தொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com/
கலிங்கு

1973ஆம் ஆண்டின் மார்கழி மாதத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலையாக இருந்தது அது. வழக்கம்போல் நேரத்தோடு விழுந்திருந்தது இருள். வெளியை மெல்லிய கரும்புகார் திரையிட்டிருந்தது. அவன் யாழ் பேருந்து நிலையத்தைச் சேர்ந்தவளவில் ஏழு மணியே ஆகியிருந்தும், அது ஓர் அசாதாரண நாளின் தன்மை கொண்டிருப்பதை ஆச்சரியமாக கண்டுகொண்டே அந்த தூர பயண பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அந்தச் சூழல் மேலும் மேலும் திணிந்து வருவதாய் அவனுக்குத் தோன்றியது. மின் விளக்குகள் அன்றைக்கு அதிசயமாய் மங்கலாக எரிந்து கொண்டிருந்ததாயும், பஸ் நிலையம் மட்டுப்பட்ட ஜன நடமாட்டமுள்ளதாயும் பட ஆரம்பித்தது. கடைகளும் அடைபடத் தொடங்கியதைக் கண்டவன் குழப்பத்தோடு காத்திருந்தான். ஏழரை மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டிய பேருந்து ஒன்பது மணியாகியும் வரவில்லை. அலுவலகத்தில் சென்று விசாரிக்கலாமென அந்த வரிசையில் ஒருவர் சத்தமாய் எண்ணியது கேட்டது. சிறிதுநேரத்தில், இனி ஒன்பதரைக் கடைசி
பஸ்தானாமென்ற குரலொன்று எழுந்தது. ‘அதாவது வந்தால் சரி’யென யாரோ சொன்னதில், எழுந்திருந்த சலசலப்பு குறைந்து மறுபடி அமைதி இறுகிவந்தது. ஏன் அந்த இறுக்கம்? ஏன் அந்த அசாதாரண நிலைமை? அவை கொண்டிருக்கும் செய்தி சாதாரணமானதில்லையோ? அவன் மேலும் குழம்பியபடி நின்றிருந்தான். வீட்டில் தனியே தங்கியுள்ள மனைவி, பிள்ளைகளை எண்ணி அவனது மனம் குமைந்துகொண்டிருந்தது. ஒரு மாரியின் இருளும், இருளின் வெளியும் அந்த மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டிராத எவரையுமே பெரும்பாலும் சஞ்சலப்பட வைத்துவிடக் கூடியது. அவனும் அவனது மனைவியும் தென்மராட்சியில் கண்டு வளர்ந்த மாரி இரவுகள் வேறுமாதிரியானவை. கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று ஓடிவர ஊரில் ஒரு குடியேனும் பக்கத்தில் குரலெட்டும் தூரத்திலே இருந்தது. அந்த மண்ணின் வாழ்தகைமை அதிகமும் அதில் இருந்ததை அவன் முன்பும் எண்ணியிருக்கிறான். அவர்கள் அப்போது குடியிருக்கும் அந்த பரந்தன் கால் ஏக்கர் திட்டக் குடியிருப்பு, கூப்பிடு தொலைவுக்கு வெறுமையையும், சூன்யத்தையுமே இருள்வெளியில் கொண்டிருந்தது. அதில் தக அமைந்து வாழத் தொடங்குவதற்கு, அவனுகில்லாவிட்டாலும் அவளுக்கு, இன்னும் சிறிதுகாலம் எடுக்கும்.



மகாபாரதம் என்பது என்ன? வியாசரால் சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்ட ஃ எழுதப்பட்ட ஒரு கதை. அரசுரிமை பற்றி தாயாதிகளிடையே எழுந்த தகராறு கொடிய போராய் விளைந்து பேரழிவில் முடிந்ததை இக்கதை கூறுகிறது. கி.மு 1000 அளவில் இன்றைய தில்லிக்கு அண்மையில் இருந்த அஸ்தினாபுரமே இக்கதைக்குக் களம். பல நூற்றாண்டுகளாக உபகண்டத்தின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கியதாதலின், என்ன தான் வரலாற்றடிப்படை இருந்தாலும், மகாபாரதம் புனைவாகவே எம்மை வந்தடைந்துள்ளது எனக் கொள்வது தவறாகாது.
மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது. 







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









