நோர்வே: கவனயீர்ப்புப் போராட்டம்
அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக
காலம்: வியாழக்கிழமை 05.11.2015
நேரம்: மாலை 18:00 -19:00 மணி வரை
ஐக்கிய நாடுகளின் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல் தமிழ் மக்களுக்கு 67 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட பேரவலங்களுக்கு அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையே நீதியை பெற்றுத்தரும்.
இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக அறிக்கை பதிவு செய்துள்ளது. இது தான் இந்த அறிக்கையின் மூலம் பெறப்படும் பிரதான பலாபலன். ஆகவே தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தில் இவ்வறிக்கை ஒரு முக்கியமான வகிபாத்திரத்தை கொண்டிருக்கும் என நம்பலாம்.
தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருப்பது முக்கியம். வெளி வந்துள்ள அறிக்கையை பயனற்றதாக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டுமென்றால் நாம் தொடர்ந்து போராட வெண்டும்.
ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.






நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.
நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்.


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.




அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 20 -09-2015 ஆம் திகதி ஞாயிறு கனடாவில், 430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario முகவரியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருவாளர்கள் தேவகாந்தன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail: 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









