விதை குழுமம்: அறிதலும் , பகிர்தலும் தொடர் 16 - கல்வியின் சமூகவியல்!



'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவந்த சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் தொகுத்த ஈழப்போராட்டம் பற்றிய மூன்று தொகுதிகளின் நூல் வெளியீடு ஜூன் 25, 2022 அன்று 'டொராண்டோ'வில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. அது பற்றி ரகுமான் ஜான் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவலினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி பின்வரும் தலைப்புகளில் வெளியானது:
1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் வெளியாகி தலா ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற நான்கு நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறும்.
'
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகிஇ வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிஇ ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றிஇ தொலைக்காட்சித்துறைஇ திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.

இலண்டனில் ஜூன் 11, 2022 அன்று விம்பம் அமைப்பின் ஆதரவில் நடத்தப்பட்ட 'மலையக இலக்கிய மாநாடு' நிகழ்வுக்கான காணொளி:
- * அழைப்பிதழைத் தெளிவாகப் பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை ஒருமுறை அழுத்தவும். -
தகவல்: ராஜமாணிக்கம் மாணிக்கம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஓர் ஆவணப்பதிவாக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

* அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்குக் கீழுள்ள 'இமேஜ்'தனை அழுத்தவும்.

நேரம் மாற்றப்பட்டிருக்கிறது நண்பர்களே! சனிக்கிழமை
4:00pm to 8:00pm. கொரோனாக்கால வரைமுறை தளர்த்தியதில்
கொஞ்சம் வசதியாக்கப்பட்டிருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்