இலக்கியப்பூக்கள் 264 - முல்லை அமுதன் -
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பா.நூருல்லாஹ்(மதுரை) (சிறுகதை:வேண்டாத காரணம்..),
கவிஞர்.கவிஜி (கவிதை:இறைவேளை..),
கவிஞர்.பாத்திமா முஜாமளா முபாரக்,
கவிஞர்.ராகினி முருகேசன்(கவிதை:பிரசவிக்கும் வலி..),
எழுத்தாளர்.முபீன் சாதிகா (குறுங்கதை:மயில் பெண்),
எழுத்தாளர்.திருமலை.சுந்தா(குறுங்கதை: பொறுமையும் சினமும்..),
கவிஞர்.வே.சுகந்தி(தமிழகம்)(கவிதை:தென்றலே தூது போ)
கவிஞர்.விக்ரமாதித்தன் (எப்படியும் இருந்துகொண்டே இரு.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'),
எழுத்தாளர். இரா.சம்பந்தன்(கனடா) (கட்டுரை:ஓளவை காட்டும் பெண்கள்),
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும். உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (எம் பி 3 ஒலிவடிவில்)ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கல் நண்பர்களின் படைப்புக்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.




சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது . 

தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும். 

அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.




சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி, “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..? “ எனக்கேட்டார். “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத் தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ? “ எனக்கேட்டேன். “ இது குதர்க்க வாதம் “ என்றார் மனைவி.





ஒரு எழுத்தாளரை பெயராலும் பெற்ற புகழாலும் அறிந்தபின் அவரது படைப்பினை வாசிப்பதைவிட , படைப்பினை வாசித்தபின் உருவாகும் ரசனையால் படைப்பாளி யார் என தேடி அறிதலே அப்படைப்புக்கு மகிமை தரும். இதனை அண்மையில் உணர்த்திய நாவல் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் 'குஞ்சரம் ஊர்ந்தோர் ' . இந்நாவலை வாசிக்கும் வரை எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது எந்தப் படைப்பையும் வாசித்ததும் இல்லை. ஏன் பெயரைக் கூட அறிந்தது இல்லை. இந் நாவலின் வடிவில் எழுத்தால் மட்டுமே அறிமுகமானவர். ஆனால் வாசிக்க கையில் எடுத்தது முதல் இறுதிவரை சோர்வில்லாது வாசிக்க வைக்கும் இயல்பான கதையோட்டம்,எளிமையான நடை, வேஷங்கள் அற்ற நிஜமான மனிதர்கள் எழுத்தாளர் யாரென்று தேட வைத்தன.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









