பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.
சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ள உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனைடையுங்கள்.
மேலும் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள நூல்களின் அடிப்படையில் சிறுகதை குறித்த விரிவான ஆய்வு இருக்கும்.
1. அன்பளிப்பு - கு அழகிரிசாமி -
2.மதினிமார் கதை - கோணங்கி
3. மூங்கில் குருத்து - திலீப்குமார்
4. பிறந்தநாள் - வைக்கம் முகமது பஷீர்
மேலுள்ள நான்கு கதைகளையும் படித்துவிட்டு கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
உரையாடல்: எழுத்தாளர் திரு. லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களுடன்
தலைப்பு: சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
நாள்: டிசம்பர் 3, 2022
அமெரிக்க நேரம்: சனிக்கிழமை, காலை 10:30 மணி(கிழக்கு நேரம்)
இலங்கை/இந்திய நேரம்: இரவு 9.00 மணி
சூம் நேரலை - Zoom Live
Meeting ID: 893 5830 7330
Passcode: 577073
அனைவரும் வருக!!! வருக!!!
பேரவையின் இலக்கியக்குழு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.