இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான மொழிபெயப்புக்கான சாகித்திய விருது எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான உபாலி லீலாரத்தினாவுக்கு இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத்தொகுப்பு நூலை மொழி பெயர்த்ததற்காக "Kadali binde giya pasu" உபாலி லீலாரத்தினாவுக்கு சிறந்த மொழிபெயர்பாளர் விருது கிடைத்துள்ளது.
இவ்விதமான மொழிபெயர்ப்புகள் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழிவகுக்கின்றன. அதே சமயம் ஒரு நாட்டு மக்களின் பல்லின இலக்கியச் செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. வாழ்த்துக்கள் அகிலுக்கும், மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரத்தினாவுக்கும். இது போன்ற மேலும் பல மொழிபெயர்ப்புகள் தமிழில் இருந்து சிங்களமொழிக்கும், சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும் வெளிவரவேண்டும். வெளிவரும் என எதிர்பார்ப்போம்.