தாய் வீடு - சுயாதீன கலைத் திரைப்பட மையம,; ரொறன்ரோ 12th ITaFF -2016
June 11, 2016 இல் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ்த் திரைப்;பட விழா – படைப்புகளுக்கான கோரல்
தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன கலை திரைப்பட மையமும் கனடாவின் ரொறன்ரோ நகரில், நடத்தும் சர்வதேச குறுந் திரைப்பட விழாவில் பங்குபற்றுவதற்கான குறுந்திரைப்படங்கள் வரவேற்கப்படுகின்;றன.
சிறந்த குழந்தை நட்சத்திரம், நடிகர், நடிகைக்கான விருதுகள்
சிறந்த கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்குநருக்கான விருதுகள்
சிறந்த குறும்படம், சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த குறும்படம்,
சிறந்த குறும்படத்துக்கான விமர்சகர் விருது என்பவற்றோடு
சான்றிதழும் C$200 - 1000 வரையிலான பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
படைப்புகள் ஆங்கிலத்தில் துணைத் தலைப்புகளைக் கொண்டிருத்தல்; விரும்பத்தக்கது.
• படைப்புகள் ஏப்பிரல் 30, 2016க்கு முன்னர் கிடைக்;கக்;கூடியதாக அனுப்பிவைக்கப்;படவேண்;டும்.
• படைப்புகள்; 20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டு;ம்.
• படைப்புகளின் மொழி தமிழாக இருத்;தல் வேண்;டும்.
• படைப்புகளுடன் அதில் பங்குபற்றிய தொழினுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்;டியல் இணைக்கப்படல் வேண்;டும்.
• படைப்புகளின் தயாரிப்பாளரின் கையொப்;பத்;துடன் கூடிய கடிதம் இணைக்கப்படல் வேண்டு;ம்.
• தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
• படைப்புகள் அனுப்பப்படவேண்டிய முகவரி:

பரிசு பெற்றோர்:
உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை. International Association for Tolkappiyam - Canada Branch 4 - 2800 Eglinton Avenue East, Toronto, ON. M1J 2C8
இலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (10.03.2016 ) வியாழக்கிழமை கண்டியில் காலமானார். கடந்த ஆண்டிறுதியில் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் யாத்திரையை, துணைவியார் மஸீதா புன்னியாமீனுடன் மேற்கொண்டிருந்த இவர், புனிதக்கடமையை நிறைவுசெய்தபின் நாடு திரும்பும் வேளையில் 29.12.2015 அன்று திடீர் சுகவீனம் காரணமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு துபாய் ராஷீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'மெல்லிசைத் தூறல்கள்' பாடல் நூல் வெளியீட்டு விழா 2016, மார்ச்; 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
பிரபல ஆவணப்பட இயக்குநர் அம்சன்குமார் இயக்கத்தில் உருவான ஆவணப்பட வெளியீடும் தவில் மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை பதிப்பித்த தவில் மேதை லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி புத்தக வெளியீடும் இணைந்த நிகழ்வு சிட்னி தூங்காபியில் நடைபெறுகிறது. 

மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் 6 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை இதுவரையில் நான்கு நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றது. ”உயிர்ப்பு” நிகழ்வுகள் விழிம்பு நிலை மக்களின் குரலாய் நாடகங்களின் மூலம் ரொரொன்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. புதிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடக அமைப்பாக உயிர்ப்பு நாடகப்பட்டறை அமைந்துள்ளது . சீரிய நாடகங்களை எழுதித் தயாரிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள உயிர்ப்பு ஆர்வமாக உள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் உயிர்ப்பின் 5ஆவது நிகழ்வில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.
இலங்கை - இந்தியா - பாக்கிஸ்தான் - பங்களாதேஷ் - நேபாளம் - பூட்டான் - மாலைதீவு - ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









