கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்கள் முறையே டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர் 8.
அகஸ்தியரைத் தவிர முதலிருவரையும் நான் சந்தித்திருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியை , மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வருடாந்த இதழான 'நுட்பம்' இதழின் ஆசிரியராக நானிருந்தபோது அதற்காக ஆக்கம் வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் அவரது காரியாலயத்தில் சந்தித்திருக்கின்றேன். கட்டுரை தருவதாகக் கூறியவர் கூறிய நாளில் கட்டுரையைத் தந்தார். சஞ்சிகை வெளியானபோது அது பற்றிய சுருக்கமான விமர்சனக் கடிதத்தையும் அனுப்பி வைத்தார். மறக்க முடியாது. அக்கடிதத்தை இன்றுவரை பேணி வருகின்றேன்.
எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களைப் பல தடவைகள் வெள்ளவத்தையிலிருந்த அவரது புத்தகக்கடையில் சந்தித்துள்ளேன். ஆனால் ஒருபோதுமே எழுத்தாளனாக என்னை அறிமுகப்படுத்தி அவருடன் உரையாடியதில்லை. குமரன் சஞ்சிகை, மற்றும் ஏனைய பத்திரிகை , நூல்களை வாங்குவதற்காக மட்டுமே சென்றிருக்கின்றேன். பின்னர் அவரே 1998இல் எனது நாவல்களின் தொகுப்பான 'மண்ணின் குரல்' தொகுப்பினை தமிழகத்திலிருந்த அவரது குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார்.
எழுத்தாளர் எஸ்,.அகஸ்தியரை அவரது எழுத்துகளூடு மட்டுமே சந்தித்துள்ளேன். அவரது மகள் நவஜோதி யோகரட்னம் அவர்கள் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அகஸ்தியரின் ஆக்கங்களை அவரது நினைவு தினங்களில் மறக்காமல் அனுப்புவார்.
இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய தூண்களில் இவர்களும் அடங்குவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு இவர்களது பங்களிப்புகளுக்காக நினைவு கூரப்பட வேண்டியவர்கள். நினைவு கூர்வோம்.
முகநூல் எதிர்வினைகள்
Sivanesaselvan Arumugam - When I took over Virakesary Agasthiar came to my office and had a long lively chat he knows that I was a student of Kailas he knows my stand After the Riots we had the Progressive Tamil Writers Union meeting I made the preliminary address That discussions I can’t forget anyway gone are the days you are making me to recall the past
Yoharaja Alvar - என்றும் நினைவில்…
Polikai Jeya- நினைப்போம்
Barathi Nadarasa - தமிழ் இலக்கியபரப்பில் இவர்களுக்குப் பின் மிளிர்ந்தவர்கள் மிகவும் அரிது. இவர்களின் காலம் தமிழ் இலக்கியப்பரப்புின் பொற்காலமாகும். நீங்காத நினைவுகளாக தமிழ் கூறும் நல்லுலகில் நீடு வாழ்வார்கள்.
Hemachandra Pathirana - எனது பெரு மதிப்புக்குரியவர்கள். தமிழ் மொழிக்கும் இலக்கியத்துறைக்கும் அளப்பரிய பணியாற்றியவர்கள்
Yogananthan Kanakasooriyam - பெரும் மதிப்பிற்குரிய ஈழத்து ஆளுமைகள் அதிலும் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சிறந்த ஆய்வாளர் அவருடைய எழுத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஈழத்தின் அடையாளங்கள்இவர்களின் புகழ் நிலைத்திருக்கும்.
Sivalingam Arumugam - சமூக அக்கறைகொண்ட இவ் ஆளுமைகளின் தமிழ் இலக்கியப் பங்களிப்பு விதந்துரைக்கப்படவேண்டியவை….!! நினைவுகூர்வோம்?!!!
Srithayalan Thayalan - Very impressive!
Vadakovay Varatha Rajan - இருவரை எட்ட இருந்து பார்த்துள்ளேன் . இதில் ஒருவருடனும் உரையாடியதில்லை . உங்களுக்கு அந்த கொடுப்பனவு இருந்திருக்கிறது .