சாதியற்ற சமூகம் நோக்கி… உரையும் கலந்துரையாடலும்.
காலம்: 21 மார்ச்2020| நேரம்: மாலை 5.30 மணி| இடம்:Heroes Place, 2541 Pharmacy Avenue,Pharmacy & Finch, Scarborough, Ontario


காலம்: 21 மார்ச்2020| நேரம்: மாலை 5.30 மணி| இடம்:Heroes Place, 2541 Pharmacy Avenue,Pharmacy & Finch, Scarborough, Ontario

“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்" நூல் வெளியீடும்!
‘வண்ணச் சிறகு' அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே" கவிதை நூல், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ - அறிமுகம் ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்" கலை இலக்கிய சிற்றிதழின் "தெளிவத்தை ஜோசப்" சிறப்பிதழ் ஆகியவற்றின் அறிமுகமும் இம்மாதம் 9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோஸ் பிளேஸி'ல் 'சம உரிமை' இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.
கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். நல்ல பயனுள்ள அறிவுப்பரிமாற்றத்திற்கு வருகையும் கட்டுரையும் தருவீர்களாக/ தொடர்புக்கு அழைக்கவும்: 9283275782

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.

தொழில்நுட்பம் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி நாம் பிறந்து வளர்ந்த நாடுகளிலும் அசாதாரண செயல்கள் இடம்பெறுவது கவலை தருகின்ற விடயமாகும். தமது சூழலுக்கேற்ற நடத்தை நியமங்களினின்றும் தவறி ஒருவர் நடந்துகொள்வாரானால் அவரது நடத்தை அசாதாரணமானது என்று நினைக்கத் தோன்றுகின்றது. புலம்பெயர்ந்து வசதிபடைத்த, கல்வி வளங்கள் சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினரிடமும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்லமுடியாது மனம் சோர்வதை அவதானிக்க முடிகின்றது. மனம் பதட்டமடைந்து மற்றவர்களுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. எமது சமூகத்திடையே இடம்பெறும் இவ்வகையான கவலையான செயல்களை ஆராய்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை எம்மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் லண்டனில் வாழும் கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் மன அழுத்தம் பற்றிய கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. மன்றத்தின் தலைவி சிவா றூபி, செயலாளர் துர்கா சிவான்தன், பொருளாளர் அனன்னியா ஐங்கரன் ஆகியோரின் முயற்சியில் லண்டன் ஹரோ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.
ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.

'ஈழத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் பலர் குறித்த தகவல்களை இளங்கோவன் திரட்டித் தந்திருக்கிறார். 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்" நூலை வாசிக்கும்போது வியப்பாகவிருந்தது. சீனப் பெருந்தலைவர் மாஓவினால் பாராட்டப்பட்ட தோழர் சண்முகதாசன், மக்கள் இலக்கியக் கர்த்தா கே. டானியல், புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, தமிழறிஞர் சிவத்தம்பி, அன்று தென்தமிழகத்தைக் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் தன்குரல்வளத்தால் எம்மைச் சொக்கவைத்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், சீனாவில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றிய வீ. சின்னத்தம்பி, ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ்பெற்ற அழகுசுப்பிரமணியம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளைப்பற்றி, அவர்களுடன் பழகிய அனுபவங்களைச் சிறப்பாக நூலில் தந்துள்ளார் வி. ரி. இளங்கோவன். புலம்பெயர்ந்த ஈழத்து இளந்தலைமுறையினர் மாத்திரமல்ல நாமும் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். சிறந்த ஆவணமாகவுள்ள இந்நூலை அளித்த இளங்கோவன் எமது பாராட்டுக்குரியவர். நூலை அச்சிட்டு வெளியிட்ட மதுரை தழல் பதிப்பகம் இத்தகைய நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் " இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் 23 -ம் திகதி (23 - 12 - 2019) நடைபெற்ற 'நூல் அரங்கேற்றம்" நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் மூரா குறிப்பிட்டார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020
வணக்கம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவும், நூல் வெளியீடும் வருகின்ற ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11-04-2020) சனிக்கிழமை மாலை கனடா ஐயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் என்பதை அங்கத்தவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அண்மைக்காலமாக முக நூலிலும் பத்திரிகைகளிலும் பரத அரங்கேற்றங்கள் பற்றிய செய்திகள் மிக அலங்காரமான புகைப்படங்களுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் கொழும்பில் நடைபெறும் பரத நடன அரங்கேற்றங்கள் முக்கிய சில பத்திரிகைகளிள் பெரிய அழகிய புகைப் படங்களுடன் வெளியாகின்றன. சில பத்திரிகைகளில் அவை முழுப்பக்கத்தையே நிரப்பிகொண்டு உறுத்துகின்றன. தரமில்லாத நடனங்களும் அதை நிகழ்த்துவோரும் ஊடக விளம்பரத்தால் உயர்ந்த நடனங்களாகவும் மிகச் சிறந்த நடன தாரகைகளாகவும் கட்டமைக்கப்படுகின்றனர். ஊசியும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் யோக நிலையான பற்றற்ற நிலையை இப்பத்திரிகைகள் அடைந்து விட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.திறமையானவர்கள் இனம் காணப்படுவதில்லை. ஆடுவோர் எல்லாம் நடனக் கலைஞர் ஆக்கப்பட்டு விடுகிறார்கள். தடி எடுத்தோரெல்லாம் தண்டல் காரர் ஆகிவிடுவது போல. ஒரு பரத நடன விமர்சன மரபு எம்மிடமில்லை. இதனால் ஆடும் பரத நடனங்கள் யாவும் அற்புதம் என்றும் ஆடுவோர் அனைவரும் அற்புத நடன மணிகள் என்றும் கூறும் நிலைக்கு அனைவரும் வந்து விடுகின்றனர்

கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு அரங்கேறியது.