- மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன் -
மே 4, 2024 அன்று 'டொரோண்டோ'வில் நடந்த யாழ் இந்துக் கல்லூரியின் கனடாச் சங்கத்தின் வருடாந்த இராப்போசன நிகழ்வான 'உண்டாட்டு'வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர் மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த அமரர் கந்தப்பிள்ளை மாஸ்டரின் மகன். எனது பால்யப் பருவத்து நண்பர்களில் ஒருவரான கந்தப்பிள்ளை அநபாயனின் இளைய சகோதரர்.
எழுபதுகளில் நண்பர் அநபாயனைச் சந்திக்கக் குளப்பிட்டிக்குச் செல்கையில் காற்சட்டையுடன் இவரைப் பார்த்திருக்கின்றேன். அதற்குப் பின்னர் இந்நிகழ்வில்தான் பார்த்தேன். இவரைப்பற்றிய குறிப்பில் இவர் தன் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்திருப்பதை அறிய முடிந்தது. சுவாசம் பற்றிய மருத்துவத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். மார்பு மருத்துவராக 24 ஆண்டுகள் சேவையாற்றிய இவர் 18 ஆண்டுகள் மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவராகப் பணியாற்றியிருக்கின்றார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளைப் பராமரிப்புக்கான உள்ளக வழிகாட்டல்களை உருவாக்கப் பங்களித்திருக்கின்றார். லூடன் - டன்ஸ்டபிள் போதனா வைத்தியசாலையில் University College Londonன் மாணவர்களின் கற்கைக்கான உப பீடாதிபதியாகவும் ஆறாண்டுகள் பணியாற்றியிருக்கின்றார்.
- யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச் சங்க வருடாந்த விருந்துபசார நிகழ்வில் மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபனுக்கு விருதினை வழங்கும் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச் சங்கத் தலைவர் குகதாசன். -
இவை தவிர இவர் இலங்கையில் கல்வி, மருத்துவத் துறைகளில் வேலைத்திட்டங்களை 'அபயம்' என்னும் இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனத்தின் மூலம் முன்னெடுத்து வருகின்றார். இந்நிறுவனத்தை நிறுவியவரும் இவரேயென்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. மகிழ்ச்சியைத்தருவது. தன் கல்வியை சமூகப்பங்களிப்புக்காகவும் பாவிக்கும் இவரது செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை. மேலும் மேலும் 'அபயம்' வளர்ச்சியுற்று , உதவி நாடி நிற்கும் அனைவருக்கும் அபயம் தரட்டும். வாழ்த்துகள்.
'அபயம்' அமைப்பு ஆற்றிவரும் சேவைகள்!
நடமாடும் மருத்துவ சேவை, இலவச மருத்துவ சேவை, மனநெருக்கடிக்குள்ளானவர்களுக்கு 24 மணி நேரத் தொலைபேசி ஆலோசனை வழங்கல், தெல்லிப்பளை, ஆனைக்கோட்டை, பருத்தித்துறை, சங்கானை, இயக்கச்சி , திருக்கோவில் எனப் பல இடங்களில் அபயம் அமைப்பு மருத்துவ , கல்வி சேவை நிலையஙகளை உருவாக்கிச் சேவையாற்றி வருகின்றது. மாணவர்கள் , பெண்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியுள்ள அபயம் கர்ப்பிணிப்பெண்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றது. ஆதார, போதனா வைத்தியசாலைகளுக்குப் பல்வேறு உதவிகளை அபயம் வழங்கி வருகின்றது. தெல்லிப்பளை வைத்தியசாலையின் அவசரப்பிரிவுக்குப் பல்வேறு உதவிகள் ,மருத்துவ உபகரணங்கள் அபயம் வழங்கியுள்ளது.
மருத்துவ நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், மருத்துவர்கள், மருத்துவக் கல்வி கற்கும் மாணவர்கள், தாதிமார் ஆகியோருக்கு கற்பித்தல், பயிற்சி வழங்கல் போன்ற சேவைகளை வழங்கல், மற்றும் இவை போன்ற சேவைகளை அபயம் அமைப்பு வழங்கி வருகின்றது.
இலங்கையில் அபயம் நிறுவனம் வழங்கி வரும் பல்வகையான சேவைகள் , திட்டங்கள் பற்றிய விபரங்களை அந்நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம. அதற்கான இணையத்தள முகவரி - https://www.abayam.org/
அபயம அமைப்புடன் தொடர்பு கொள்ள:
Email - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Phone - 00447971486921
Address - 49 Green Lane, Edgware, Middlesex, HA87PZ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* விருது புகைப்படங்கள் - சிறந்த புகைப்படக்கலைஞர் எடுக்கும் புகைப்படங்களின் தரமே தனி. இது புகைப்படக் கலைஞர் Perinpanathan Sinnathambi Kandiah எடுத்த புகைப்படம். நன்றி : https://www.iyah4u.com/