவாமல் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இதற்காக தனியொரு மனிதனாக இருந்து அர்ப்பணிப்புடன் இயங்கும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் பணிகள் என்றுமே எம்மைப் பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துபவை. இது நான்காவது நாவல் கருத்தரங்கு. கடந்த 22.10.201 சனிக்கிழமையன்று வழமை போன்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற்ற இம்முழு நாள் கருத்தரங்கில் சமகால இலக்கியப் படைப்புக்கள் ஆன 10 ஈழ, தமிழக, பிறமொழி நாவல்கள் 18 விமர்சகர்களினால் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்பட்டன. இது மட்டுமன்றி ஒளிப்படக் கலைஞர்கள் சுகுணசபேசன் (லண்டன்), தமயந்தி (நோர்வே), தமிழினி (கனடா), அமரதாஸ் (சுவிஸ்), கருணா (கனடா), சாந்தகுணம் (லண்டன்) ஜெயந்தன் (சுவிஸ்)ஆகியோரது ஒளிப்படக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றிருந்தது.
அவுஸ்திரேலியா : 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் 





ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









