இலண்டன் எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய 'காலத்தை வென்ற காவிய மகளிர்' (Women of the Epics who outdated their times) என்ற ஆய்வு நூலுக்கு 'இலக்கிய விருது-2016' என்ற உயர் விருதை மேற்படி நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. இதை, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு. 06 என்ற இடத்திலமைந்த 'கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்' 10-09-2016, சனிக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணிக்குப் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. மேலும் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' (Ancient Tamils and Social Imbalances) என்ற நூலுக்கு, ' இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' (மட்டக்களப்பு) 'தமிழியல் விருது-2011' என்ற இலக்கிய ஆய்வுக்கான விருதையும், தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான 'தமிழியல் விருது–2014' என்ற இரு விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.