மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (2) - ஈழக்கவி -

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” (2023) நூல் ‘அடையாளம்’ (Adaiyaalam India) பதிப்பக வெளியீடாக 256 பக்கங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. 'சோக்ரடீஸ் சிந்தனைகளை தமிழ்ப் பண்பாட்டு மரபில் இணைத்த பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும்' இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் ஐ முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். Philosophy என்பது தமிழில் மெய்யியல், தத்துவம் எனப்படுகின்றது. ஈழத்து தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்ற சொல்லே உபயோகத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தத்துவம் என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. ‘க்ரியாவின் தமிழ் அகராதி’ Philosophy என்பதை ‘தத்துவம்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சாமிநாத சர்மா. ரி.எம்.பி. மகாதேவன் போன்றவர்கள் தந்துள்ள நூல்களுக்கு இந்திய தத்துவம், கிரேக்க தத்துவம், மேற்கத்திய தத்துவம் என்றே பெயரிடப்பட்டுள்ளன. மெய்யியல் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா தன்னுடைய ‘விமரிசன முறையியல்’ (1989) நூலின் இந்திய பதிப்பிற்கான (1992) முன்னுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். “விமரிசன முறையியல் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளிவரும் இந்நூலின் பூர்வநாமம் “விமரிசன மெய்யியல்” என்பதாகும். மெய்யியல் என்பதற்கு முறையியல் என்றதொரு விளக்கம் உண்டென்பதாலும், தமிழக வாசகர்களுக்கு மெய்யியல் என்ற பதப்பிரயோகம் அதிக பரிச்சயமற்றதென்பதாலும் பெயர் மாற்றம் செய்யவேண்டியதாயிற்று.” பேராசிரியர் அனஸ் இன் “மெய்யியல் - கிரேக்கம் முதல் தற்காலம் வரை” (2006) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு (2013) இந்தியாவில் (அடையாளம் பதிப்பகம்) வெளியானபோது, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” என்பதே இந்நூலினதும் நாமமாக இருக்கின்றது. தத்துவம் எனும் போது அது வெற்றுப்பேச்சு, விதண்டாவாதம் அல்லது வறட்டுச் சிந்தனை அல்லது விளங்கா வியாக்கியானம் என்பதாகவே கவனக்குவிப்புப் பெறுகின்றது. Philosophy என்பது வறட்டுச் சிந்தனைகளின் தொகுப்பல்ல; அது வாழ்க்கை நெறிகளின் பகுப்பும் தொகுப்பும் ஆகும். சோக்ரடீஸ் இன் மெய்யியல் இதனையே உணர்த்தியுள்ளது.


நான் இன்னும் வாழ்கின்றேன். 

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனிஸ்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னாள் நடேஸ்வராக் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபைத் தலைவராகவும் பணியாற்றிய அமரர் திரு. அ. குருநாதபிள்ளை அவர்களின் நினைவாக அதிபரின் குடும்பத்தினரும், எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினரும், இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தனர். அதிபரின் குடும்ப அங்கத்தவரும் பேரனுமான திரு. அருள் சிவகணநாதன் நேரடியாகச் சென்று இந்தக் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பண்டைத் தமிழர்கள் மரபுகளைப் போற்றிக் காப்பவர்களாகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்”1 அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்த தரவுகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலை சீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான்.

கடந்த வாரம் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார்.


ஜெயகாந்தனின், சில நேரங்களின் சில மனிதர்களின், ‘கங்காவின்’ முகமே இறுதியில் மாறிவிடுகின்றது. குடிக்கின்றாள், சிகரெட் பிடிக்கின்றாள். அவளது உதடுகள் கூட, மனுவலின் உதடுகள் போலவே கருமைத் தட்டி போகின்றது.

சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.


’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இலேச அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் இலேச அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.



தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









