கனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் அழகைப் பாருங்கள்! உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். என் உள்ளங் கவர்ந்த நாடுகளுள் கனடாவுக்கு முதன்மை இடம் உண்டு. அந்த நாட்டில் மாந்தநேயம் கொண்டவர்களைத் திரும்பிய திசையெல்லாம் காணலாம். மாந்தர்கள் மட்டும் என்று இல்லாமல் விலங்குகளையும் நேசித்து ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளை அங்குச் சென்றால் நேரில் பார்க்கலாம். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஆதரவுகாட்டி, அடைக்கலம் தந்து செம்மாந்து வாழ இந்த நாடு வழிவகை செய்ததை ஒவ்வொரு தமிழரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும். அந்த நாட்டின் தலைமை அமைச்சர் தமிழர்களையும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் போற்றுவதில் தன்னிகரற்று விளங்குபவர். தமிழ்மொழி மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் திருவிழாவுக்கு வாழ்த்துரைத்த தலைமை அமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் நன்றிமலர்கள் உரியதாகட்டும்.
பார்க்கவும்: https://www.facebook.com/muelangovan
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.