‘நாட்டியத்திற்குரிய உடல்வாகும் நளினமும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கம் ஓம்கார வந்தனம்; முதற்கொண்டு அலாரிப்பு, ஜதீஸ்வரம், ஜானகி கௌத்வம், வர்ணம், ஸ்ரீ ஆண்டாள், சிவ ஸ்துதி, அஷ்தவித நாயகிகள், தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளையும் ஈடுபாட்டுடன் தனக்குள் இருக்கும் ஜீவனின் வெளிப்பாடாக கொண்டுவந்தமை பாராட்டுக்குரிய விடயம். ஜானகி கௌத்வம் போன்ற வித்தியாசமான உருப்படிகளை, பல நாட்டிய நூல்களை எழுதி வெளியிட்டவரும், பிரதிஷ்ராவின் குருவுமான நாட்டிய விசாரத் ஜெயந்தி யோகராஜாவே உருவாக்கி, வடிவமைத்து வித்தியாசமான முறையில் நர்த்தகி பிரதிஷ்ரா ஆடலால் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாங்கு குருவின் நாட்டிய ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றது’ என சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்திருந்த நாட்டிய செல்வம் ஸ்ரீ சண்முக சுந்தரம் அவர்கள் தனது சிறப்புரையில் தெரிவித்திருந்தார். ‘சென்னை ஸ்ரீமதி ரோசினி; கணேஷின் பாடல், ஸ்ரீ. எம். பாலச்சந்தரரின் மிருதங்கம், சென்னை ஸ்ரீ முடிகொண்டான ரமேஷ் அவர்களின் வீணை இசை, ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசை, ஸ்ரீ பாலு ரகுராமனின் வயலின் இசை, ஸ்ரீ தணிகவேல் அண்ணாமலையின் தவில் வாத்தியம், ஸ்ரீ சம்பத்குமார் பாலசுப்ரமணியத்தின் நாதஸ்வர இசையென பிரபல்யமான பக்கவாத்தியங்களின் கூட்டு முயற்சியுடன் பிரதிஷ்ராவின் நாட்டியம் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தமை மிகச்சிறப்பானது’ என மேலும் அவர் தெரிவித்தார்.
‘கவித்துவம் மிக்க பாடல் வரிகளை வடிவமைத்த நாட்டியக் கலா சாரதி ஜெயந்தி யோகராஜா மரபு சார்ந்த ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை நடனத்தாரகை பிரதிஷ்ரா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். பார்வையாளர்களை மயக்கும் பாவங்களால் கோகிலக் கண்ணனை நினைந்துருகி, ஆண்டாள் திருப்பாவையை உருவகித்து ஆடிய நர்த்தகி பிரதிஷ்ராவின் ஆடல் சிறப்புக்குரியன. நாட்டியக் கலையை எதிர்காலத்தில் வளர்த்துச் செல்வதற்கு நல்லதொரு குரு அமைந்திருப்பதை அவர் வழங்கும்; ஆடற்கலை மூலம் உணர முடிகின்றது. இவற்றிற்கு நாட்டிய ஆர்வம் நிறைந்த பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்;’ என சிறப்புரை வழங்கிய கவிப் பேரொளி புலவர் என். சிவநாதன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.
‘பிரதிஷ்ராவின் ஆடலின் பாவங்கள் பிறந்த தொட்டிலிலேயே ஆரம்பித்ததை தான் பார்த்ததாகவும் இப்போது நாட்டியக் கலாஜோதியாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுக்கு நாட்டிய ஒளிவீசும் தாரகையாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். எனக்கு இவள் குடும்பத்தாரின் உறவு நீண்ட நாட்களைக் கொண்டது. பெண்மையின் எட்டுவிதமான உணர்வுகளை ‘அஷ்தவித நாயகிகள்’ மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றது’ என பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த ஈழக்கூத்தன் ஏ.சி.தாசீசியஸ் தெரிவித்தார். கலைகள் பரம்பரை மூலம் கடத்தப்படுகின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அரங்க மேடையில் தாயும், குருவுமான ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவுடன் இணைந்து நாட்டிய ரூபினி செல்வி சஸ்கியா யோகராஜாவின்; நட்டுவாங்கம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது’ என மேலும் அவர் தெரிவித்தார்.
லண்டன் கீழைத்தேய நுண்கலை (ழுநுடீடு) அமைப்பின் தலைவி கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் தனது நுண்கலை அமைப்பின் மூலமே நாட்டியக் கலாஜோதி பட்டம் பெற்ற பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கத்;தின் நாட்டியத் திறமையைப் பாராட்டியதோடு, தனது அமைப்பின் அங்கத்தவராகச் செயற்படும் ராஜேஸ்வர நர்த்தகி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் இந்த இருபதாவது பரதநாட்டிய அரங்கேற்றத்தையும் பாராட்டி, இருவருக்கும் பொன்னாடைபோர்த்துக் கௌரவித்;தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த லோகன் மண்டபத்தில் திரளான பார்வையாளர்களுடன் செல்வி பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கத்தின் நாட்டிய அரங்கேற்றம் மகிழ்வுடன் நடந்தேறியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.