தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!
மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.
அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட காலத்து எண்ணம். அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

கொங்கு பகுதி இலக்கிய இதழ்களின் ஆசிரியர்களை ஓவியங்களாக கொண்ட ஓவிய கண்காட்சி திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது.
கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை எங்களால் இங்கே அவதானிக்க முடிகிறது.
தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம்; திருத்தலாம்; மேம்படுத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் தாராளமாகக் கருத்துத் தெரிவிக்கலாம். அத்தகு இத்திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த விக்கிமூலத்திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் பக்கங்கள் மொத்தம் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கம் விரல்விட்டு எண்ணி விடும் அளவே உள்ளன. அவற்றுள் ஐங்குறுநூறு தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் 5 மட்டுமே உள்ளன. எது அந்தத் தரவுகளின் மூலம் என்று அறியமுடியவில்லை. இருப்பினும் ஐங்குறுநூறு சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தர இயலும். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக அமையும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள ஐங்குறுநூறு சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.
ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது. மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள். இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.
‘தனிமையின் நிழல்’, ‘நட்ராஜ் மகராஜ்’ ஆகிய நாவல்களுக்குப் பிறகு மூன்றாவதாக வெளிவந்திருக்கிற தேவிபாரதியின் அளபெடைத் தலைப்புக்கொண்ட நாவல் ‘நீர்வழிப்படூஉம்’. நாவலின் மதிப்பீட்டைச் செய்வதற்கு முன்பாக ‘நீர்வழிப்படூஉம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்துகொள்வது அதன் புரிதலை இலகுவாக்கும்படிக்கான ஒரு ஊடுவழியினைத் திறந்துவிடுமென நம்பலாம். ஏனெனில் முதன்மையாய் ஒரு கதையைச் சொல்கிற நாவலாகவன்றி, உறவு மனங்களின் இறுகும் கனிவுகொள்ளும் தன்மையின் மூலத்தைப் பேசவந்த நாவலாக இது இருப்பதில், தலைப்பின் பொருளை ஒரு மர்மம்போல் இறுதிவரை காப்பாற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை. கார்ட்டுகளெல்லாம் விரித்துப்போட்டு விளையாடும் ஒரு விளையாட்டாக இதை மாற்றிக்கொள்ளலாம்.
அவர்களது ஒடுங்கிய சாப்பாட்டு மேசையில் மூவரும் நெருக்கமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

தலைப்பிறை கண்டார் அன்பர்;

‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.




விமானம் தரையிறங்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வியாபிக்க, ஓங்கி உயர்ந்து நின்றிருந்த கட்டங்களையும் ஊர்ந்துகொண்டிருந்த வாகனங்களையும் யன்னல் கண்ணாடிக்குள்ளால் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாமதி.
உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









