தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இக்கருத்தினை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.
நூலை வாசிக்க - திரவிடத்தாய்
தமிழம் என்னும் சொல்லிலிருந்தே திரவிடம் என்னும் சொல் தோன்றியது. அதுவே பின்னர் திராவிடம் என்று காலப்போக்கில் மாறியது. இது தேவநேயப்பாவாணரின் கருத்து. இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பிறந்து , பரம்பரை பரம்பரையாகத் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கும் எவருமே தமிழர்தாம். அவர்களைத் தெலுங்கர், மலையாளி என்று பிரித்துப்பார்ப்பது தமிழகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கும். இதனைத்தான் சீனா போன்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. உண்மையில் திராவிடக் கட்சிகள் புரட்சிகர அமைப்புகள் இல்லாவிட்டாலும், அவை சுயமரியாதை, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, மதச்சார்பற்ற தன்மை போன்றவற்றுக்காகக் குரல் கொடுப்பவை,.அவற்றில் ஆரோக்கியமான, புரட்சிகரமான அம்சங்கள் உள்ளன.
நூல் - திரவிடத்தாய்