- இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய மடலில் தெரிவித்திருந்ததுபோல செப்ரம்பர் 2021 இல் விதை குழுமம் ஒருங்கிணைக்கும் இரண்டாவது இணையவழி நிகழ்வாக அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் என்கிற தலைப்பில் அறிதலும் பகிர்தலும் தொடரின் 7வது நிகழ்வு இடம்பெறும்.
அரசியலும் அரசியல் விஞ்ஞானமும்
‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL SCIENCE – A CONTEMPORARY INTRODUCTION என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். மாலினி பாலமயூரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் அமைந்த இந்நூல் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் (SSA) வெளியிடப்பட்டுள்ளது (2018). க.பொ.த (உயர்தரம்) வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் முதற்கலைத் தேர்வு (GAQ) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வகையில் எழுதப்பட்ட இந் நூல் அரசியல் விஞ்ஞானக் கற்கைத்துறை பற்றிய விரிந்தவொரு பார்வையை வழங்குகிறது.
அரசியல் பற்றிய கற்கை அணுகுமுறைகள் பல உள்ளன. அவற்றுள் அரசியல் தத்துவ அணுகுமுறை முதல் பின்நவீனத்துவ அணுகுமுறை வரையான எட்டு அணுகுமுறைகளைத் தேர்ந்து அவை பற்றிய விரிவான விளக்கங்களை நூலாசிரியர் தருகின்றார். ஒவ்வொரு அணுகுமுறை பற்றியும் விளக்கும் பொழுது, அவை ஒவ்வொன்றினதும்
அ) கோட்பாடுகள் (THEORIES)
ஆ) எண்ணக்கருக்கள் (CONCEPTS)
இ) வெளிப்பாட்டு மொழி, அருஞ்சொற்கள் தொடர்கள் (LANGUAGE)
ஈ) ஆய்வுமுறைகள் (METHODS)
உ) அனுமானங்கள் (ASSUMPTIONS)
என்பவற்றை தெளிவுற எடுத்துக்கூறுவதோடு நோக்குமுறைகளை ஒப்பீடு செய்தும் கருத்துரைக்கின்றார்.
அரசியல் விஞ்ஞானம் என்ற கற்கைத்துறை மட்டுமல்லாது, சமூக விஞ்ஞானக் கற்கைத்துறைகள் அனைத்தையும் விரிந்த நோக்கில் புரிந்து கொள்ள உதவும் இந் நூலின் அறிமுகமாக அமையும் உரையை சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். நிகழ்ச்சியை ச. சத்தியதேவன் ஒருங்கிணைக்கவுள்ளார்.
திகதி - ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர் 19, 2021
நேரம் - இலங்கை நேரம் இரவு 7.30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:00
இங்கிலாந்து நேரம் பிப 3:00
இணைப்பு : Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411
இந்நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களிடமும் தோழர்களிடமும் நிகழ்வு குறித்துப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இத்தொடரின் முதல் 6 நிகழ்வுகளுக்கான யூ ட்யூப் இணைப்புகள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தோழமையுடன்
விதை குழுமம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.