விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.
பௌதீகவியலில் சக்தி என்பது மிக அடிப்படையான எண்ணக்கருவாக இருப்பதைப் போன்று அரசியல் கல்வித்துறையில் அதிகாரம் (POWER) என்னும் எண்ணக்கரு அடிப்படையானதாக அமைந்துள்ளது என பெர்ட்டண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ரஸ்ஸலின் இக்கூற்றை மேற்கோள் காட்டும் ஜயதேவ உயன்கொட அவர்கள் 'அதிகாரம்' பற்றிய நவீனகால அரசியல் கோட்பாடுகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமது நூலின் 5 ஆம் இயலில் (POLITICS AND POLITICAL SCIENCE - A CONTEMPORARY INTRODUCTION) மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுவானவர்கள் ஆகியோரின் தேடலுக்கும் படிப்புக்கும் உரிய வழிகாட்டிக் குறிப்புக்களைத் தந்துள்ளார்.
நவீன கால அரசியல் கோட்பாட்டாளர்கள் அதிகாரத்தின் மூன்று பரிமாணங்களை விளக்கிக் கூறியுள்ளனர்.
ஆட்சியாளர்களால் ஆளப்படுபவர் மீது பிரயோகிக்கப்படும் அதிகாரம் இதனை 'POWER OVER' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியமறுத்து ஆளப்படுவோர் எதிர்ப்பை தெரிவதற்கும் அதிகாரம் தேவைப்படுகிறது. இதனை 'எதிர்ப்பதற்கான அதிகாரம்' (POWER TO RESIST) எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளை மாற்றுவதற்கான (POWER TO CHANGE) அதிகாரமும் ஆளப்படுவோரால் பிரயோகிக்கப்படுகிறது. இது அதிகாரத்தின் மூன்றாவது பரிமாணம் ஆகும்.
மேற்குறித்த வகைப்பாடும், அதிகாரத்தின் 'POWER OVER' 'POWER TO' இருவேறு நோக்குமுறைகளும் அரசியல் கோட்பாட்டு ஆய்வுகளின் சுவாரசியம் மிக்க கூறுகளாகும்.
விதை குழுமம் ஒருங்கிணைக்கும் 'அறிதலும் பகிர்தலும்' தொடரின் 8 வது நிகழ்வு ஒக்ரோபர் 10 ஆம் திகதி 'அரசும் அதிகாரமும்' என்னும் தலைப்பில் இடம்பெற இருக்கின்றது. உரையாற்றவிருக்கும் சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் உரை அதிகாரம் பற்றிய மக்ஸ் வெபர், கார்ல் மார்க்ஸ், றொபர்ட் டால், அந்தோனியா கிறாம்சி, ஹன்னா அரண்ட் ஆகியோரின் கோட்பாடுகள் பற்றிய அறிமுகத்துடன் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ஸ்டிவன் லூக்ஸ் அவர்களின் அதிகாரம் பற்றிய கோட்பாடும் இவ்வுரையில் விளக்கிக் கூறப்படும். நிகழ்வை ஒருங்கிணைக்க இருப்பவர் ச. சத்தியதேவன்.
திகதி - ஞாயிற்றுக்கிழமை, ஒக்ரோபர் 10, 2021
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:00
இங்கிலாந்து நேரம் பிப 3:00
இணைப்பு - https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411
இந்நிகழ்விலும் விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகள், உரையாடல்களில் நீங்களும் கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களிடமும் தோழர்களிடமும் நிகழ்வு குறித்துப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இத்தொடரின் முதல் 7 நிகழ்வுகளுக்கான யூட்யூப் இணைப்புகள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகளையும் அதன் யூட்யூப் பக்கத்தில் பார்க்கமுடியும். இந்த மடலுடன் இம்மாதம் நிகழவிருக்கின்ற ஏனைய 3 நிகழ்வுகள் பற்றிய விபரங்களையும் இணத்திருக்கின்றோம்.
விதை குழுமத்தின் இணையத்தள முகவரி - https://vithaikulumam.com/
விதை குழுமத்தின் முகநூல் பக்கம் - https://www.facebook.com/vithaikulumam
தோழமையுடன்
விதை குழுமம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.