ரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு



லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜாவின் - ஈழத்தின் தமிழ் நாவலியல் ஆய்வுக்கையேடு நூலின் இணையவழி காணொளி ஆய்வரங்கு . கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது: https://youtu.be/6noK6iGzaMc

திருப்பூரில் பொதுவெளியில் திருவள்ளுவர் சிலை வைக்க பல ஆண்டுகள் முயற்சி செய்து திருப்பூர் மக்கள் மாமன்றம் வெற்றி கண்டது சமீபத்தில் . மக்கள் மாமன்றம் நூலக முகப்பில் அந்த சிலை அமைந்துள்ளது ( டைமண்ட் திரையரங்கு முகப்பில் உள்ளது நூலகம் )சமீபத்தில் மக்கள் மாமன்றம் 25 என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அடுத்து தமிழன்னைக்குச் சிலை வைக்க முயற்சி நடக்கிறது . அதற்கு உதவலாம் .
தொடர்புக்கு சி.சுப்ரமணீயன் , அமைப்புத் தலைவர், மக்கள் மாமன்றம் 93457 20140
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்

அண்மையில் ரொறன்ரொ தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்ற கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியனின் இசைத்தமிழ்ப் பாடற்பரப்பும் அதன் சமகாலப் பயன்பாட்டு நிலையும் பற்றிய உரை:

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மூத்த எழுத்தாளர் - நண்பர் மா.பா.சி (மா.பாலசிங்கம்) கடந்த 31 - ம் திகதி (31 - 10 - 2020) சனிக்கிழமை இரவு கொழும்பில் காலமான செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு வயது 81. முற்போக்குச் சிந்தனையாளரான மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் யாழ்ப்பாண நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தார். எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சிறுகதை - குறுநாவல் - நாவல் - கட்டுரைகள் எனப் படைப்புகளை வரவாக்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இப்படியும் ஒருவன்' மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது. அடுத்த சிறுகதைத் தொகுதியான 'எதிர்க்காற்று' 2008 -ல் வெளியாகியது.
"அனைவருடனும் அறிவி
னைப் பகிர்ந்து கொள்வோம்" என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். 'பதிவுகள்' இணைய இதழில் ஆயிரக்கணக்கில் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். அதனடிப்படையில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் தொகுப்புகளாக வெளிவரவேண்டியது அவசியம். தற்போதுள்ள சூழலில் அவை மின்னூல்களாகவாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவ்வடிப்படையில் இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.
'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆரம்பகாலப் படைப்புகள் இவை. 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப கால இணைய இதழ்களிலொன்று. முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு என்று பல்வேறு எழுத்துருக்களில் படைப்புகள் வெளியாகியுள்ளன. பாமினி போன்ற எழுத்துருக்களில் அனுப்பப்பட்ட படைப்புகளை திஸ்கிக்கு, ஒருங்குறிக்கு உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகள், தட்டச்சுப் பிழைகள் என இவற்றில் இன்னும் பல எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இருக்கும். அவற்றை வாசிப்பவர்கள் அறியத்தாருங்கள். அடுத்தடுத்த பதிப்புகளில் அவை திருத்தப்படும். பதிவுகளில் வெளியான படைப்புகளின் ஏனைய தொகுப்புகளும் விரைவில் வெளியாகும், இவை அனைத்தும் 'இணையக் காப்பகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்படும். 'நூலகம்' தளத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் (மதுரை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி இணையவழி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினைப் பார்க்கும் & கேட்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அதில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுரையினை முனைவர் மைதிலி தயாநிதி அவர்கள் ஆற்றியிருந்தார். அதற்காக அவருக்கென் பாராட்டுகள்.
மிகவும் விரிவானதொரு தேடலை அவர் இவ்வாய்வுக் கட்டுரையினை எழுதுவதற்காகச் செய்துள்ளார் என்பதை அவரது உரை புலப்படுத்தியது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குச் சிறுகதை மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், அவர்களது முக்கியமான சிறுகதைகள் பற்றி உதாரணங்களுடன் குறிப்பிட்டார். அவரது ஆய்வுரை சிறப்புடனும், உணர்வு பூர்வமாகவுமிருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' & 'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.
'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1 & 2) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. இவை 2000 -2010 காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மொத்தமாக 82 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதற் தொகுப்பு மின்னூலாக வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணைய இதழில் வெளியான , வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன தொகுப்புகளாக வெளியாகும். இத்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பதிவுகள் ஆற்றிய பங்களிப்பினை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.
நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும் முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'ரொறன்ரோ" தமிழ்ச் சங்கம் நடத்தும் மாத இலக்கிய அமர்வுகளிலொன்றில், எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றிய எனது பார்வை என்னும் உரையினை ஆற்றும் காணொளி இது. பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தலைமையில் , நடந்த நிகழ்வு. அந்நிகழ்வில் 'செங்கை ஆழியான் ஒரு கல்வியாளர்' என்னும் தலைப்பில் கவிஞர் கந்தவனமும், 'ஈழத்தின் நவீனத் தமிழிலக்கியத்தில் செங்கை ஆழியானுக்குரிய இடம்' என்னும் தலைப்பில் பேராசியர் நா.சுப்பிரமணியன் அவர்களும் உரையாற்றினார்கள். நிகழ்வு நடந்த நாள்: ஆகஸ்ட்27, 2016
'ரொறன்ரோ" தமிழ்ச் சங்க நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று எழுத்தாளர் அகிலின் உழைப்பு. எழுத்தாளர் அகில், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், மருத்துவர் இலம்போதரன், கவிஞர் கந்தவனம் , எழுத்தாளர் த.சிவபாலு என்று பலர் இச்சங்கம் திறம்பட இயங்குவதற்குக் காரணமானவர்கள். காணொளிக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=Wwhq4bV-FCU

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.