ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் “மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம் -2”



இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெருமதிப்பிற்குரியீர் வணக்கம். கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
தமிழியல் சார்ந்த உயராய்வு மற்றும் பன்னாட்டளவிலான தமிழ் ஆய்வு மையங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக திகழ்ந்துவரும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்துடன் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து செயலாற்றுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்துள் அமைந்துள்ள இந்தத் தமிழ் உயராய்வு மையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்கள் அடங்கிய, ஆய்வு நோக்கில் வகைமைப்படுத்தப்பட்ட ஆய்வு நூலகத்தையும் தன்னகத்துள் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். இது தமிழாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணைநல்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவர்களுக்கு (முழுநேரம்) ஊக்கத்தொகையும் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறந்த, நவீன கட்டமைப்புடனும் ஆய்வு மேற்கொள்வதற்குரிய அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளுடனும் இம்மையம் அமைந்துள்ளது. எனவே தாங்கள் அறிந்தவரையில், தமிழாய்வில் ஆர்வங்கொண்ட, முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் சிறந்த ஆய்வாளர்கள் இருந்தால் அவர்களுக்கு நம் மையத்தையும், துறையினையும் அறிமுகம் செய்து வைக்கும்படியும், வழிகாட்டும் படியும் கேட்டுக்கொள்கிறோம். தமிழாய்விற்குத் துணைநல்கும் இத்தகவலைத் தங்களுக்குப் பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், இனக்குழும மோதல்கள் பற்றி ஆய்வு செய்யும் துறைசார் அறிஞர்கள் இனக்குழும பன்மைத்துவம் [ETHNIC DIVERSITY] காணப்படும் பகுதிகளில், இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத புதிர் [PUZZLE] தன்மையுடைய அனுபவ யதார்த்தத்தைக் கண்டனர். சில பிராந்தியங்கள் [REGIONS], தேசங்கள் [NATIONS], சில நகரங்கள், சில கிராமங்கள் ஆகிய பகுதிகளில் ஒரு கால எல்லைக்கு முன் இனக்குழுக்களிடையே அமைதி பேணப்பட்டு வந்ததையும், வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானித்தனர். இப்பகுதிகளில் பின்னர் இடைவிடாது நம்பவே முடியாத வகையில் வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையிலான இன வன்முறை, சூறைக் காற்று போல் வீசியடித்து கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போவதையும் கண்டனர். இதனை இனத்துவமும் தேசியவாதமும் [ETHNICITY AND NATIONALISM] பற்றிய தீர்வுகாணப்படாத புதிர் [UNRESOLVED PUZZLE] என்று குறிப்பிடுவதோடு 'காலமும் இடமும் [TIME AND SPACE] சார்ந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வது எப்படி?' என்னும் வினாவை வார்ஷ்னே [VARSNEY] என்ற ஆய்வாளர் தமது நூல் ஒன்றில் முன்வைக்கிறார். [பேராசிரியர் உயன்கொடவின் 2010 இல் வெளியான நூலின் பக்-22 இல் தரப்பட்ட மேற்கோள்].
மேலே குறிப்பிட்டது போன்ற விடுவிக்கமுடியாத புதிர்கள் பல உள்ளன. இப்புதிர்களை விடுவிப்பதற்குத் தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் [THEORIES OF NATIONALISM] உதவ முடியுமா? என்ற வினாவை முன்வைத்து 'அறிதலும் பகிர்தலும்' அரங்கில் 9 ஆவது உரையாடல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM], நவீனத்துவ வாதம் [MORDENISM], இனக்குழும குறியீட்டுவாதம் [ETHNO-SYMBOLISM], கருவிவாதம் [INSTRUMENTALISM] போன்ற தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களையும் எரிக் ஹொப்ஸ்பாம், பெனடிக்ட் அன்டர்சன், அந்தனி டி.சிமித் போன்ற கோட்பாட்டாளர்களின் கருத்துக்களையும் முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் இவ்வுரையாடலை நிகழ்த்துவார். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் திரு. சத்தியதேவன்.

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)
நாள்: 19 நவம்பர் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)
பேசுபவர்: திருமதி உமை பற்குணரஞ்சன்

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி , தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும். இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 07-11-2021
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09
Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/
மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.
பௌதீகவியலில் சக்தி என்பது மிக அடிப்படையான எண்ணக்கருவாக இருப்பதைப் போன்று அரசியல் கல்வித்துறையில் அதிகாரம் (POWER) என்னும் எண்ணக்கரு அடிப்படையானதாக அமைந்துள்ளது என பெர்ட்டண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ரஸ்ஸலின் இக்கூற்றை மேற்கோள் காட்டும் ஜயதேவ உயன்கொட அவர்கள் 'அதிகாரம்' பற்றிய நவீனகால அரசியல் கோட்பாடுகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமது நூலின் 5 ஆம் இயலில் (POLITICS AND POLITICAL SCIENCE - A CONTEMPORARY INTRODUCTION) மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுவானவர்கள் ஆகியோரின் தேடலுக்கும் படிப்புக்கும் உரிய வழிகாட்டிக் குறிப்புக்களைத் தந்துள்ளார்.
நவீன கால அரசியல் கோட்பாட்டாளர்கள் அதிகாரத்தின் மூன்று பரிமாணங்களை விளக்கிக் கூறியுள்ளனர்.
ஆட்சியாளர்களால் ஆளப்படுபவர் மீது பிரயோகிக்கப்படும் அதிகாரம் இதனை 'POWER OVER' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியமறுத்து ஆளப்படுவோர் எதிர்ப்பை தெரிவதற்கும் அதிகாரம் தேவைப்படுகிறது. இதனை 'எதிர்ப்பதற்கான அதிகாரம்' (POWER TO RESIST) எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளை மாற்றுவதற்கான (POWER TO CHANGE) அதிகாரமும் ஆளப்படுவோரால் பிரயோகிக்கப்படுகிறது. இது அதிகாரத்தின் மூன்றாவது பரிமாணம் ஆகும்.
மேற்குறித்த வகைப்பாடும், அதிகாரத்தின் 'POWER OVER' 'POWER TO' இருவேறு நோக்குமுறைகளும் அரசியல் கோட்பாட்டு ஆய்வுகளின் சுவாரசியம் மிக்க கூறுகளாகும்.
சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கமைய இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது. விழாத் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம் பெற்றன. எழுத்தாளர் திரு. வாகீசன், கவிதா செந்தில், கணபதி ரவீந்திரன் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூல் பற்றிய ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து இனிய நந்தவனம் கனடா மலர் வெளியிடப் பெற்றது. முதற் பிரதியை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து வர்த்தகப் பிரமுகரும், கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை வர்த்தகப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கனடா சிறப்பிதழில் சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், நூல் ஆய்வுரை, நேர்காணல், உரையாடல், சேவைப்பாராட்டு, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளத்தின் தலைமையகக் கட்டிடத் திறப்புவிழா செய்தி போன்ற பல ஆக்கங்களும், தகவல்களும் இடம் பெற்றிருந்தன. செப்ரெம்பர் இதழில் கனடிய கவிஞர்களான கவிஞர் வி. கந்தவனம், கவிஞர் சிவா சின்னத்தம்பி, விருத்தக்கவி வித்தகர் தேசபாரதி வே. இராசலிங்கம், அருட்கவி ஞானகணேசன், கவிஞர் அனலை ஆ. இராசேந்திரம், கவிஞர். க. குமரகுரு, கவிஞர் அகணி சுரேஸ், கவிஞர் வ. ந. கிரிதரன், மட்டுவில் ஞானகுமாரன், சுதர்சன் மற்றும் குரு அரவிந்தனின் சிறுவர் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அக்ரோபர் மாத சேவைச் சிறப்பிதழிலும் கவிஞர் திருமதி பவானி தர்மகுலசிங்கம், கவிஞர் மா. சித்திவினாயகம், கவிஞர் சி. சண்முகராஜா ஆகிய கனடியக் கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.
இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -
