‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’
‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’
‘இன்று தமிழ் எழுத்துலகில் படைப்பாளிகள் தங்களது செலவில் சிற்றூண்டி,சாப்பாடு அளித்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வாசகர்களை அழைக்க வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும். பல சமூக அமைப்புக்கள் ஒன்று சோர்ந்து கருத்து வேறுபாடுகளை மறந்து இப்படியான நிகழ்வுகளை நடத்த வேண்டும். இன்று லண்டனில் வெளியிடப்படும் ‘கட்டை விரல்’,‘சிதறல்;’ நூல்களின் மூலம் கொடுக்கப்படும் பாராட்டு நூலாசிரியருக்குக் கிடைத்த பெரும் மதிப்பு எனக் கூறுகின்றேன். இவரின் இத்தகைய செயற்பாடுகள் புலம்பெயர் தமிழர்களுக்கு உற்சாகம் கொடுப்பனவாகும்’ என ஈஸ்ற்ஹாம் நகரசபை முன்னாள் இணை முதல்வரும் இன்றைய நகரசபை உறுப்பினருமான திரு போல் சத்தியநேசன் தனது உரையில் தெரிவித்தார்.
‘பிரான்சிலிருந்து வருகை தந்து லண்டனில் இந்நூல்கள் வெளியிடப்படுவது பெரும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். கட்டைவிரல் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது. தமிழர்களுடைய கலை கலாசாரத்தைப் பேணிப்பாதுகாப்பதற்கு அக்கட்டைவிரல் உதவுவதாகவும்,மொழியினுடாக அரசியல் திணிப்பென்பது ஒடுக்குமுறையை ஆரம்பித்து மக்களாட்சித் தத்துவத்தின மூலவேரான கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக இக் ‘கட்டை விரலில்’ திவ்வியநாதன் பதித்துள்ளார்’ என சட்ட வல்லுனரும் மனித உரிரமைச் செயற்பாட்டாளருமான திரு. குமாரசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். ‘13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி திவ்வியநாதன் பெற்ற செய்திகளின் அடிப்படையில் தெளிவாகக் கூறி,ஆளும் வர்க்கத்திடமிருந்து உரிமைகளைப் பெறுவது கல்லில் நாருரிப்பது போலாகும் எனக் கூறும் திவ்வியநாதன் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும்,சிறந்த அரசியல் விமர்சகராகவும்,மனித நேயம் கொண்டவராகவும் திகழ்கின்றார்’ என அவர்; மேலும் தெரிவித்தார்.
‘எழுத்தாளர் திவ்வியநாதன் இலங்கை சுதந்திரமடைந்த காலங்களிலிருந்து அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ‘வெளிநாட்டுக் கண்களுக்கு விருந்தாகும் இலங்கை’ என்னும் கட்டுரை மூலம் இலங்கைச் சோசலிச ஜனநாயகக் குடியரசு நாட்டில் தமிழ் பேசும் மக்கள் காலத்திற்குக் காலம் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும்,ஆயுதப் போராட்டம் உருவான செய்திகளையும் இக்கட்டுரைமூலம் தெளிவுபடுத்துகின்றார். ‘கிருஷாந்திப் பூக்கள்’ என்னும் கவிதை தன்னை மிகவும் கவர்ந்திருப்பதென்றும்’ முன்னாள் உயர்நிலைப் பட்டயக்கணக்காளரும் அரசியல் ,இலக்கிய விமர்சகருமான திரு.இராமச்சந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
‘கடவுளுக்குக் கவலை’ என்னும் கவிதை மூலம் தன்னைத்தான் அறிய முயற்சிக்கும் திவ்வியநாதன் தன்னை சமூகம் சார்ந்தவராக ,சமூகத்தின் கண்ணாடியாக விளங்குகின்றார்’ என தமிழ் அகதிகள் (லண்டன்) திரு. குகச்சந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
நூலாசிரியர் திவ்வியநாதன்; தனது ஏற்புரையின் தொடக்க உரையை ஆங்கிலம் - பிரெஞ்சு – தமிழ் மொழிகளில் ஆற்றியதுடன்,சக பேச்சாளர்களின் விமர்சனங்களை நன்றியுடன் ஏற்று ஜுலிய சீசரின் நம்பிக்கைக்குப் பாத்;திரமான புறூட்டஸ் ஜுலிய சீசரை நயவஞ்சமாகக் கொலை செய்த கதையைக் கூறி,இந்நாடகத்தை எழுதிய ஷேக்ஸ்பியர் பிறந்த ஆங்கில மண்ணில் தனது கட்டைவிரல்,சிதறல் ஆகிய படைப்புக்கள் வெளியிடப்படுவதையும், புகழ் பூத்த பிரெஞ்சு எழுத்தாளரான விக்ரர் கியூஹோவைப் பற்றியும் இவரால் எழுதப்பட்ட குறோம்வெல் நாடகத்தையும்; விளக்கிக்கூறி,விக்ரர் கியூஹோ ஷேக்ஸ்பியரை முன்மாதிரியாகக் கொண்டு தனது நாடகத்தைப் படைத்துள்ளதைப் பற்றியும்,கியூஹோவுக்கும்,ஷேக்ஸ்பியருக்கும் உள்ள தொடர்புபோல் தனக்கும் அதாவது பிரெஞ்சு மக்களுக்கும்,ஆங்கில மக்களுக்குமான தொடர்புபோல் தான்; உணர்வதாகக் கூறினார். இருப்பினும்,தன்னுடைய படைப்;புக்களைத் தனது தாய்மொழியாம் தமிழ்மொழியிற் படைத்துள்ளதால் அம்மொழியாலும்,தான் பிறந்த தமிழ்க்கிராமத்தின் சார்பாகவும் அவையோருக்கு சிரந்தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்தார். மேலும்,இவர் தனது ‘அழகு நிறை மாதவியரும்,அவனும்‘ என்னுங் கவிதை மூலம் சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் போன்ற பல பண்டைய இலக்கியப் படைப்புக்களில் உள்வாங்கப்பட்டிருக்கும் இலக்கிய மாந்தர்களை விபரித்து இக்கவிதையை உருவாக்கியிருப்பதாகக் கூறி தனது நன்றியையும் யாவருக்கும் தெரிவித்தார்.
பெரும்போக்குவரவுப் பாதை உயர்நிலைப் பொறியியலாளரும்,ஏசியன் நிறுவனத்தின் சிரேஷ்ட உபதலைவருமான திரு. சபாநாயகம் குகநேசன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வயலின் முன்னணி நட்சத்திரம் திருமதி. கலாநிதி . ஜ்யோற்ஸ்னா சிறீகாந்த சர்மா அவர்களின் வயலின்வாத்திய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வரவேற்புரையையும்,நிகழ்ச்சித்தொகுப்பையும் நவஜோதி ஜோகரட்னம் ஆற்றியிருந்தார். ‘பிரெஞ்சு மொழியிலும்;; ஆளுமை கொண்ட திவ்வியநாதன் பிரெஞ்சு அரசியல் தலைவர்களுடன் நேர்காணல்களைச் செய்திருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும்,தான் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் தனது தந்தை அகஸ்தியரின் இலக்கியப் படைப்புக்களில் திவ்வியநாதன் கொண்டிருந்த ஆர்வத்தைச் சுட்டிக்காட்டியதோடு;,அவரது பல நினைவு விழாக்களில் கலந்து அவரது நூல்களை விமர்ச்சித்து விழாக்களைச் சிறப்பித்தவர் என்பதையும் நன்றியுடன் நினைவிருத்தியிருந்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.