Book Release: Jaffna Public Library Past and Present.



toronto tamilsangam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வருடாந்த கவிதா மண்டலம் நிகழ்ச்சி இம்முறை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி (06-07-2019) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை இடம்பெறவுள்ளது.
நிகழ்வு இடம்பெறும் முகவரி:
Neighbourhood house Community Centre - 6, Mount Street, Glen Waverley. Vic 3150
கவிதா மண்டலத்தில் கலந்து சிறப்பிக்குமாறு, கலை, இலக்கிய ஆர்வலர்களை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு:
திரு. சங்கர சுப்பிரமணியன் ( தலைவர்)
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
தொலைபேசி இலக்கம்: 0423 206 025
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'ஈழத்தில் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் நிறைந்து காணப்பட்ட 1940 -களின் பிற்பகுதியில் ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக, தமிழ்ப்பற்றாளராக, நல்ல தமிழாசானாக, பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பாடிக்களித்திட பாடல் தந்த கவிஞராக, உணர்ச்சிமிக்க பேச்சாளராக, ஆய்வுக் கட்டுரையாளராகப் பர்ணமித்துத் தமிழறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்;. தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றியவர்;. இந்நாட்டில் தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற தணியாத தாகம் மிகக்கொண்டவராக, எழுத்திலும் பேச்சிலும் அதனை வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார் ஆவார்.' இவ்வாறு, பாரிஸ் மாநகரில் கடந்த ஞாயிறு மாலை (23 - 06 - 2019) நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் - 'கலாபூஷணம்' வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது :- 'நாட்டிற்காய் இளைஞர் கூட்டம் கிளர்ந்தெழுதல் வேண்டுமென அவரது 'அவளும் அவனும்' என்னும் காவியத்தில்வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனமானவையெனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். 'அறப்போருக்கு அறைகூவல்' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அவர் எழுதிவந்த கவிதைகள் கவனத்துக்குரியன. 'ஈழகேசரி'யில் அவர் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் அப்பத்திரிகை 'இலக்கிய அரங்கம்' என்ற விவாதமேடையையே அமைத்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரித்தது. அதனால் வித்துவான் வேந்தனார் தமிழ்ப்பற்றாளர் எல்லோரதும் கவனத்துக்குரியவரானார்.
யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் 1951 -ம் ஆண்டு ஏப்ரல் 29, 30, மே 1 -ம் திகதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ்விழா' சிறப்பாக நடைபெற வேந்தனார் முன்னின்று செயற்பட்டார். தமிழகம், பெங்கள10ர், புதுடில்லியைச் சேர்ந்த சுமார் 18 -க்கு மேற்பட்ட தமிழறிஞர்களும், இலங்கையின் பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் இவ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்தமை வரலாறு. இவ்விழாவில் மூன்றாம் நாள் இறுதிப் பேச்சாளராகக் கலந்துகொண்ட வித்துவான் வேந்தனாரின் 'வாழும் இலக்கியம்' என்ற தலைப்பிலான சிறப்புரையைத் தமிழகத்துத் தமிழறிஞர்கள் செவிமடுத்து வியந்து பெரிதும் மெச்சினர்.

அன்பிற்குரியவர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழா, பாரிஸ் மாநகரில் , வரும் 23.06.2019 , ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இவ் விழாவினை " வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - பிரான்ஸ்" அமைப்பினர் பொறுப்பெடுத்து நடத்துகின்றார்கள். இதற்கான அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளேன்.
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும்.
இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. 1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில், நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன அரங்குடன், புதிய நாவலான கானல் தேசம், மற்றும் நனவிடை தோயும் சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
வணக்கம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்:
பரிசு பெற்றவர்கள்
1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092)
2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000 (டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)
3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000
(ஒரு முழு நாவல்) (இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)
(உறவின் தேடல்) (விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)
பாராட்டுப் பரிசுகள் - (7) இலங்கை ரூபாய்கள் தலா 5000
(நான் யார்) தேவகி கருணாகரன் நியூசவுத்வேல்ஸ் - 2065 அவுஸ்ரேலியா , (கமழி) கோவிந்தராயு அருண்பாண்டியன் அண்ணாநகர் மேற்கு, தமிழ்நாடு , (இடுக்கண்களைவதாம்) சுமதி பாலையா காமராசர்நகர் பாண்டிச்சேரி -605006
(காணாமலே) ஹரண்யா பிரசாந்தன் பற்றிமாகிரிவீதி மட்டக்களப்பு இலங்கை , (கனடாவில் அம்மா) இராமேஸ்வரன் சோமசுந்தரம் சோலேஸ் றோட், மார்க்கம் கனடா , (நிர்ப்பந்தம்) இதயராஜா சின்னத்தம்பி ஸ்ரீசரணங்கார வீதி, தெகிவல இலங்கை , (போ வெளியே) அருண்சந்தர் றோட்1011 அல்சல்மானியா Kingdom of Bahrain
ஊக்கப் பரிசுகள் - (5) இலங்கை ரூபாய்கள் தலா 3000
(சுயகௌரவம்) சசீலா ராஜ்குமாரன் வரோதயநகர் திருகோணமலை இலங்கை.
(களவும் கற்று மற) பரமேஸ்வரி இளங்கோ ஹேகித்த வத்தளை இலங்கை
(தீக்குருவி) மொகமட்ராபி பாலையூற்று திருகோணமலை இலங்கை
(மெல்ல திறந்தது கதவு) ஜெயபால் நவமணிராசையா அண்ணா நகர், சென்னை-600101
(ஐந்தறிவு விதவை) அண்ணாதுரை பாலு ராஜபாளயம் விருதுநகர் 626117 தமிழ்நாடு

பெண்கள் சந்திப்பின் 34 ஆவது நிகழ்வு நெதர்லாந்தின் சோஸ்ட் என்னுமிடத்தில் திருமதி.திரேசிற்றா அந்தோனியின் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்றது. இச்சந்திப்பில் இந்தியா. கனடா. ஜேர்மனி. பிரான்ஸ். இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் தமது பெண்ணியக் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். சுய அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப் பெண்கள் சந்திப்பை திரேசிற்றா அந்தனி தனது வரவேற்புரையை வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த தர்சனாவின் அறிமுகத்துடன் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த வழக்கறிஞர் கிருபா முனியப்பா பேசும்போது: ‘இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் சாதி அடக்குமுறைகளினால் தலித்தியப் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக எடுத்துப் பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த வன்முறைகளை எதிர்கொண்ட பல பிரச்சனைகளை எடுத்துக்கூறிப் பேசியிருந்தார். இன்று இந்த சட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நியாயமன்றத்தில் நியாயம் கூறும் ஒரு துணிச்சலான செயற்பாடுகளை கிருபாவின் உரையில் உணர முடிந்தது’

On behalf of the World Tamil Research Conference (WTC) team, We would like to thank you for your continued support over the years in both participating as well as funding to preserve and enrich our Tamil traditions and culture.
We are honored to invite you to our upcoming 10th World Tamil Research Conference (WTC) to be held in Chicago. This event will take place at the Schaumburg Convention Centre, Schaumburg, IL, USA from 4th to 7th July 2019.
This will be a historical event with two days of cultural extravaganza and two days of research conference and entrepreneurship meet (GTEN) with an expected audience of over 6000 attendees from around the world. The conference offers an outstanding platform to display the rich heritage and significance of Tamil language and culture.
To grace this occasion, we have invited several Tamil Scholars from around the world, political figures from various states including governor, senators and congressman. We have also invited several eminent artists, poets, performers and academicians from all over the world.
'மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 - 03 - 2019) இலண்டன் மாநகர் - ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் 'கலாபூஷணம் - இலக்கிய வித்தகர்" வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.
நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல், அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல், வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி - பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் - இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது" என்றார்.
ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்" என்றார்.