நூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ.27,250
மொத்தம் 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ. 27,250
பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
முதல் பரிசு ரூ. 1000
இரண்டாம் பரிசு ரூ. 750
மூன்றாம் பரிசு ரூ.500
நான்காம் பரிசு: 100 பேருக்கு (100 * 250) ரூ. 25000
*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் திட்டமும் உள்ளது.* *பரிசுக்குரிய தொகைக்கு ஈடாக நூல்களாகத்தான் அனுப்பப்படும்.* உங்களின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address), மின்னஞ்சல் (email) இருந்தால் மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி (mobile) எண் விவரங்களோடு அனுப்ப வேண்டும். நூல் திறனாய்வினை அனுப்பக் கடைசி நாள்: 31.08.2020 போட்டி முடிவுகள் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்படும்.
நூல் திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி:
நாளை விடியும்
எறும்பீசுவரர் நகர்
மலைக்கோயில்
திருவெறும்பூர்
திருச்சி - 620013.











பாடும் மீன் புத்தகக் கண்காட்சி காண சனிக் கிழமை( 08. 03. ,2020) இரவு தேவநாயகம் மண்டபம் சென்றிருந்தேன். சித்திரலேகாவும் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது என்னுடன் வந்திருந்தார். புதிய புத்தகங்கள் காண அவரும் அவாவினார், அவரும் ஓர் புத்தக ஆர்வலர். நாம் அங்கு போகும் போது மேடையில் நின்று ஜிப்றி ஹசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நூல் பற்றிய அறிமுகம் அது.

“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்" நூல் வெளியீடும்!
நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோஸ் பிளேஸி'ல் 'சம உரிமை' இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









