மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் தற்போது 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்' என்றழைக்கப்படுகின்றது. இத்தமிழ் மன்றத்தின் இணைய இணைப்பு - https://tlauom.com
இத்தளத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம், தமிழருவி இதழ்களின் கடந்த கால இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நண்பர் பிறேமச்சந்திரா இதழாசிரியராகவிருந்தபோது வெளியான 1981/1982 ற்கான நுட்பம் இதழைக் காணவில்லை. யாரிடமாவது அவ்விதழ் இருந்தால் அதனை மேற்படி தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியுள்ளது.
மேலும் கலை, இலக்கியத்துறைகளில் இயங்கும் மொறட்டுவுப்பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் அவர்களின் வெளியான நூல்களை, படைப்புகளை பிடிஃப் வடிவங்களில் மேற்படி தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்விதம் செய்வதன் மூலம் அவற்றை ஆவணப்படுத்தலாம்.
தமிழ் இலக்கிய மன்றம் சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகள்.