- சுகாதாகுமாரி  (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020)   கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.  கவிஞர். சமூக, அரசியல் & சூழலிலற் செயற்பாட்டாளர். பெண்ணிய இயக்கம்,  அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியவர். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவிருந்தவர். -


கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022  

கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.

கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள்.  தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி....  அவ்வளவுதான்

கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக, விசிறிகளாக,  பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் . இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது . ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம்.  உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன.  இது போன்ற நிறைய படங்கள் படைப்புகள்.
 
அமைதிப் பள்ளத்தாக்கில்  அணையொன்றை 197இல் நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி.

சுகாதாகுமாரி என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.  கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.

அவர் கவி , போராளி என்றிருந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு அவர் டீச்சர். ஆசிரியையாகப் பணி புரிந்தவர் என்பதால்  அப்படித்தான் அவர்கள் அன்பாக அழைக்கிறார்கள்.

கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று தொடர்ந்து முழங்கியவர். மலையாளக் கவிஞர். சூழழியல் களப்போராளி.  பெண்ணுரிமைப்போராளி. அபயா என்ற ஆதரவிழந்தோர் சேவை அமைப்பின் முன்னோடி (திக்கற்ற மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகலிடம் தரும் அபயா என்றொரு அமைப்பு). எனப் பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி எனக்கு அறிமுகமானதே அவர் நடத்திய அமைதிப்பள்ளத்தாக்குப் போராட்டம் மூலம்தான் அந்தப்போராட்டம் தொடங்கியபோது அவர் குறிப்பிட்ட வரிகள்

“கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே   தாமதமாகிவிட்டது. “

1970 இல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதிப் பள்ளத்தாக்கில்  அணையொன்றை நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி, உலகின் பல சூழற் போராட்ட அமைப்புகளில் இந்தியாவின் முதற் சூழல் செயற்பாட்டு இயக்கம் இதுவாகும். இயற்கை எழில் கொஞ்சும் இம் மலைப்பள்ளத்தாக்குப் பிரதேசம் அட்டப்படி அருகில் இருப்பதாகும் நீளவால்க் குரங்குகள் போன்ற  பல வன விலங்குகள் இருக்குமிடமாகும்.. இந்தியாவின் முதல் சூழல் செயற்பாட்டு இயக்கம் அது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

அங்கு வறண்ட பூமியை வளமாக்கி கிருஷ்ணவனம் என்ற பெயரில் பூங்காவாக்கியவர். சூழலியல் அறிவியல் விசயங்களைப்பற்றி அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள் ஆகியோரைவிட எழுத்தாளர்கள் அக்கறை கொண்டு அவர்கள் மொழியில், உள்ளூர் மக்களிடம் மேம்பட்ட பரப்புரையை செய்ய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கள் என் சுற்றுச்சூழல் படைப்புகளுக்கு ஆதாரமாக இருந்தன.

சுற்றுச்சூழலுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுகாதாகுமாரி. அதற்காக ‘பிரக்ருதி சமரக்‌ஷனா’ என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார். அமைதிப் பள்ளத்தாக்கில்  அணையொன்றை நிறுவுவதற்கு அரசு எடுத்த முயற்சிகளை இப்போராட்டங்கள் தடுத்து நிறுத்தி வெற்றி கண்டது..இதைத் தொடர்ந்து பூயம்குட்டி, ஜீரகப்பாறை, அச்சன்கோயில், பொன்முடி, மாவூர், விளாப்பில்சாலை போன்ற இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிராக சுகுதகுமாரியும் இந்த அமைப்பினரும் நடத்தியப் போராட்டங்கள் வெற்றி கண்டன.

ஆரம்பத்தில் பெண் உணர்வுகளைப்பற்றி அதிகம் எழுத ஆரம்பித்தார். ‘முத்துச்சிப்பிகள்’, ‘பத்திரப்பூக்கள்’, ‘கிருஷ்ண கவிதைகள்’, ‘ஸ்வப்னபூமி’ என்று இவருடைய சில கவிதைத் தொகுப்புகள் ‘கேரள சாகித்ய அகாடமி விருது’, ‘கேந்திர சாகித்ய அகாடமி விருது’, ‘ஒடக்குழல் விருது’, ‘எழுத்தச்சன் விருது’  பெற்றவர். சுற்றுச்சூழலுக்காகப் இவருக்குக் கிடைத்த விருதுகளும் ஏராளம்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க ஏற்படுத்திய ‘அபயா’  என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப்பார்த்தேன். அந்த அலுவலகத்தில் நண்பர் வனமாலிகை பணி புரிந்து வந்தார். அவரிடம் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது அவர் வீட்டிற்குக்கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. இன்னொருமுறை சந்திக்கலாம் என்றார். அப்போது மதியம் சாப்பாட்டு நேரம் . அப்போது இயலவில்லை.

இன்னொரு முறை நண்பர் வனமாலிகையைச் சந்திக்க அபயா அலுவலகம் சென்றபோது சந்தித்து அறிமுகப்படுத்தினேன். அப்போது நண்பர் வனமாலிகை  உடல் நலக்குறைவால் அலுவலகம் வராமல் இருந்தார்,என் நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் அதில் என் சாயத்திரை  ( சாயம்புரண்ட திர  என்ற தலைப்பில் சிந்தா பதிப்பகம் வெளியிட்டிருப்பதைச் சொன்னபோது  மகிழ்ந்தார். சுற்றுச்சூழல் சார்ந்த நாவல் என்பதைச் சொல்லி விளக்கினேன். மகிச்சியடைந்தார்.

மலையாளத்தின் புதிய கவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகாதாகுமாரி. 1962ல் வெளிவந்த புதுமுளகள் [புதியகுருத்துகள்] என்னும்   நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதிய கவிஞர்களில் சுகாதாகுமாரி மட்டுமே பெண். பின்னர் கவிஞராக .  . பெரும்புகழ் பெற்றார். என் கனவு இதழின் சார்பாக தற்கால மலையாளக்கவிதைகள் குறித்து ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தேன். ஜெயமோகன் மலையாளக்கவிதைகளைத் தேர்வு செய்தும் மொழிபெயர்ப்பு செய்தும் உதவினார். தயாரித்தார். பின்னர் கனவு, காவ்யா ஆகியவை அதைத் தனியாக நூலாக  வெளியிட்டன

கேரள மக்களால் ‘சுகந்தா டீச்சர்’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கவிஞர் சுகாதாகுமாரி எழுத்தாளர் மத்தியில் சுற்றுச்சூழல் போராளி என்ற ஒளிவட்டத்துடனே திகழ்ந்தார். 86 வயதான அவருக்கு  நிமோனியா பிரச்னை தீவிரமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். உடன் கொரோனா   பாதிப்பும் .

மரத்தினு ஸ்துதி எந்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை போராட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிரபலமாக மக்களிடம் சென்றடைந்தது. அவரின் இந்தக்கீழ்க்கண்ட பாடல் பிரசித்தி பெற்றது

             -  கவிஞர் சுகாதாகுமாரி -

இரவுமழை
வெறுமே விம்மியும் சிரித்தும்
விசும்பியும் நிறுத்தாமல்
முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும்
குனிந்து அமர்ந்திருக்கும்
இளம் பித்தியைப்போல
இரவுமழை
மெல்ல இந்த மருத்துவமனைக்குள்
ஒரு நீண்ட விம்மலென
பெருகிவந்து
சாளரவிரிசலின் வழியாக
குளிர்ந்த கைவிரல் நீட்டி
என்னை தொடும்
கரிய இரவின்
துயர் நிறைந்த மகள்

இரவுமழை
நோவின் முனகல்கள்
அதிர்வுகள்
கூரிய ஓசைகள்.
திடீரென்று ஓர் அன்னையின்
அலறல்.
நடுங்கி செவிகளை மூடி
நோய்ப்படுக்கையில் உருண்டு
நான் விசும்பும்போது
இந்த பேரிருளினூடாக
ஆறுதல் வார்த்தைகளுடன்
வந்தணையும்
பிரியத்திற்குரிய எவரோ போல.
யாரோ சொன்னார்கள்
வெட்டி அகற்றலாம்
சீர்கெட்ட ஓர் உறுப்பை.
சீர்கெட்ட இந்த
பாவம் நெஞ்சத்தை என்ன செய்ய?

இரவுமழை
முன்பு என் இனிய இரவுகளில் என்னை
சிரிக்கவைத்த
மெய்சிலிர்க்கவைத்த
வெண்ணிலவைவிட அன்பை அளித்து
உறங்கவைத்த அன்றைய காதல்சாட்ச

இரவுமழை
இன்று என் நோய்ப்படுக்கையில்
துயிலற்ற இரவுகளில்
இருளில்
தனிமையில்
அழவும் மறந்து
நான் உழலும்போது
சிலையென உறையும்போது
உடனிருக்கும்
துயரம்நிறைந்த சாட்சி

இரவுமழை!
இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்
உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன்
உன் கருணையும்
அடக்கிக்கொண்ட சீற்றமும்
இருளில் உன் வருகையும்
தனிமையின் விம்மல்களும்
விடியும்போது முகம்துடைத்து
திரும்பிச்செல்லும் உன் அவசரமும்
ரகசியப்புன்னகையும் பாவனைகளும்
எனக்குத்தெரியும்
எப்படி அறிகிறேன் என்கிறாயா
தோழி
நானும் உன்னைப்போலத்தான்.
இரவுமழைபோலத்தான்.

[ *  எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூவிலிருந்து ]

சுகுதகுமாரி என்ற கவி இந்தப் பள்ளதத்தாக்கு வாழ்க்கையோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதாலேயே அடிக்கடி அங்கு சென்று வருகிறேனோ என்று நினைக்கத்  தோன்றியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்