தமிழ் ஸ்டுடியோ.காம்: படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா
10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்
சிறப்பு அழைப்பாளர்கள்:
எழுத்தாளர் சாரு நிவேதிதா
இயக்குனர் வஸந்த்
இயக்குனர் ஜனநாதன்
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் பா. ரஞ்சித்
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்து, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ் சூழலில் மிக காத்திரமான, செறிவான கட்டுரைகளை, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வரும் பெரும் முயற்சியினை படச்சுருள் கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வந்தது. மிக கடுமையான இந்த பணியை படச்சுருள் ஆசிரியர், ஆலோசனை குழுவோடு இணைந்து மிக சிறப்பாகவே செய்து முடித்தது. இப்போது இரண்டாம் ஆண்டில், இன்னமும் சிறப்பான மாற்றங்களோடு படச்சுருள் வெளிவரவிருக்கிறது. நிகழ்கால சினிமாவைப் பற்றியும் படச்சுருள் பேசவிருக்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு வருகை புரிந்து படச்சுருள் இதழுக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
மீண்டும் ழகரம் சஞ்சிகை எதிர்வரும் ஜூன் 19ந்திகதி வெளிவரவுள்ளது. கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'ழகரம்' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும் கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகை. 'ழகரம்' சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே சக எழுத்தாளர்களான கவிஞர் திருமாவளவன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். கவிதைகள், தொடர்கதைகள் என பலவகைப்படைப்புகளைக் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். 'கானல் நீர்க்கனவுகள்' என்னும் கவிதை நூலினை வெளியிட்டிருக்கின்றார். 'காலத்தின் பதிவுகள்' என்னும் கவிதைத்தொகுதி மலையன்பன், ரதன் ஆகியோரின் கவிதைகளுடன் இவரது கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலாநிதி நீலமலர் செந்தில்குமார் அவர்களின் An Endless Refuge என்ற ஆங்கில் நூல் அண்மையில் ரொறன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் உரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.




கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.
இன்னொரு யாழ்ப்பாண நூலக எரிப்பு நாள் வந்து கடந்து போயுள்ளது. அந்த ஒரு நாளில் நினைவு கூர்ந்துவிட்டுப் போவதால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் ஆவணங்களைக் காக்க முடியாது.
அன்புடையீர், உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் தொல்காப்பியம் பற்றிய கருத்தரங்கினையும் முத்தமிழ் விழாவினையும் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அழைப்பதில் பெருமகிழ்வு எய்துகின்றோம். இத்துடன் இருநாள் நிகழ்வுகளக்கான நிகழ்;ச்சித் தொகு;பபுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து வருகை தரும்வண்ணம் பணிவன்போடு கேட்டக்கொள்கின்றோம். 




இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'குடிவரவாளன்' நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி...




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









