'வயல் மாதா' நூல் பற்றிய எழுத்தாளர் மெலிஞ்சி முத்தனின் கேள்விகள் சில பற்றிய கேள்விகள்...
" கத்தோலிக்க அடிப்படை வாதத்திற்குள் நின்று இலக்கியம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் எழுத்தாளனுக்கு எதிர் நிலையில் நின்று பேசப்படும் குரல்களாகவே பல குரல்கள் அடிபட்டுப் போவதை முக நூலில் காண்கிறேன். "
இது போன்ற கருத்துகள் உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடமிருந்து வருகையில் எங்களைப் போன்ற நூலை வாசிக்காத எழுத்தாளர்கள் உடனடியாக மதவாதிகளே புத்தக எரிப்புக்குக் காரணமானவர்கள் என்று கருதத் தொடங்குகின்றோம்.
ஆனால் இது பற்றி அன்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்நூலுக்கான எதிர்ப்பை மதத்துடன் பிணைக்க முடியாதுபோல்தான் தெரிகின்றது. ஏனென்றால் அவ்வன்பர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அவரது ஊரவர்கள் பலர் , மதகுரு உட்பட, இந்நூல் வெளிவர உதவியிருக்கின்றார்கள். நூலை வாசிக்காமலேயே உதவியிருக்கின்றார்கள். ஆனால் நூலை வாசித்தபின் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள், ஊரிலுள்ள பெண் ஒருவர் பற்றிய கதை போன்ற விடயங்களே நூலெதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிகின்றது. அவ்வெதிர்ப்பை மதவாதிகளின் எதிர்ப்பாகத் திசை திருப்புவதற்கு மேற்படி உங்கள் கூற்று காரணமாகவிருக்கிறதோ என்று நான் ஐயுறுகின்றேன்.