[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகிறோம். ஒரு பதிவுக்காக இங்கே விபரம் பதிவாகின்றது. - பதிவுகள் ]
இலங்கையில் நீண்ட கால வரலாற்றைக்கொண்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு தற்பொழுது 200 வயது. அதனை முன்னிட்டு உலகில் பல நாடுகளில் வதியும் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி தமது கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்விச்சாலைக்கு நன்றி தெரிவிக்கும் எண்ணத்துடனும் அங்கு பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையை நினைவு கூர்வதற்காகவும் பழைய மாணவர் ஒன்றுகூடல்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துவருகின்றனர்.
அந்த வரிசையில் அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் வதியும் யூனியன் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர்.
மெல்பனில் Dandenong Menzies மண்டபத்தில் ( Menzies Avenue, Dandenong) நடைபெறவுள்ள இவ்விழா, Athys Jewellers - Perpetua Money Transfer, Prime Developers ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் அவுஸ்திரேலியாவில் வதியும் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்படும் நிகழ்வும் இருப்பதனால் குறிப்பிட்ட முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் தாமதமின்றி தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற அப்சராஸ் மோகன்ராஜ் இசைக்குழுவின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியுடன் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்ட கலைஞர் மாவை நித்தியானந்தன் எழுதி, இயக்கிய முட்டை என்னும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் நாடகம் மெல்பன் பிரபல SAPPHIRE நடனக்குழு வழங்கும் நடனவிருந்து உட்பட பல கதம்ப நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
அறுசுவை உணவுடன் பிரவேசக்கட்டணம் $ 25.00 வெள்ளிகள் மட்டுமே.
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், மற்றும் கல்லூரி நலன் விரும்பிகள், அன்பர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
சிவநாதன் :- 0412 067 019
கே. எஸ். பகீரதன்:- 0403 476 856
நரேன்:- 0434 766 966
தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.