- ''பதிவுகள்' இதழின் நிகழ்வுகள் பகுதிக்குத் தகவல்கள் அனுப்புபவர்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னராவது அனுப்புங்கள். கடைசி நேரத்தில் வரும் தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் போகும் சந்தர்ப்பங்களுண்டு. இத்தகவலும் இறுதி நேரத்தில் வந்த தகவல். ஒரு பதிவுக்காகப் பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், அந்தனி டி சிமித் [ANTHONY D SMITH] லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ் [LSE] என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தவர். 1982 - 2000 காலத்தில் இவர் தேசியவாதம் குறித்த மிக முக்கியமான கோட்பாட்டாளர்களில் ஒருவராக அறிவுலகின் கவனத்தைப் பெற்றார்.
1980 களில் தேசியவாதம் பற்றிய மூன்று கோட்பாடுகள் முதன்மையிடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன. அவையாவன:
i. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM]
ii. நிரந்தரவாதம் [PERENNIALISM]
iii. நவீனத்துவவாதம் [MODERNISM]
இக்கோட்பாடுகளோடு 1990 களில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் இன்னொரு முக்கியமான கோட்பாடு என்ற தகுதியயைப் பெற்றது.
விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் டிசம்பர் 2021 நிகழ்வில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் பற்றி விரிவாக ஆராயப்படும். அந்தனி டி சிமித் ஆதிமுதல்வாதம், நிரந்தரவாதம், நவீனத்துவவாதம் என்னும் கோட்பாடுகளின் குறை நிறைகளை விமர்சனநோக்கில் மதிப்பீடு செய்வதோடு, இக்கோட்பாடுகளின் சிறப்பான கூறுகளை ஏற்றுக் கொண்டு தேசியவாதங்கள் பற்றிய புதிய விளக்கத்தை முன்வைக்கின்றார்.
இவருடைய கோட்பாட்டின் அடிப்படையான கருத்தை 'தேசியவாதத்தின் இனக்குழும மூலங்கள்' [ETHNIC ORIGINS OF NATIONALISM] என்ற சொற்றொடர் மூலம் விளக்கலாம். தேசியவாதம் ஒரு வெற்றிடத்தில் இருந்து உருவாவதில்லை; அதற்கொரு கடந்தகாலம் உள்ளது; இக் கடந்தகாலம் இனக்குழும கடந்தகாலம் [ETHNIC PAST] ஆகும் என அவர் கூறினார். இக் கடந்தகாலம் வெவ்வேறு தேசிய இனங்களுக்கு [NATIONS] வேறுபட்டதாக இருக்கலாம்.
பெரும்பான்மையான தேசிய இனங்கள் கடந்தகாலத்தை உடையவை. அவற்றுள்ளும் சில மிக நீண்ட கடந்தகாலத்தை உடையவை என அவர் கூறினார். இனக்குழும கடந்தகாலம் [ETHNIC PAST] தேசியத்தின் நிகழ்காலத்தில் [NATIONAL PRESENT] செல்வாக்கு செலுத்துவதை எடுத்துக் காட்டினார். இனக்குழுமங்கள் தேசிய இனங்களாகப் பரிமாணம் பெறுவதை அரசியல் சமூகமாக [POLITICAL COMMUNITY] உருவாகும் செயல்முறை எனவும், அது ஒரு நிறுவனச் செயல்முறை [INSTITUTIONAL PROCESS] என்றும் அந்தனி டி சிமித் கூறுகிறார். இனக்குழுமக் குறியீட்டுவாதம் கோட்பாடு,
i. பிரதேசம் சார்ந்த ஒருமைத் தன்மை உருவாக்குதல் [TERRITORIALISATION]
ii. புராணப் புனைவுகள் உருவாக்கம் [MYTH MAKING]
iii. நினைவுகள் கட்டமைக்கப்படுத்தல் [MEMORY FORMATION]
iv. பண்பாட்டு ஒருமையாதல் [CULTURAL UNIFICATION]
v. சட்டங்கள், வழமைகள் தரநிர்ணயம் செய்யப்படுதல் [LEGAL STRANDARDISATION]
ஆகியவற்றை வரலாற்றுநோக்கில் விளக்குகின்றது.
அறிதலும் பகிர்தலும் தொடரின் 10வது நிகழ்வில் தேசியவாதம் பற்றிய அந்தனி டி சிமித் அவர்களின் கருத்துக்களை முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் தன்னுடைய பகிர்வை முன்வைக்கவுள்ளார். இந்நிகழ்வை ச. சத்தியதேவன் அவர்கள் ஒருங்கிணைப்பார்.
திகதி - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 12, 2021
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 9 மணி
இங்கிலாந்து நேரம் பிப 2:00
இணைப்பு - https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411
இந்நிகழ்விலும் விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகள், உரையாடல்களில் நீங்களும் கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களிடமும் தோழர்களிடமும் நிகழ்வு குறித்துப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
அறிதலும் பகிர்தலும் தொடரின் முன்னைய நிகழ்வுகளுக்கான யூ-ட்யூப் இணைப்புகளையும் இத்துடன் இணைத்துள்ளோம். விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகளையும் இந்த யூட்யூப் பக்கத்தில் பார்க்கமுடியும். இந்த மடலுடன் இம்மாதம் நிகழவிருக்கின்ற ஏனைய நிகழ்வுகள் பற்றிய விபரங்களையும் இணைத்திருக்கின்றோம். இந்தக் காணொலிகளைப் பார்ப்பதுடன் விதை குழுமத்தின் நிகழ்வுகளிலும் பங்கேற்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.
விதை குழுமத்தின் இணையத்தள முகவரி - https://vithaikulumam.com/
விதை குழுமத்தின் முகநூல் பக்கம் - https://www.facebook.com/vithaikulumam
https://youtu.be/lK9TSp-OR90
https://youtu.be/w0k5uglGwAc
https://youtu.be/AgabmaLX8WY
https://youtu.be/0IU0-PMiip4
https://youtu.be/jeYpU-k0gUo
https://youtu.be/DjpoSaIkN8Q
https://youtu.be/HjdRWGeaiYc
https://youtu.be/x3OAWa-50F4
தோழமையுடன்
விதை குழுமம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.