என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe)  அவர்கள். என்னை அவருக்குத்  தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர். அவர் அண்மையில் மறைந்த தகவலினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சரத் ஆனந்த அவர்கள். அவர் இழப்பால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

ஜி.ஜி.சரத் ஆனந்த (Nadigamvila Ggs Ananda)  தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த சிங்களப் பதிவின் கூகுளின் சிங்கள மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளேன். [கூகுள் சிங்கள மொழிபெயர்ப்பு]

ஏப்ரல் 14 அன்று எங்கள் நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிஞரான கலாநிதி சிரினிமல் கல்துசிங்க காலமானார் என்ற துக்கச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. இந்த சிறந்த அறிஞரின் தனித்துவமான வழிகாட்டுதல் பற்றிய குறிப்பை திருமதி சந்தராசி சுதுசிங்க தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள இதுவே போதுமானது. அதைப் பார்த்த தருணத்தில், நான் ஒருபோதும் சந்திக்காத, பேசாத இந்த சிறந்த அறிஞர் எனக்கு எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்று என் மனதிற்கு வந்தது.

தற்போது கனடாவில் வசிக்கும் பிரபல இலங்கை எழுத்தாளர் வ.ந.கிரிதரன் (கிரிதரன் நவரத்தினம்) அவர்களின் "நல்லூர் இராஜதானி நகர அமைப்பு" என்ற ஆய்வுப் படைப்பை 2018 இல் "நல்லூர் இராச்சிய நகரத் திட்டம்" என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டேன். இதில், வடக்கின் வரலாறு தொடர்பான அத்தகைய படைப்பை சிங்களத்தில் வெளியிடுவது மொழிபெயர்ப்பாளருக்கும் வெளியீட்டாளருக்கும் ஒரு சவாலாக இருந்தது. அப்போது, மூத்த இலக்கியவாதி திருமதி கத்யானா அமரசிங்கவின் ஒருங்கிணைப்பில், அந்த சிறந்த அறிஞரான கலாநிதி சிரினிமல் லக்துசிங்கவைக்  (Dr. Sirinimal Lakdusinghe)  இந்த நூலுக்கு ஒரு முன்னுரையை எழுதச் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் அறியாத ஒரு எழுத்தாளரின் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் படைப்பின் உள்ளடக்கத்தைப் படித்து அவர் எழுதித் தந்த அந்த அர்த்தமுள்ள முன்னுரை எங்களுக்கு உண்மையில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை இங்கே வெளியிடுகிறேன். இன்று தனது இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் அந்த சிறந்த அறிஞரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். [ மூலம்: Nadigamvila Ggs Ananda]


අප රටේ පුරාවිද්‍යාව හා ඉතිහාසය පිළිබඳ ප්‍රමාණික විද්වතකු වූ ආචාර්ය සිරිනිමල් ලක්දුසිංහ මහතා අපෙන් සදහට ම සමුගත් බව අප්‍රේල් 14 දින අසන්නට ලැබුණු කනගාටුදායක ම පුවතකි. මේ මහා ප්‍රාඥයාගේ අපූර්ව මාර්ගෝපදේශකත්වය පිළිබඳ සටහනක් සඳරැසී සුදුසිංහ මහත්මිය මුහුණු පොතට එක්කර තිබුණි. එතුමා කෙබඳු පුද්ගලයෙක් ද යන්න අවබෝධ කර ගැනීමට එය ද ප්‍රමාණවත් ය. එය දුටු මොහොතේ ම සිතට නැගුණේ මා හට කිසිදා සම්මුඛ නොවුණු, කතාබහ කර නොමැති මේ මහා ප්‍රාඥයා මට කෙතරම් නම් ආලෝකයක් ලබා දී තිබේ ද යන්නයි.

දැනට කැනඩාවේ පදිංචි ව සිටින ප්‍රකට ශ්‍රී ලාංකේය ලේඛකයකු වන වී. එන්. ගිරිදරන් (ගිරිදරන් නවරත්නම්) මහතාගේ “නල්ලූර් රාජධානි නගර අමෛප්පු“ නම් පර්යේෂණ කෘතිය 2018 වසරේ දී මම “ නල්ලූර් රාජධානියේ නගර සැලැස්ම“ නමින් සිංහලට නගා  ප්‍රකාශයට පත් කිරීමට කටයුතු කළෙමි. එහි දී උතුරේ ඉතිහාසය හා  සම්බන්ධ එවන් කෘතියක් සිංහලෙන් පළ කිරීම පරිවර්තකට මෙන් ම ප්‍රකාශකට ද යම් අභියෝගයක් විය. එම අවස්ථාවේ ප්‍රවීණ සාහිත්‍යවේදිනී කත්‍යානා අමරසිංහ මහත්මියගේ සම්බන්ධීකරණය  මත ඒ මහා ප්‍රාඥයා - ආචාර්ය සිරිනිමල් ලක්දුසිංහ මහතා ලවා මෙම කෘතිය සඳහා පෙරවදනක් ලියවා ගැනීමට අපට අවස්ථාව ලැබුණි. තමන් නො හඳුනන ලේඛකයෙකු හා පරිවර්තකයකුගේ කෘතියක  අන්තර්ගතය කියවා   එතුමා ලියා දුන් එම අර්ථවත් පෙරවදන සැබවින් ම අපට ආලෝකයක් ගෙන දුන්නේ ය. එතුමන්ට උපහාර පිණිස එය මෙහි පළකරමි.

අද දින අවසන් ගමන් යන ඒ මහා ප්‍රාඥයාට නිවන් සුව පතමි.


வாசிப்பும், யோசிப்பும்: நவீனக்  கவிஞர்களும், மரபுக் கவிதையும்! 

எந்தத்துறையில் படிப்பவர்களும் முதலில் அந்தந்தத் துறையின் ஆரம்ப வரலாற்றைப்படிப்பார்கள். பின்னரே அதன் தற்கால விடயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் நம் கவிஞர்களுக்கு மட்டும் இந்தக் கவலை இல்லை. இவர்கள் கவிதையின் வரலாறு பற்றிக் கவலைப்படுவதில்லை. மரபுக்கவிதை பற்றி குறைந்தது அறிந்து கொள்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ முயற்சி செய்வதில்லை.

மரபுச் சூத்திரங்களுக்குள் சிக்கிச் சுழல்வதற்கு நானும் விரும்புவதில்லை. நவீனத்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் மரபுகளை உடைத்தெறிந்தவை. ஆனால், அதற்காக நான் மரபுக்கவிதை பற்றி அறியத்  தேவையில்லை என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

கவிஞர்கள் மரபுக் கவிதை பற்றி அறிந்திருப்பது உண்மையில் ஆரோக்கியமான விளைவையே தரும். அவர்கள்தம்  கவிதைகளில்  , அவற்றில் பாவிக்கப்படும் மொழியில் அவர்களின் படைப்பாற்றலை உயர்த்த அது வழி  வகுக்கும் என்பது என் திடமான எண்ணம். கூடவே பழந்தமிழ் இலக்கியங்களை உணர்ந்து , புரிந்து , சுவைத்திடவும் அது வழி வகுக்கும்.

இன்னுமொரு காரணம் நவகாலக் கவிஞர்கள் மரபுக் கவிதை பக்கம் தலை காட்டாமல் இருப்பதற்கு என்னவென்றால் அது பற்றிய எளிய நூல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. அவற்றையும் தேடித்தான் கண்டறியும் நிலை.  மரபுக் கவிதை பற்றிய விளக்கங்களை எவருக்கும் புரிய வைக்கும் நூல்கள் அவசியம்.

இதனை உணர்ந்து எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதியிருக்கும் நூல்தான் அண்மையில் அவர் வெளியிட்ட  'மரபுக் கவிதை எழுதலாம் வாருங்கள்'

அவரே வடிவமைத்து , சாமந்தி பதிப்பகம் மூலம் வெளியிட்ட நூல்.

மரபுக் கவிதையை எவரும் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள , எளிமையாக எழுதப்பட்ட நூல்  நூலின் நோக்கத்தை நிறைவு செய்கின்றது.

நன்கு வடிவமைக்கப்பட்ட நூலின் உள்ளடக்கத்தின் தட்டச்சில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். தலைப்புகள்,  உப தலைப்புகள், உட் பிரிவுகள், உதாரணங்களை வேறு படுத்திப் பார்ப்பதில் சிரமங்களைத்  தரும் வகையில் தட்டச்சு இருப்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இது எதிர்காலப்  பதிப்புகளில் களையப்பட வேண்டியது அவசியம்.

மரபுக் கவிதையை , அதன் பிரிவுகளை இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருக்கின்றார் அகணி சுரேஷ்.  ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா,  விருத்தம் போன்ற பிரிவுகளில் கவிதைகளை எழுதுவது எப்படி என்பதை இலகுவாக விபரிக்கின்றது நூல்.  

சீர், அசை , தொடை,  அசை பிரித்துப்பார்த்தல்   போன்றவற்றை எவரும் எளிதாகப்  புரிந்து கொள்ளும் வகையில் , உதாரணங்களுடன் விளக்கியிருக்கின்றார் ஆசிரியர்.

நல்லதொரு நூலைத் தந்ததற்காக அகணி சுரேஷுக்கு வாழ்த்துகள். நம் காலத்துக் கவிஞர்களுக்கு மட்டுமல்ல எவருக்கும்  கவிதை பற்றிய புரிதலை அதிகரிக்க நிச்சயம் உதவும் நூல். அதற்காக அகணி சுரேஸுக்கு வாழ்த்துகள்.
 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்