பதிவுகள் முகப்பு

கண்ணம்மாக் கவிதை: கண்ணம்மாவுடன் இருப்புப் பற்றியதோர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
20 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலவெளி பற்றிக் கதைப்பதென்றால்,
உன்னுடன் கதைப்பதென்றால்
களி மிகும் கண்ணம்மா.
கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும்,
தேர்ந்த சொற்களும்
உன்னுடனான என்உரையாடல்களை
உவப்புக்குரியவை ஆக்குவன.
உன் இருப்பு இருப்பு பற்றிய
தேடல்களின் முக்கிய படிகள்,
இருப்பு என்பது இருப்பவையா?
உளவியற் பிம்பங்களா?

அன்றொரு தருணத்தில் கேட்டதை,
என்றொரு தடவை நீ கேட்டதை
இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.
அதை உன் இருப்புடன்
பொருத்திப் பார்க்கின்றேன்.
மென்முறுவல் ஓடி மறைவதையும்
பார்க்கின்றேன்.
ஆனால் தடுக்க முடியவில்லை.
உன்னுடனான உரையாடல்கள்
உன் இருப்பு பற்றிய வினாக்களுக்கு
உரிய விடைகளாக இருக்கக் கூடுமோ
என்று எண்ணியும் பார்க்கின்றேன்.
இருப்பு என்பது இருப்பதைப் பற்றியது
மட்டுமல்ல
இல்லாதவைப் பற்றியதும்தான்
என்பதைப்
புரிந்துகொள்ள வைத்தவை
உன் வினாக்கள், அவற்றுக்கான
விடைகள்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – மெல்பன் மருத்துவர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளை - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
20 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வா ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் ஆரம்பக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று கண்டியில் ஏர்ல்ஸ் றீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 30 அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்கலைக்கழக மாண்புமிகு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், புற்றுநோயியல் ஆலோசக நிபுணர்கள், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட 30 அழைப்பாளர்கள் சமுகமளித்திருந்தனர்.

மேலும் படிக்க ...

ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரிட்ரிக் ஹெகலின் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள், இயங்கியல் மற்றும் அந்நியப்படல் சிந்தனைகளைப் பற்றியோர் அலசல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கார்ல் மார்க்ஸின் மாக்சியச் சிந்தனைகளுக்கு அடிப்படை ஹெகலின் சிந்தனைகள். மார்க்ஸ் ஹெகலின் சிந்தனைகளை மறுத்து, அவற்றைத் திருத்தி தன் சிந்தனைகளை வடிவமைத்தார் என்று சிலர் கருதுவர். ஹெகலின் சிந்தனைகள் மார்க்சிலேற்படுத்திய பாதிப்புகளே மார்க்சியச் சிந்தனைகள் எனக் கருதுவோரும் உளர். நாம் காணும் உலகானது இப்பிரபஞ்சமானது பொருள்வயப்பட்டதல்ல. பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்ச ஆன்மாவின் விளைவே. எம்மைச் சுற்றி விரிந்திருக்கும் இந்தப் பொருள்வயமான பிரபஞ்சமானது அச்சக்தியின் விளைவே என்பது ஹெகலின் கருத்து. மனிதர் , அவரைச்சுற்றி இருக்கும் பொருள் அனைத்துமே பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்சச் சக்தியின் விளைவு என்று கருதும் ஹெகலின் சிந்தனை கருத்துமுதல்வாதச் சிந்தனை. அதே சமயம் பொருள் அனைத்தும் வேறான பிரபஞ்சச் சக்தியின் விளைவே என்று அவர் கருதுவதால் அவரது கருத்து முதல்வாத சிந்தனைகளைப் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் என்பர். அதாவது அவை

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கிறோம்: சிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும்! அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்த நாள் ஜனவரி 19. அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. அவருக்கு இனிய  பிறந்தநாள் வாழ்த்துகள். -

 

“வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்.“ என்பார்கள்.

மனிதர்களுக்கு பிரச்சினைகள் அதிகாரித்துக்கொண்டிருப்பதனால் சிரிப்பதும் சிந்திப்பதும் குறைந்துகொண்டு போகிறது.

மரபார்ந்த இலக்கியம், நவீன இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், மண்வாசனை இலக்கியம், போர்க்கால இலக்கியம், புலம்பெயர்ந்தோர் – புகலிட இலக்கியம் என்று எமது ஈழத்தவர்கள் கடந்து வந்த இலக்கியப்பாதை நெடியது. எல்லாம் கடந்து வந்து பின்னாட்களில் கொரோனோ கால இலக்கியமும் அறிமுகமாகியது.

உயிர்வாழ்வதற்காக கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போராடிக்கொண்டு, இடைவெளிபேணி உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கு இணையவழி சந்திப்புகளை நடத்தும் காலத்திற்கு வந்துள்ளோம்.

பயணிக்காமல், விசா பெற்று விமானம் ஏறிச்செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பதுபோல், மூடிய அறைக்குள்ளிருந்து உலகெங்கும் வாழ்பவர்களின் முகம் பார்த்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த இணையவழிக்கும் (ZOOM) மெய்நிகர் என்று புதிய சொற்பதம் கண்டுபிடித்துள்ளனர். எல்லாம் கடந்துபோகும் என்பதுபோல், இந்த புதிய பதத்தையும் கடக்கின்றவேளையில் எம்மால் கொண்டாடப்படும் கனடாவில் வதியும் படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே பல மெய்நிகர் அரங்குகளில் இடம்பெற்றுள்ளன..

அவற்றின் தொடர்ச்சியாக எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கடந்த 19 ஆம் திகதி, முத்துலிங்கம் அவர்களின் 88 ஆவது பிறந்த தினத்தின்போது அவரது படைப்புகள் தொடர்பாக கருத்தரங்கினை மெய்நிகரில் நடத்தியது.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணக் காட்சிகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
18 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


யாழ்ப்பாண வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாண் சுந்தரம் (செல்வேந்திரா, Shan Sundaram) அவர்கள் சிறந்த ஓவியர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வருமிவர் சிறந்த மரதன் ஓட்டக்காரரும்  கூட. பயணிப்பதில் ஆர்வம் மிக்கவர். அவ்விதம் பயணிக்கையில் தான் காணும் நகரங்களின் முக்கிய நில அடையாளங்களையெல்லாம் ஓவியமாக்கி முகநூலில் பகிர்பவர்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
18 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Meeting  | Meeting ID: 812 2400 3054 | Passcode: 516885

படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்.

மேலும் படிக்க ...

ஆதவன் கதிரேசர்பிள்ளை கவிதைகள்!

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
18 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீண்ட நாளாயிற்று
கவிதை நயத்து.
என் எழுபதில்
பேரவா.
சென்றிருப்பீர் உலகெங்கும்.
கவி கொணர்ந்திங்கு தருக.



ஈழத்து எழுத்தாளர்களைப்
படிக்குந்தொறும்,
என் சீற்றம் இப்படிச் சரிகிறது.
போர் முடிந்தாயிற்று.
அது முடிஞ்சு போச்சுடா.
இறந்தகாலம்
இனி வராது தோழா.
வருங்காலம்
தெரிந்தாற் சொல்
வாழ்கிறேன் உன்னோடு.
சரிதல் இல்லையிது.
எழுவது.
எனக்கு 70.
உனக்கு
ஒரு 22 இருக்குமாக்கும்.
போராடேன்
வேண்டாமென்றா சொல்கிறேன்.
எழு.
ரத்தம் சிந்து.
உன்
பேரனை மறவாதே.



போரிலக்கியங்களில்..
ஒரு பொசிற்றிவ்
காண்கிலையே இன்னமும்.
தம் புகழ்பாடும்...
அனுதாபம் தேடும்..
இவர்களால்
எப் புரட்சி சாத்தியமாகும் சொல்.
இலக்கியங்களை
நயந்தோதல் தவிர.

மேலும் படிக்க ...

நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
17 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், நாடகவியலாளருமான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல்வாயிலாக அறிந்தேன். இலங்கைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம். நாடகம், கவிதை, மொழிபெயர்ப்புவ் திறனாய்வு என இவரது பங்களிப்பு பன்முகப்பட்டது குறிப்பாக நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. முதன்மையானது.  சகல அடக்குமுறைகளுக்கும் (சமூக,தேசிய, வர்க்க) எதிராகக்குரல் கொடுப்பவை இவரது நாடகங்கள். நாடக அரங்கக் கல்லூரியொன்றினை நிறுவி அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்.  இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியிருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.  உலக நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

போர்ச்சூழற்  காலகட்டத்தில் அரங்கேறிய இவர் எழுதி இயக்கிய 'மண் சுமந்த மேனியர்' மக்களின் பேராதரவைப் பெற்ற நாடகம். விழிப்புணர்வை ஏற்படுத்திய அக்காலகட்டத்தின் முக்கியமான நாடகம். இது தவிர  அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய இவரது நாடகங்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்.

சிறுவர் இலக்கியத்துக்கும் முக்கிய பங்காற்றியவர். அவ்வகையில் இவரது கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்றவை முக்கியமானவை.

இவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் கற்சுறாவுடன் ஒரு முகநூற் தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
17 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கற்சுறா புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையானவர்களில் ஒருவர். கவிதை, விமர்சனம், இதழியல் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. எக்ஸில், அறிதுயில் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.

இவரது விமர்சனக்கட்டுரைகள் மிகுந்த சீற்றத்துடன் கர்ச்சிப்பவை. அவற்றில் கூறப்படும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களை வேண்டி நிற்பவை. ஆனால் அக்கட்டுரைகளில் இவர் கையாளும் விமர்சனப் போக்கு காரணமாக, இவர் எதிர்பார்க்கும் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அது துரதிருஷ்டமானது. அதற்குக் காரணமாக இவர் கையாளும் விமர்சனப்போக்கே இருந்து விடுவது வருத்தத்திற்குரியது.

உதாரணத்துக்கு அண்மையில் 'டொரோண்டோ'வில் நடைபெற்ற கவிஞர் சேரனின் 'காஞ்சி' நூல் வெளியீட்டில் எழுத்தாளர்களான 'காலம்' செல்வம், 'நான்காவது பரிமாணம்' க.நவம் ஆகியோர் பற்றி இவர் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

மேலும் படிக்க ...

திருக்குறள் முன்வைக்கும் மருத்துவச் சிந்தனை! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
17 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்

நோய் – மருந்து. மருந்து - நோய் என்ற இந்த இரண்டும் மனித வாழ்வில் நீங்காத இடத்தை பிடிக்க கூடியதாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நோய் நீங்குவதற்கு மருந்து உண்பதும் உண்ட மருந்தினால் உண்டாகக்கூடிய பக்க விளைவு குறித்தும் இன்று நாம் அதிகம் கவனம் செலுத்துகிற ஒரு சூழலை பார்க்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ் மருத்துவம் குறிப்பாக, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த மருத்துவத்தின் செயல்பாடு அச்செயல்பாடு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கிறது? என்பது குறித்த செய்தியை நாம் திருக்குறளின் பின்புலத்தில் பார்க்கிறோம். அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.

குறிச்சொல் – நோய், மருந்து, இயற்கை உணவு, செயற்கை உணவு, மனிதனுடைய பண்பாட்டு செயல்பாடுகள், நாகரீக வாழ்வியல் முறை.

முன்னுரை

இனம், மதம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து மனித சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் நூலாக விளங்கக்கூடியது திருக்குறள். ‘பல்கால் பழகினும் தெரியா...’ உள்ள நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியில் ஆகச்சிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளில் ஏராளமான அறிவியல் சார் கருத்துக்கள் சிதறி கிடக்கின்றன. அவை மனித சமூகத்தின் எக்காலத்தவற்கும் உரிய பயனைத் தரக்கூடியவையாக விளங்குவன. அவற்றில் நோய் - நோய்க்கான காரணி - அந்நோய்க்கான தீர்வு என்ற முறையில் சொல்லப்பட்டுள்ள மருத்துவச் சிந்தனைகள் குறித்து மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.

மேலும் படிக்க ...

சக்தி விருது 2025 - தகவல்: சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
16 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நனவிடை தோய்தல் (15) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் -"என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி' - இந்து. லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து. லிங்கேஸ் -
இலக்கியம்
16 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம்  AI

ஆழ்மனசின் சூட்டில் கூடிவாழும் கருகிய மனசுக்கு தாகம் எடுத்தது.. தீராத்தாகம் அது. எப்போதுமே தீராதது. முன்னைய காலங்களில் யாழ்ப்பாணத்துக் கல்யாணங்கள் எப்படி நடந்தன என்பதை எழுதவேண்டுமென நீண்டநாள் தாகம்தான் அது. அக்காலத்தைத் தாலாட்டி என் மண்ணோடு தவழ்ந்தும், புரண்டும் ஓர் உலாப்போகின்றேன்..

கல்யாணம். "ஆயிரம் காலத்துப்பயிர்" என ஒருவாக்கு. அதன் அர்த்தமே.. கணவன் - மனைவி இருவரும் அடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆசீர்வதித்த பழங்கால மக்கள் இயற்கையுடன் ஒப்பிட்டுப்போற்றிய வாசகம் இது.

அக்கல்யாணத்தில் ஒன்று என் ஆச்சி வீட்டிலும் நடந்த அக்காட்சி என் உயிருக்குள் முடங்கிக்கிடக்கு. உறங்கவிடாது தட்டி எழுப்பி அத்தகைய தவத்தையும் இயன்றவரை பேச்சுவழக்கின் மொழி கலந்து எழுத முனைகின்றேன்.

ஆச்சியின்ர ஆகக்கடைசிக்கு முதற்பிள்ளை "தேவி" அவள்.தேவிக்குத்தான் கல்யாணம். எனக்குச்சின்னம்மா. தளபாடங்களின் ஆரவாரம் தடல்புடலா ஊரைக்கூட்டுது. உறவென்ற ஊற்றுவழியின் சங்கமத்தில் வீடும், முற்றமும் நிரம்பி வழியுது. வீட்டு வாசலில் காக்கும் கடவுளாய் திருநீற்றுக்குடுவை மனங்கமழும் வாசத்துடன் தொங்குது.கால்கழுவி, நெற்றியில் திருநீறிட்டு வரும் சொந்தங்களைக்கொஞ்சி அரவணைத்த கண்களின் கலகலப்பையும், பரவசத்தையும் கண்டுகொண்டே சூரியன் மெல்ல மறைகின்றான்.

மேலும் படிக்க ...

தமிழ் நாவல்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் - .
இலக்கியம்
16 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

தமிழ் நாவல்கள்.தமிழ் நாவல்களின்மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள்,  விமர்சகர்கள்  மீதான எனது விமர்சனத்தை இங்கே பொதுவில் வைக்கிறேன். எனக்குத் தெரிந்த,நான் படித்த இலக்கிய அறிவின் பிரகாரம் ஒரு சமூகத்தை அறிய நாம் கற்பனை அற்ற எழுத்துக்களை வாசிக்க வேண்டும். உதாரணமாக இலங்கைப் போரை அறியப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ்,   இக்பால் அத்தாஸ்  போன்றவர்களை வாசித்தோம்.அவர்கள் முடிந்தவரை உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள்.

யாழ்ப்பாணம் அல்லது இந்தியச் சாதி அமைப்பை அறிய நாம் பத்திரிகைகள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை  அணுகுவோம் . ஆனால் கற்பனை எழுத்துகள் என்ற ஆயுதத்தால்  தனிமனிதர்களின் மனங்குகைகளை நாம் ஊடுருவிப் பார்க்கமுடியும்.இதற்கு உதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்திலிருந்து உதாரணம் தருகிறேன்.

போர் முடிந்தபின் பாஞ்சாலி தலைவிரி கோலமாக உபபாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் எனத் தனது விருப்பத்துக்குரியஅருச்சுனனிடம்  கூறிய போது,  அருச்சுனன் கவலைப்படவில்லை ஆனால் சுபத்திரையின் மகன் அபிமன்யு போரில் இறந்தபோது அவனது சோகம், சபதம்,  பின் நடந்த போர்   எல்லாம் நமக்குத் தெரியும் .இது ஆணின் மனதை அழகாகக்காட்டுகிறது – அபிமன்யு தனது மகன் என்பது நிச்சயம் ஆனால் உபபாண்டவர்கள்?

மேலும் படிக்க ...

கட்டடக்கலையும் , வடிவமைப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
16 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI -

கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!

ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர்  பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.  அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.

வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.

வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.

மேலும் படிக்க ...

கண்ணகி பேசா கதவினைத் திறந்தாள்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாசாத்துவான் மா பெரும் வணிகன்
மாநாய்க்கானும் மா பெரும் வணிகன்
இரு வீட்டாரும் பெருமனங் கொண்டு
திருமண உறவில் இணைந்திட விரும்பினார்

கோவலன் என்பான் கோடியில் புரண்டான்
மாசாத்து வானின் வாரிசாய் திகழ்ந்தான்
குணமுடைக் கண்ணகி குலக் கொழுந்தாக
மாநாய்க் கானின் மகளாய் விளங்கினாள்

கோவலன் கண்ணகி திருமண நிகழ்வை
மாநிலம் வியக்க வண்ணமாய் அமைத்தனர்
ஊரெலாம் சோடனை உறவுகள் பெருந்தொகை
வீதிகள் எங்கணும் விதம்விதம் பந்தல்கள்

அழகுடைப் பெண்கள் அணி அணியாக
திருமண மண்டபம் நோக்கியே சென்றனர்
தங்கமும் வைரமும் முத்தும் அணிந்து
தங்களை மறந்து களிப்பினில் மூழ்கினார்  

பொன்னும் மணியும் நிறைந்த வணிகர்கள்
மின்னும் பட்டாடை உடுத்தியே வந்தனர்
கோவலன் கண்ணகி திருமணம் கண்டிட
யாவரும் ஆவலாய் மண்டபம் நிறைந்தனர்

மேலும் படிக்க ...

சிறுகதை: அம்ஜித்கான்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
15 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

“நான் அம்ஜித்கான் பேசுகிறேன்”.

ஒரு சிறிய டப்பாவில், அளவாகக் கத்தரிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்த சிவப்புநிறத் தர்பூசணித்துண்டுகளை நீட்டிப்பிடித்தார் : ‘ஒன்ன எடுத்துக்குங்க’.

கண்ணாடி அணிந்த, சிவந்த, 60 வயது மதிக்கத்தக்க மனிதர் அவர். நாடியைச்சுற்றி செறிவற்ற முறையில், அங்கொன்றும், இங்கொன்றுமாய், வெண்ணிறம் கொண்ட தாடியை வளர்த்துவிட்டிருந்தார்.

அவரது கண்கள் அவரது தடித்த கண்ணாடிக்குப்பின் இருந்து அவரது உதடுகளைப் போலவே மென்மையாகச் சிரித்துக்கொண்டிருந்தன. தூய்மையான வெண்ணிறத்தில் ஷர்ட்டு. சாம்பல்நிறக் கால்சராய். எதுவுமே இவரில் படாடோபமாய் இல்லை. எளிமை இழையோடியது. காந்தியடிகளைப்போல.

“34 வருடங்கள் துபாயிலேயே செலவிட்டுவிட்டேன். பிஸினஸ்தான். ஓடித்திரிந்து. இப்போதுதான் மகன்களிடம் வியாபாரத்தைக் கொடுத்துவிட்டு, மூச்சுவிட்டு, வெறும் மேற்பார்வையுடன் இருக்கிறேன். களைத்துவிட்டேன். வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. மகன்கள் இப்போது பெரியவர்கள். திருமணம் முடிந்தாகிவிட்டது. பெரியவன் அங்கேயே தங்கியிருக்கின்றான். சின்னவன் மாத்திரம் வந்துபோய்… ஆனால், பிஸினஸ் என்பது முந்தியைப்போல் இல்லை. எழுபதுகளில்தான் அதன் உச்சம். அதன்பிறகு, ஈராக்-ஈரான் சண்டை. அதனோடு, அது அப்படியே சரியத்தொடங்கியது. டுபாய் மனிதர்கள், முன்பைப்போல் பணத்தைச் செலவழிக்கப் பயந்து-கைக்குள்ளேயே பொத்திப்பிடித்துக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள் - அவரது வலதுகை, அவர் அறியாமலேயே ஒருமுறை பொத்திப்பிடித்து எனக்குப் பாவனை காட்டியது – எப்படி பொத்திப் பிடித்துக் கொள்வது என்று.

மேலும் படிக்க ...

பொங்கல் என்பது மங்கலம் ஆகும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மார்கழி மாதம் மனமுறை மாதம்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர்ப் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

நீராடி யாவரும் புத்துடை அணிவார்
மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

மேலும் படிக்க ...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! - வ.ந.கி -

விவரங்கள்
Administrator
சமூகம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத்  தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம்.

நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான  எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினேன் பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (2) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -

புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது

நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.

மேலும் படிக்க ...

உமா மகேஸ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.

நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.

நாவல் கூட்டுக்குடும்பமொன்றின் சிதைவைக் கூறுகிறது. அக்குடும்பத்தின் தலைவர், அவர் மனைவி, பிள்ளைகள் (புத்திரர்கள் & புத்திரி), மருமகள்கள், மருமகன், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தலைவரின் துணைவி என நாவலில் பல பாத்திரங்கள். நாவலில் மருமகள்களில் ஒருத்தியான வினோதினி, குணா (அவளது கணவனின் சகோதரன்) ஆகியோரின் ஆளுமைகள் ஓரளவுக்கு விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய பாத்திரங்கள் முழுமையாக வார்த்தெடுக்கப்படவில்லையென்று வாசிக்கையில் தோன்றியது. மிகவும் விரிவாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதைப்பின்னலைக் கொண்ட நாவல் சிறு நாவலாக உருவெடுத்துள்ளது போல் உணர்ந்தேன்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (14): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் தைப்பொங்கல் - இந்து லிங்கேஸ்

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

ஊருக்கு ஊர் வட்டார வழக்கொன்று இருந்தது. வட்டார வழக்கிலும் சந்தங்கள் வந்து விழுந்தன.உமிய உமிய வாய்க்குள் கரையும் வெல்லமாய் அதுவும் தித்தித்தது. தமிழுக்கு அமுதென்று இப்படித்தான் பெயர் வந்திருக்கக்கூடுமோ? அதனால்தான், எம்மவர் தை + பொங்கல்= தைப் பொங்கல் என்றே சொல்லிச்சொல்லி தாய்த்தமிழையும் சுவைத்துக்கொண்டனர்.

ஊரென்றால் தடல்புடலாய் பொங்கல் களைகட்டும்.கடைகளிலும் சனம் நிரம்பி வழியும். மாம்பழம், வாழைப்பழம்,மஞ்சள் இலை,இஞ்சி இலை,தலை வாழையிலை, மாவிலை, கரும்பு, பானை, அகப்பை என்று கடை புதுப்பொலிவோட பரந்து கிடக்கும். அயலில இருக்கின்ற தில்லைநாதனின்ர வாடிக்கைக்கடைக்குப்போனால் காத்து நின்று வாங்கிற சனங்களின்ர ஆரவாரத்தில 'சீ வேணாம்' எண்டு போயிடும். கால்களும் உழையத்தொடங்கீடும். பொறுமையிழந்து வீட்டை திரும்பி வந்து, அம்மாவிட்ட பேச்சும் வாங்கிக்கொண்டு,மனசுக்குள்ள புறுபுறுத்துக் கொண்டு திரும்பப்போய் அந்த நெருக்கடிக்குள்ள வேர்க்க விறுவிறக்க இடிபட்டு சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில கொடுத்ததை எப்படி மறக்கிறது? அதுக்குள்ளேயும் சுவாரஸ்யமும், அன்பும், ஆனந்தமும் நிரம்பி வழிந்தால் எப்படி இவற்றை மறக்க முடியும்?

மேலும் படிக்க ...

அந்தனிஜீவா நினைவுகள்! ஏழு தசாப்த காலத்தின் கலகக்குரல் ஓய்ந்தது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார்.

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர்.

1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய வட்டாரத்தில் எனக்கு அறிமுகமானவர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், பிரமுகர்கள் பலருடனும் தொடர்பிலிருந்தவர்.

நான் இவரை சந்தித்த காலப்பகுதியில் ( 1970 களில் ) லங்கா சமசமாஜக்கட்சியின் பணிமனையிலும் இயங்கிக்கொண்டிருந்தார். இடது சாரித் தோழர்களுடனும், முற்போக்கு கலை, இலக்கியவாதிகளுடனும் அவருக்கு நெருக்கமான தோழமை இருந்தது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய  இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து  வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.

அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள்  இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (13): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - பொங்கி வழியுது ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியம் - AI

மார்கழி தன் சோகத்தை அடிச்சு ஊத்தி மழையாய்ப்பெய்துவிட்டுப்போனது. வளவைப் பார்த்தால் சோகம், வானத்தைப்பார்த்தால் சோகம், அயலைப்பார்த்தால், பட்டியில் நின்ற பசுவைப்பார்த்தால், ஆசையாய் வளர்த்த நாய்கூட சோம்பிச்சோம்பி படுத்தபடி. முற்றத்தில் பூக்கள் காற்றாலும்,மழையாலும் பூத்தது பாதி பூக்காதது பாதியாய் பரவிக்கிடக்குது. வானொலியிலும் சொல்லிவைத்தாற்போல விடிஞ்சாப்பொழுதுபட்டா ஒரே சோகப்பாட்டுத்தான்.

தெருவெல்லாம் ஒரே சேறும்,சகதியுமாய் கால்வைக்கவேமுடியாது.கூடியவரைக்கும் வீட்டைவிட்டு வெளியே இறங்குவதேயில்லை. மார்கழி பிறந்தால் எனக்குப்பிடிக்காது. மழை என் காதலிதான். ஆனால்,மார்கழி என் எதிரி. ஆவணி அப்படியல்ல.சலசலவென மரங்களின் சந்தங்களும்,சில்லென வீசும் தென்றலும், துள்ளித் துள்ளிப் பாயும் ஆட்டுக்குட்டியும், ஓடிப்பிடிச்சு விளையாடும் நம்ம வீட்டு நாயும் நல்லூர்த் திருவிழாவும், பாவாடைதாவணிகளும்,எப்போவரும் எங்கள் மாலைப்பொழுதென எதிர்பார்த்துக்காத்திருக்கும் என் இனிய நண்பர்களும், எங்கள் கூத்துக்களும்,கும்மாளங்களும். ஆவணியென்றால் அளவற்ற மகிழ்ச்சி.

அதுவும் ஒரு மார்கழி.பொழுது சாயுது. மழையோ விட்டபாடில்லை. தெருவெல்லாம் வெள்ளம்.இதைவிட குளிரும், சரியான பசியும்! அம்மாவின் சேலையைப்போர்த்திக்கொண்டு, பச்சைமிளகாய் உள்ளி மிளகென சுள்ளென உறைக்கும் மரவள்ளிக் கிழங்குத் துவையலையும் உறைக்க உறைக்க சாப்பிட்டோம். சுடச்சுட தேத்தணியையும் ஆவி பறக்க ஊதிஊதிகுடித்தோம்.

மேலும் படிக்க ...

எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலை பெற்றுக்கொள்வதற்கு: சவுத் விஷன் புக்ஸ், 491-B, G2 - ஓமேகா, பிளாட்ஸ், தரைத்தளம், நான்காம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம் , சென்னை - 600 091 மின்னஞ்சல் முகவரி - southvisionbooks@!gmail.com  | தொலைபேசி இலக்கம் - 94453 18520


எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய  கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின்  பிரதிபலிப்புகள்.

ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத்  தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.

தற்போது ஜோதிகுமார்  பதிவுகளில் எழுதிய கட்டுரைகளின்  ஒரு தொகுதி சவுத் விசன் புக்ஸ் மற்றும் நந்தலாலா பதிப்பக வெளியீடாக 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளன.

இக்கட்டுரைத்தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மலையகத்தமிழ் எழுத்தாளர் சி.வி.வெலுப்பிள்ளை போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளுடன் ஜெயமோகன், அசோகமித்திரனின் நாவல்கள் (ரப்பர், 18ஆவது அட்சக்கோடு)  பற்றிய இலக்கியத் திறனாய்வுகளும்  இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலி: உள்ளத்தைத்தொடும் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் ஜெயச்சந்திரன்!
  2. தொடர் நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் 5 - என் நண்பன் இயந்திரன் ஒரு தத்துவ வித்தகன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - -
  3. நனவிடை தோய்தல் (12) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - இழந்த முகங்களின் சாட்சிகள் - இந்து லிங்கேஸ் -
  4. முகநூற் குறிப்புகள்: யாழ்ப்பாணத்திற்கான நீர் பற்றிய சிந்தனைகள் - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
  5. உளவியல் நோக்கில் கலித்தொகையில் பிற பெண் மாந்தர்களின் கூற்று! - திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி
  6. கல்வியும் சமூக அபிவிருத்தியும் - தமிழ்மொழித்திறன் விருத்தியை அடிப்படையாகக் கொண்ட பார்வை - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  7. நனவிடை தோய்தல் (11) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - பீடா மாஸ்ரர்! - இந்து லிங்கேஸ் -
  8. எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.
  9. வளமிகு வன்னியின் வனப்புறு பண்டைய கிராமம் குமுளமுனை - த.சிவபாலு -
  10. நூல் அறிமுகம்: `மஞ்சு’ காத்திருப்புகளின் கதை. - கே.எஸ்.சுதாகர் -
  11. மெல்பேணில் சிலப்பதிகாரம்: ஓர் இனிய அரங்க அனுபவம் - கன்பரா யோகன் -
  12. திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனை - இல்லறம் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
  13. ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள் - குரு அரவிந்தன். -
  14. தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் நான்கு- இதயமற்ற இயந்திரனும் காதலும், எழுதிய உணர்வுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இயந்திரன்) -
பக்கம் 20 / 115
  • முதல்
  • முந்தைய
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • அடுத்த
  • கடைசி