இலண்டனில் தமிழ் நாவல் கருத்தரங்கு!


கரவை மு. தயாளன் எழுதிய 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள் முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள தொகுப்பு நூலும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் Dandenong North Senior Citizens Centre ( 41 A, Latham Crescent, Dandenong North , Victoria 3175) மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து 7.00 மணிவரையில் நடைபெறும்.
நூலாசிரியர் கரவை மு.தயாளன் லண்டனில் கல்வி, கலை இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ளவர். ஏற்கனவே கடல் கடந்து போனவர்கள் என்னும் நாவலையும் மண்ணில் தெரியுது வானம் என்னும் கட்டுரைத்தொகுப்பையும் வெளியிட்டிருப்பவர். நாளை மெல்பனில் அறிமுகமாகவுள்ள 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவல் தொடர்கதையாக லண்டன் தமிழர் தகவல் இதழில் வெளியாகியிருக்கிறது. பின்னர், இலங்கையில் தினகரன் வாரமஞ்சரியிலும் லண்டனில் பார்வைகள் என்னும் இதழிலும் தொடராக வெளிவந்துள்ளது.
"இந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று லண்டனில் குடியேறியவர்களையும் அவர்களின் வாரிசுகளான அடுத்த சந்ததியினரையும் பாத்திரங்களாகக்கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் மூலவேர், அவர்கள் பிறந்த தாய் நாட்டு மண்ணிலேயே இன்றும் ஆழப்பதிந்திருக்கின்றது. ஆதனால் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மண்ணுடன் முழுமையாக ஒன்றிக்க முடியாத அவலங்களுக்கும் ஆளாகின்றனர். அவர்களது வாரிசுகளின் வாழ்வும் சிந்தனையும் புலம்பெயர்ந்த நாட்டு மண்ணுடன் இசைவாக்கம் பெறுகின்றன. அதனால் இரண்டு தலைமுறையிலும் நடவடிக்கையிலும் முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு. அந்த முரண் நிலையை இந்த நாவல் சித்திரிக்கிறது " இவ்வாறு இந்நாவல் பற்றிய தனது மதிப்பீட்டை ஈழத்தின் மூத்த படைப்பாளி தெணியான் பதிவுசெய்துள்ளார்.

யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத் துணைக்கண்டத்துக்குரிய நடுவர்களிலொருவருமான நண்பர் ரூபானந்தசிவம் (ரூபன்) சிவனடியான் கீழ்க்கண்ட செய்தியினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Attention All Srilankan Old School Associations:
Dear Sports Secretary and President, please take part in the “SRILANKAN LEGENDS CUP”, 7 A-Side 6-Over Cricket Tournament to be held in Toronto on Saturday 27th August 2016
The “SRILANKAN LEGENDS CUP” Cricket Tournament is organized to explore the hidden talents among Srilankan female and male cricketers in Canada .This tournament is to be held as an annual event.
*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.
All Srilankan School Associations (SSA) in Canada are invited to take part in the upcoming “SRILANKAN LEGENDS CUP”. This Tournament gives young girls and boys a new opportunity to participate even if they don’t have a team to play for. For all tournament related communication, correspondence and registration please contact Ruban R Sivanadian ( Old student of Jaffna Hindu College, ICC Umpire- Americas) at இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். or call 416 200 2330.
'
வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை" ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்" தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது."
இவ்வாறு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்ää பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்களது கல்விச்சேவை மற்றும் பொதுப்பணிகளைப் பாராட்டிக் கௌரவித்த 'அமுதவிழா"வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் தமிழர் கல்விநிலையத் தலைவர் திரு. எஸ். பகிரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வி. ரி. இளங்கோவன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் தாயகத்தில் முன்னணியில் திகழும் கல்லூரிகளில் பணியாற்றச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதனைத் துறந்து தான் நேசித்த பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி - சமூக முன்னேற்றத்தை மனதில்கொண்டு அப்பிரதேசங்களில் பணியாற்றி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். புலம்பெயர்ந்த மண்ணிலும் எம்மவரின் எந்த விழாவிலும் அவரது சிறப்புரை இடம்பெறுவதை எல்லோரும் அறிவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவையோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பேசும் ஆற்றலாளர். அவரது பணிகள் மேலும் தொடர நாம் என்றும் உறுதுணையாகவிருந்து ஒத்துழைப்பு நல்குவோம்" என்றார்.
தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே இனி நன்கொடை கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். அத்தனை கசப்பான சம்பவங்கள். அதன்படியே தொடர்ந்து ஓராண்டாக எவ்வித நன்கொடையும் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை, செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு லெனின் விருது மிக பிரம்மாண்டமாக தானாகவே உருவெடுத்துவிட்டது. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செல்வமாகும். ஆனால் அவ்வளவு பணம் நல்ல சினிமா சார்ந்து இயங்கும் இயக்கத்திற்கு எப்படி கிடைக்கும். எனவே நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அனுராக் காஷ்யப் போன்ற உலகப் புகழ் பெட்ரா இயக்குனர் இந்த நிகழ்விற்கு வரவிருப்பதால் இதற்கென ஒரு சிறப்பும் தானாகவே சேர்ந்துவிடுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுக்க தயங்கினால், ஸ்பான்சர் செய்யலாம். உங்கள் நிறுவனம் அல்லது தொழில் கொஞ்சம் பிரபலமடைய இந்த ஸ்பான்சர்ஷிப் உதவலாம். இதுவரை இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்க இயலாவிடிலும் தங்களால் இயன்ற வகையில் 500, 1000 என்று கூட நன்கொடை செலுத்தலாம். தொகையைவிட உங்களது பங்களிப்பு மிக முக்கியம்.
நன்கொடை கொடுக்கவிரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு மின்னஞ்சல் செய்யவும். ஐந்தாயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்படும்.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1.உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2.ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3.சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’அமரர் அருண்.விஜயராணி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
4.போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6.சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
7.அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
நண்பர்களே 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது இயக்குனர் தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லெனின் விருது பெறுபவர்களின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு உங்கள் ஊரில் தீபா தன்ராஜின் படங்களை திரையிட விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள். திரையிடப்பட வேண்டிய இரண்டு படங்களில் ஒன்று தமிழ். இன்னொன்று ஆங்கில சப் டைட்டிலுடன் இருக்கும். படங்களில் பெயர்கள்: 'Something like a War' (1991) (english sub-titles), Invoking Justice (2011) (தமிழ்)
இதில் 'Something like a War' பெண்களுக்கு செய்யப்படும் கருத்தடை ஆபரேஷன் பற்றியது. இன்னொன்று தமிழகத்தின் பெண் ஜமாத்துகள் பற்றியது. இரண்டு படங்களும் சேர்த்து இரண்டு மணி நேரம் கால அளவு உள்ளவை. படங்களை உங்கள் ஊரில் திரையிட விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “ டாலர் சிட்டி “ உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில்.
இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர்.
சென்றாண்டு நடந்த விழாவில் திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் :

[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தல் தவறுதலாக விடப்பட்டுவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. - பதிவுகள் ]
ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு அவர்களின் கலைமன்ற மாணவியும், திரு. திருமதி. சிவகுமாரனின் புதல்வியுமான செல்வி. செயானா சிவகுமாரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் யூலை மாதம் 30 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5:45 மணியளவில் றிச்மன்கில் அரங்கில் நடைபெற இருக்கின்றது. எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள். இவ்வைபவத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு நடைபெறும் இடம்:
Richmond Hill Centre for the Performing Arts
10268 Yong street Richmond Hill. ON.L4C 3B7
(Yonge st and Major Mackenzie Drive.West)
தகவல்: குரு அரவிந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தீபா தன்ராஜ்
ஐதிராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980'இல் பணி புரிந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். மிக முக்கியமான ஆவணப்படப் படைப்பாளிகளில் ஒருவர். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார், மற்றும் பயிற்சிக்கான திரைப்படங்கள் பல உருவாக்கியுள்ளார். விருது பெற்ற ஆவணப்படங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல தொடர் திரைப்படங்கள் இதில் அடங்கும். உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - பச்சை தேவதை - இரண்டாம் ஜாமங்களின் கதை முதலான நூல்களையும் எழுதியிருக்கும் எழுத்தாளர் சல்மா, தமிழ்நாடு சமூகநல வாரியத்தலைவராகவும் பணியாற்றியவர். கவிஞர் சல்மாவுடனான இலக்கியக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களையும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்- ஊடகவியலாளர்கள் - சமூகச்செயற்பாட்டாளர்களையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
‘மலையாள எழுத்தாளரான கமலாதாஸ் ‘என்கதை’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே அது பெரும் புயலைக் கிளப்பியது. அவரது ‘என் கதை’ நூலாக வெளியானபோது பதினொரு மாதங்களிலேயே ஆறு மறு பதிப்புகளைக் கண்டது. முப்பத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. தன் வாழ்க்கையில் தனது இந்த சுயசரிதையை எழுதும்போது தான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை என்று அவர் கூறுகின்றார். கமலாதாஸின் எழுத்துக்களைப்பற்றி அதீத பாராட்டுக்களும், கடுமையான கண்டனங்களுமாக பல்வேறு நிலைப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று மீளாள் நித்தியானந்தன் கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை, லண்டனில் இடம்பெற்ற பெண்களின் கருத்தாடல் நிகழ்வில் பங்குபற்றிப் பேசியபோது குறிப்பிட்டார். நவரட்னராணி சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மீனாள் நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது ‘தந்தைவழி சமூக அமைப்பிற்குள் பெண் என்பவள் மூச்சுவிடமுடியாமல் திணறும் அவஸ்தையைப் பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை இந்த நூலிலே முன்வைத்திருக்கிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பாட்டுக் குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் இந்த நூலிலிலே ஒளிவு மறைவின்றி எழுதிச் செல்கிறார். அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில், கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோலச் சிக்கி, வாராத துணைநாடி அலைமோதும் தன் நெஞ்சத்துக் குமுறல்களை அவர் அநாயாசமாக எழுதிச் செல்கிறார். கமலாதாஸின் ‘என் கதை’ என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்’
ஈழத்தில் இசைக்காகவென்றே நிர்மாணிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக்கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து சிறந்த இசை ஆசிரியராகப் புகழ்பெற்ற ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கிராஜா அவர்களின் மறைவு ஈழத்து இசை உலகின் மிகப் பெரிய ஆளுமையை இழந்து நிற்கும் சூனியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தன் இறுதிக் காலங்களில் எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சிக்காக அவரோடு நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நாட்களை மிகுந்த துயரத்தோடு நினைவு கூருகின்றேன். சுகவீனமான நிலையிலும் எனது கேள்விகளுக்கு பொறுமையாகவும், பரிவோடும் பதில் சொல்லிய அந்தப் பெருமனதை வியந்து பார்க்கின்றேன். எந்த நேரத்தில் தொலைபேசி எடுத்தாலும் சலிப்பில்லாமல் ஒரு தாயின் கனிவோடு என் கேள்விகளுக்கு அவர் பதில் தர முயற்சித்தும் சட்டென அவருக்கு நினைவுபடுத்தமுடியாத நிலையில் ‘மாலிக்கு இது தெரியும் அவரிடம் இதைக் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறுவதையும் நினைவுகூருகின்றேன். அவருடைய பேட்டியோடு எனது ‘மகரந்தச் சிதறல்’ நூல் சென்னையில் வெளியாகிவிட்ட போதிலும் அதனை அவரிடம், அவரின் கரங்களில் நேரடியாக கையளிக்கும் பாக்கியத்தை இழந்து போனேன் என்று நினைக்கும்போது நான் மேலும் துயரத்தில் ஆழ்கின்றேன்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?? என்று பெண்களை இழிவு படுத்தி இருட்டடிப்புச் செய்த காலத்தில் பெண்களுக்கான மூலாதாரமாக முதன்மைப்பாடசாலையாக பிரித்தானியரால் 1834 அளவில் நிறுவப்பட்டதுதான் வேம்படி மகளிர் கல்லூரி. 'கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்"என்கின்ற பெரும் புத்துணர்விற்கு பெண்களை இட்டுச் சென்றது இக்கல்லூரியின் தோற்றம். அதி வணக்கத்திற்குரிய குருமார்கள் பீற்றர் பார்ச்சிவல், ஜேம்சு லிஞ்ச்,தோமஸ் ஸ்குவான்சு ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட வேம்படி மகளிர் கல்லூரியானது ஈழத்து தமிழ் மாதர்களின் கல்வியை, அறிவை, கலாச்சாரத்தை,வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி நிற்கின்ற மாபெரும் கலைக் கோவிலாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. . இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் சாதனையாக யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என்கின்றது கல்வித் திணைக்களத்தின் புள்ளி விபரம் . இத்தகு வரலாற்றுப் புராதனமும்,பெருமையுமிக்க வேம்படி மகளிர் கல்லூரியில் கவின் கலைகளை வளர்ப்பதற்கான அரும் பெரும் முயற்சிக்கான அடித்தளமாக டொரோண்டோவில் பிறந்து வளர்ந்து நாட்டியக்கலையில் சாதனை படைத்து நிற்கும் செல்வி ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் நாட்டிய தர்ப்பணம் எனும் அற்புத நிகழ்வை 16 ந்திகதி ஜூலை அன்று நடாத்தி எம்மை எல்லாம் அதிர வைத்தார். மண்டபம் நிறைந்த மக்கள் சூழ அவரின் அற்புதமான நாட்டிய தர்ப்பணம் கலை மன்றம் ஆதரவில் "தோர்ன்கில்" நகர கவின் கலைப் பெருஅரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது.

தகவல்: தமிழர் வகைதுறை வளநிலையம் (டொராண்டோ)

தகவல்: அருள் சவரிமுத்து
புலம் பெயர்ந்த மண்ணான கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற தெலை நோக்கோடு ரிஈரி (வுநவு) தொலைக்காட்சியின் ‘தமிழ் இனி வெல்லும்’ - தொடர் -2 இன் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் 2016 ஆம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , வுநவு தொலைக்காட்சியின் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அமரர் வை. சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக, கனேடிய சிறார்களிடையே தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்குடன் , ஆநனஉநவெசந ஊழnநெஉவ நிறுவனர் வைத்திய கலாநிதி செந்தில் மோகன் அவர்களின் ஆதரவுடன் திருமதி ராஜி அரசரட்ணம் அவர்கள் இந்தத் தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.
கீழ்ப்பிரிவுப் போட்டியின் போது, முதலிடத்தை ஜஸ்மிதா சிவரூபன் , இரண்டாமிடத்தை அபிவர்ஷி பாலசுப்ரமணியம் , மூன்றாம் இடத்தை துவாரகா ஜீவனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேல் பிரிவுப் போட்டியில் முதலிடத்தை குபேரகா குமரேஸ்வரன், இரண்டாமிடத்தை ஆரணி சுகந்தன் , மூன்றாம் இடத்தை அகிலவன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன . நடிப்புடன் கூடிய இந்தப் போட்டி நிகழ்வில் மாணவர்களை விட அதிகமான மாணவிகளே கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது. இப்போட்டி நிகழ்வின்போது பிரதம நடுவராக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கடமையாற்றினார். ஏனைய நடுவர்களாக வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிரல்: 'நர்த்தகி' திரைப்படம் திரையிடல் | விமர்சனவுரை: ரதன் / கந்தசாமி கங்காதரன்
'அயல்' திரைப்படம் முன்னோட்டம் | கலந்துரையாடல் | ஏற்புரை: இயக்குனர் ஜி.விஜயபத்மா
நன்றியுரை: மேரி கியூரி போல் | நாள்: 16-07-2016 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் |3A, 5637, Finch Avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: 416-822-6316 | அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்
நண்பர்களே, விதை இயற்கை அங்காடி கடந்த நான்கு வருடங்களாக அடையார் காந்தி நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், தமிழ் ஸ்டுடியோவின் பியூர் சினிமா புத்தக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் தற்போது விதை இயற்கை அங்காடியில் கிளை ஒரு திறக்கப்பட்டுள்ளது. சிறிய கடைதான். ஆனால் மொத்தமாக ஆர்டர் செய்தால் உங்கள் வீடு தேடி பொருட்கள் வரும். பொருட்களை அலைப்பேசியின் மூலம் பெற: 9566266036, 9444407798அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com