அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2022 ) வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை மாலை 3-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் மெய்நிகரில் ( Zoom Meeting) நடைபெறும்.
இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம் சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை சமர்ப்பிப்பார். கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை நடைபெறவிருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நிதியத்தின் பரிபாலன சபை அன்புடன் அழைக்கின்றது.
Click the below link to join Zoom Meeting (Computer or Phone – Video & Audio)
Dial on phone (Audio only) - +61 2 8015 6011 - +61 3 7018 2005 - +61 7 3185 3730 - +61 8 6119 3900
Meeting ID: 826 5158 3863
Passcode: 388274
மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
https://csefund.org.au/membership
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.