காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனிஸ்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னாள் நடேஸ்வராக் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபைத் தலைவராகவும் பணியாற்றிய அமரர் திரு. அ. குருநாதபிள்ளை அவர்களின் நினைவாக அதிபரின் குடும்பத்தினரும், எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினரும், இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தனர். அதிபரின் குடும்ப அங்கத்தவரும் பேரனுமான திரு. அருள் சிவகணநாதன் நேரடியாகச் சென்று இந்தக் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
போர்ச் சூழல் காரணமாக காங்கேசந்துறைப் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருந்தனர். அதனால் பாடசாலையும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து தற்போது மீண்டும் பழைய இடமான காங்கேசந்துறை கல்லூரி வீதியில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. கல்லூரியின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு போதிய வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய கனிஸ்ட பாடசாலை அதிபர் திருமதி. வி. சுதர்சன் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. அப்போது 88 மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் அடங்கிய சுமார் 100 பொதிகள் வழங்கப்பட்டன. சென்ற வருடமும் இது போன்று உபகரணங்கள் வழங்கப்பட்டன. நடேஸ்வராக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.